அலறிய அம்மாசி.. மண்வெட்டியால் மண்டயை பிளந்த முரளி.. கொஞ்சநேரத்தில் போர்க்களமான டீக்கடை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 150 ரூபாய் பாக்கியை திருப்பி கேட்டதால் டீக்கடை கொஞ்ச நேரத்தில் போர்க்களமாக மாறியது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தென்னம்பட்டியில் முரளி என்பவர் பல ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வருகிறார்.
இங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த அம்மாசி என்பவர் டீ குடிக்க சென்றுள்ளார்.

மண்டை உடைப்பு
அப்போது டீக்கடையில் முரளியின் மனைவி சண்முகவேல் இருந்துள்ளார். டீ கேட்ட அம்மாசியிடம் பழைய பாக்கி 150 ரூபாயை கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பலத்த காயம்
அப்போது அங்கு வந்த சண்முகவேலின் கணவர் முரளி ஆத்திரத்தில் அருகிலிருந்த மண்வெட்டியின் கைப்பிடியால் அம்மாசியை கடுமையாக தாக்கியுள்ளார் இதில் அம்மாசியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அதையும் பொருட்படுத்தாத அம்மாசி முரளியுடன் கட்டிப்புரண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர் இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது

வடமதுரை
இதைப் பார்த்த அருகில் இருந்த சிலர் அவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் குறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

150 ரூபாய் பாக்கி
புகாரின் அடிப்படையில் முரளி சண்முகவேல் அம்மாசி உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 150 ரூபாய் கடனுக்காக டீக்கடை முன்பு ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications