ஆன்லைனில் ரேசன் பொருள்..கார் தரும் காசில் நெல் கொள்முதல் நிலையம் கட்டுங்க! அரசுக்கு செளமியா கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: த.வெ.க அரசு டாஸ்மாக் கடையில் மதுவை எளிதாக வாங்குவதற்கு ஆன்லைனில் வசதி ஏற்படுத்தி உள்ளது. அது போல ரேஷன் கடையில் பொதுமக்கள் பொருட்களை எளிதாக வாங்குவதற்கு ஆன்லைன் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என தருமபுரி எம்.எல்.ஏ.வும், பாமக சட்டமன்ற குழு தலைவருமான செளமியா அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

பாமக சட்டமன்ற குழு தலைவரும் தர்மபுரி எம்.எல்.ஏ.மான செளமியா அன்புமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்," ஒரு சமோசா விப்பவர் கூட அவரது பொருளுக்கு அவர்தான் விலை வைப்பார் ஆனால் விவசாயிக்கு அவர்களை நிர்ணயம் செய்ய முடிவதில்லை.

Sowmya Anbumani Ration Paddy

கேரளாவில் விலை நிர்ணயம் செய்யும் ஆணையம் உள்ளது. அவர்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை கூடி அங்கு விளையும் பொருட்களுக்கான விலையை நிர்ணயம் செய்கிறார்கள். அதுபோல தமிழ்நாட்டிலும் விளையும் பொருட்களுக்கு விலையை நிர்ணயம் செய்ய ஒரு ஆணையம் வேண்டும்.

செளமியா அன்புமணி

அரிசியை சேமித்து வைப்பதற்கு இன்னும் குடோன்கள் அதிகப்படுத்த வேண்டும். பலா முந்திரி போன்ற பொருட்கள் இருக்கின்றது. அவற்றை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மடகாஸ்கரில் இருந்து நாம் முந்திரி பருப்பை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்கின்றோம். நம்ம ஊரிலேயே தரமான முந்திரிப் பருப்பு விளைகிறது. அவற்றை விற்பதற்கு ஏற்ற சந்தையை உருவாக்க வேண்டும்.

ஆன்லைன் ரேஷன்

பலாவிலிருந்து 200 வகையான மதிப்பு கூட்டு பொருட்களை உருவாக்கிய விற்பனை செய்ய முடியும். அதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தர்மபுரியில் அதிகமான சிறுதானியங்கள் விளைகிறது அவற்றை விற்பதற்கு தேவையான சந்தையை உருவாக்க வேண்டும். ரேஷன் கடைகளில் பொதுமக்கள் சென்று பார்க்கும்போது பாமாயில் அரிசி போன்ற பொருட்களை வைத்துக்கொண்டே சில கடைகளில் இல்லை என்று சொல்லிவிடுகிறார்கள்.

இலவச மின்சாரம்

எனவே கியூ ஆர் கோடு முறையில் ஆன்லைனிலேயே அவர்கள் ஆர்டர் செய்து விட்டு அங்கே சென்று வாங்குவதுபோல ஏற்பாடுகள் செய்ய வேண்டும். டாஸ்மாக் துறையில் இதுபோன்று ஏற்பாடு செய்திருக்கிறீர்கள் அது போன்று ரேஷன் கடைக்கு கொண்டு வாருங்கள். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தும் அந்த அறிவிப்பு மின்சாரத் துறையில் வரவில்லை. எதற்கு விவசாயிகள் இலவசம் மின்சாரத்தை கேட்கிறார்கள்? .

விவசாயிகள்

எங்குமே தண்ணீர் இப்போது இல்லை. அவர்கள் நம்பி இருப்பது நிலத்தடி நீரை மட்டும் தான்.. உடனே தண்ணீர் போட்டால் தண்ணி வருவதில்லை. மோட்டார் போட்டு தான் தண்ணீர் எடுக்கிறார்கள். அதற்காகத்தான் இலவச மின்சாரம் கேட்கிறார்கள். வெரும் 50 ஆயிரம் பேருக்கு தான் இலவச மின்சாரம் என்றால் மீதி பேருக்கு என்ன ஆனது? விவசாயிகள் எப்படி இதை ஈடுகட்ட போகிறார்கள் என்பது தெரியவில்லை.

நெல் கொள்முதல் நிலையம்

ஒவ்வொரு வருடமும் மின்தடை நேரத்தில் தமிழக அரசு மின்சார கட்டணத்தை ஏற்றுகிறார்கள். நிச்சயமாக மின்சாரத் துறைக்கு வருமானம் வருகிறது. எங்களிடம் ஏற்கனவே கார் உள்ளது. அதனால் எங்களுக்கு கார் வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளோம். அதற்கு மாற்றறாக வாகனப் பராமரிப்பு தொகையில் எங்கள் தொகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டிக் கொடுத்தால் நன்றாக இருக்கும்" என்றார் செளமியா அன்புமணி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+