வணக்கம்டா மாப்ள.. காட்டு யானையை கை தூக்கி கும்பிட்டு விரட்ட போன நபர்! வனத்துறை வார்னிங்
தருமபுரி: சாலையோரத்தில் தனியாக நின்ற காட்டு யானையை விரட்டி காட்டுகிறேன் பார் என பயணி ஒருவர் யானையிடம் சேட்டை செய்துள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
காடுகள் உருவாக்கத்தில் யானைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு காடு அது வெறும் பொட்டலா இருந்தால் கூட அந்த வழியாக யானை சென்றால் அடுத்த பருவமழைக்குள் யானை சென்ற வழித்தடத்தில் ஏராளமான மரங்கள் முளைக்க தொடங்கிவிடும். அந்த அளவுக்கு காடுகள் உருவாக்கத்தில் யானைகளின் பங்கு இருக்கிறது. காட்டில் உள்ள மரங்களில் அனைத்து மரங்களின் விதைகளும் பூமியில் விழுந்தவுடன் முளைத்துவிடாது. யானை போன்ற உயிரினங்கள் இந்த விதையை வயிற்றில் போட்டு பின்னர் சாணம் வழியாக கீழே போட்டால்தான் அந்த விதைகள் மரமாக முளைக்கும். இதற்கு முதல் காரணம் உரம்தான்.

சில விதைகளுக்கு உரம் தேவையில்லை. ஆனால் எல்லா விதைகளும் உரம் கிடைத்தால் செழிப்பாக வளர்ந்துவிடும். இப்படியாக காட்டு பழங்களை தின்றுவிட்டு அந்த விதைகளை சாணம் மூலம் வெளியேற்றும்போது சாணம் உரமாக மாறி விதைகளை செழித்து வளர செய்கிறது. தமிழ் சமூகத்தில் சங்க காலத்தில் காட்டில் வாழ்ந்த பழங்குடியினர் தங்கள் உடல்களில் யானையின் சாணத்தை தடவிக்கொண்டு வேட்டைக்கு செல்வார்கள். ஏனெனில் வேட்டைக்கு செல்லும் தங்களை புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் தாக்கிவிடாமல் இருக்க இந்த சாணம் உதவும்.
இந்த சாணத்திலிருந்து வரும் மணம் வேட்டை விலங்குகளுக்கு ஓர் எச்சரிக்கை போல. இந்த வழியில் யானைகள் வருகிறது எனவே குறிக்கிட வேண்டாம் என்று அவைகள் விலகி சென்றுவிடும். அதேபோல யானைகளை தெய்வமாக மாற்றியது பக்தி இயலக்கிய காலக்கட்டத்தில்தான். யானை குழந்தை மாதிரி என்றும், அது தெய்வத்தின் சாயல் என்றும் பக்தி இலக்கியங்கள் சொல்லத்தொடங்கின. இந்த சிந்தனை இன்றும் மக்களுக்கு இருக்கிறது. யானை என்றால் அது சைஸில்தான் பெருசு மற்றபடி குழந்தை மாதிரி கொஞ்சி விளையாடும் என்றெல்லாம் மக்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் யானையை பார்த்தால் முடிந்த அளவுக்கு விலகி இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கின்றனர். அதுவும் குறிப்பாக காட்டு யானைகளை பார்த்தால் 30 மீட்டர் தொலைவு வரை விலகி இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஏனெனில் காட்டு யானையின் எச்சரிக்கை தொலைவு 30 மீட்டர்தான். அதை தாண்டி அருகில் நெருங்கும்போது தூக்கி போட்டு மிதித்துவிடும். அதிலும் குறிப்பாக ஒற்றை யானையிடம் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
ஏனெினல், இந்த ஒற்றை யானைகள்தான் கொம்பன் யானைகள் என்று அழைக்கப்படும். பெரும்பாலும் யானைகள் கூட்டமாகதான் வாழும். அப்படி இருக்கையில் மஸ்து காலத்தில் இந்த யானையை கூட்டதின் தலைமையான யானையான வயது முதிர்ந்த பெண் யானை கட்டுப்படுத்த முயற்சிக்கும். இந்த முயற்சி பலனித்தால் கூட்டத்துடன் இருக்கலாம். இல்லையெனில் கூட்டத்தைவிட்டு ஒதுக்கி வைக்கப்படும். இப்படி ஒதுக்கி வைக்கப்பட்ட யானைதான் கொம்பன் யானை என்று சொல்வார்கள். இப்படி ஆக்ரோஷமாக தருமபுரியின் வனப்பகுதியையொட்டியுள்ள சாலையில் ஒற்றை யானை ஒன்று திரிந்துக்கொண்டிருந்ததுள்ளது. இந்த யானையிடம்தான் ஒருவர் வம்பு செய்துள்ளார்.
யானையை விரட்டுவதாக கூறி கையெடுத்து கும்பிட்டுள்ளார். யானை இரண்டடி பின்னால் நகர்ந்திருக்கிறது. உடனே அந்த யானை நோக்கி இவர் முன்னேறி கைகளை உயர்த்தி கும்பிடு போட்டிருக்கிறார். இந்த சம்பவம் வீடியோவாக பதிவாகியுள்ளது. பின்னர் அவர் கேமிரா பக்கம் திரும்பி இருக்கையில் அந்த யானை தாக்க முன்னேறி வந்து எச்சரித்துள்ளது. அந்த நபர் இதனை பார்க்கவில்லை. எனவே மீண்டும் யானைக்கு ஒரு வணக்கத்தை வைத்துவிட்டு திரும்பி வந்திருக்கிறார். இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். ஏனெனில் யானை என்பது ஒரு காட்டு உயிரினம். இதை நாம்தான் கடவுளாகவும், குழந்தையாகவும் பெயர் வைத்து அடையாளப்படுத்துகிறோம் என்று விளக்கமளித்துள்ளனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications