ஜாக்டோ ஜியோ ஸ்டிரைக்... தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Jactto-Geo Protest: ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம்- வீடியோ

    தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    TET தேர்ச்சி முன்னுரிமை அடிப்படையில் 950 பேர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு உத்தரவிற்கு பிறகு முதன்மை கல்வி அலுவலகம் தற்காலிக பணி ஆணை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Temporary teacher Job; More than 4000 applications in Dharmapuri district

    இன்று காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்ப பள்ளிக்கல்வி இயக்குனர் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தற்காலிக ஆசிரியர் பணிக்கு அயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர்.

    இதற்கிடையே, தேர்வு காலத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் மட்டும் தங்களது போராட்டத்தை கல்வியாண்டு முடியும் வரை தள்ளிவைக்க முடியுமா? என்பது குறித்து இன்று மதியம் ஆசிரியர்கள் சங்கங்கள் தெரிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அதே நேரம், ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை ஒவ்வொரு ஆண்டும் கிடப்பில் போடுவதை ஏற்க முடியாது என குறிப்பிட்ட நீதிபதி கிருபாகரன், இதுதொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+