ஒட்டன்சத்திரத்தில் டாக்டர் தம்பதியை கட்டி போட்டு 280 பவுன் நகை கொள்ளை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் டாக்டர் தம்பதியை கட்டி போட்டு 280 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
Recommended Video
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனை நடத்தி வரும் பிரபல மருத்துவர் சக்திவேல் (52) . இவர் நாகனம்பட்டி புறவழிச் சாலையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் மருத்துவர் சக்திவேல் அவருடைய மனைவி ராணி, சக்திவேலின் தகப்பனார் சென்னியப்பன் மற்றும் தாயார் தேவநாயகம் உள்ளிட்ட நான்கு நபர்களை கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.

கட்டிப்போட்டு மேற்படி வீட்டிலிருந்த 280 பவுன் தங்க நகைகளையும் ரூ 25 லட்சம் ரொக்கத்தையும் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த கார் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துச் சென்றனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர். கைரேகை நிபுணர்கள் அங்கிருந்த கொள்ளையர்களின் தடயங்களை சேகரித்தனர்.

இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் அவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். தம்பதியை கட்டி போட்டுவிட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications