Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திண்டுக்கல் நாடோடி கருத்தம்மாவுக்கு வளைகாப்பு.. 9 வகை சாதம் ஊட்டி.. யாசகம் பெற்ற பெண்ணின் நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: நாடோடி கூட்டத்தின் வாழ்க்கை எவ்வளவு வேதனை என்பதை, தினமும் தங்களது உடலில் சாட்டையால் எழுதிக்கொண்டே வாழ்வதில் தெரிந்து கொள்ள முடியும்.. அப்படி ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்தில் ஒரு மகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் சோஷியல் மீடியாவிலும் பரவி, பலரது வாழ்த்துக்களையும், ஆசீர்வாதங்களையும் பெற்று வருகிறது. கருத்தம்மாவுக்கு என்னாச்சு?

திண்டுக்கல்-கரூர் ரோட்டிலுள்ள ரயில்வே மேம்பாலம் கீழ் தற்காலிகமாக தங்கியிருக்கிறார் கருத்தம்மா - அர்ஜூன் தம்பதியினர்.. ஊர் ஊராக சென்று உறுமியடிப்பதும், சாட்டையால் தங்களைத் தாங்களே அடித்துக் கொள்வதும்தான் இவர்களது தொழில், வாழ்வாதாரம் எல்லாம்..

Dindigul Baby Shower Nomadic Karuthamma

சாட்டையடி வாழ்வு

தங்களை தாங்களே சாட்டையால் அடித்து கொண்டு, அதன்மூலம் பொதுமக்களிடம் யாசகம் பெற்று ஜீவனம் நடத்தி வருகிறார்கள்.. இவர்களுக்கென நிரந்தர வீடு கிடையாது. ஒரே இடத்தில் வாழ்ந்த வரலாறும் கிடையாது. இன்று இங்கு, நாளை வேறு ஊர் என்பதே இந்த தம்பதியின் வாழ்க்கை. மழை, வெயிலை பொறுத்து கொண்டு நாள்தோறும் யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறார்கள்..

கருத்தம்மாவுக்கு தாய், தகப்பன் இல்லை.. அதே கூட்டத்தை சேர்ந்த அர்ஜூன் என்பவர் கருத்தம்மாவை ஒரு வருடம் முன்பு திருமணம் செய்து கொண்டார்.. இப்போது கருத்தம்மாள் நிறை மாத கர்ப்பிணியாக உள்ளார்.

கருத்தம்மாவுக்கு வளைகாப்பு

வளைகாப்பு செய்ய வேண்டும் என்ற ஆசை கருத்தம்மாவுக்கு இருந்தாலும், அதை செய்வதற்கு வழியில்லாமல், ஆதரவும் இல்லாமல் ஏக்கத்துடன் இருந்துள்ளார்..

"எங்களுடைய கூட்டத்தில் இதுவரை யாருக்கும் வளைகாப்பு செய்ததே இல்லை. ஆனாலும் எனக்கு அந்த ஆசை இருந்தது" என்று கருத்தம்மா ஏங்கி சொல்கிறார்..

இப்படிப்பட்ட சூழலில்தான், பெண்கள் தலைமையிலான தனியார் தன்னார்வ அமைப்பு ஒன்று., கருத்தம்மாளின் ஆசையை நிறைவேற்ற முன் வந்தது..

9 வகையான சாதம்

நேற்றைய தினம் திண்டுக்கல் R.M. காலனியில் உள்ள தனியார் மீட்டிங் ஹாலில் கருத்தம்மாளுக்காக தடபுடலாக வளைகாப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது... சிகை, அலங்காரம், புது பட்டு புடவை, சீர்வரிசை தட்டுகள், சந்தனம், குங்குமம், வளையல்கள் என தமிழ் மரபுப்படி கருத்தம்மாவுக்கு வளைகாப்பு நடந்தது..

தங்கள் பெண்ணுக்கு வளைகாப்பு என்றதுமே, நாடோடி கூட்டத்தை சேர்ந்த பல பெண்களும் இந்த நிகழ்வில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.. அதேபோல பெண்கள் அமைப்பில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர்.. கருத்தம்மாவுக்கு சந்தனம் தடவி, வளையல் அணிவித்து ஆசி வழங்கினார்கள்.. 9 வகையான சாதங்களுடன் வளைகாப்பு நிறைவடைந்தது..

Dindigul Baby Shower Nomadic Karuthamma

கருத்தம்மா நெகிழ்ச்சி

கருத்தம்மாள் கண்களில் நீர் வழிந்தபடியே இருந்தது.. "எனக்கு வாழ்நாளில் இதுபோல மகிழ்ச்சி கிடைக்கும் என்று நினைக்கவில்லை, ஏக்கத்துடன் இருந்த போது எனது இயக்கத்தை புரிந்து கொண்டு தன்னார்வு அமைப்பைச் சேர்ந்தவர்கள் வளைகாப்பு நடத்தி வைத்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது" என்று பூரித்து சொன்னார்..

திண்டுக்கல்லில் நாடோடி கூட்டத்தைச் சேர்ந்த பெண்ணிற்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்த்த தனியார் அறக்கட்டளை பெண்களுக்கு இணையவாசிகள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.. கருத்தம்மாவுக்கு ஆசிகளை வழங்கி வருகிறார்கள்.

தங்களைத் தாங்களே சாட்டையால் அடித்து வாழ்வை நடத்தி வரும் இந்த தம்பதியினர் நேற்றைய தினம் முழுக்க மகிழ்ச்சி கடலில் மூழ்கி கிடந்தனர்.. அவர்களுக்கும் மகிழ்ச்சி பெற உரிமை இருக்கிறது என்பதை நினைவூட்டியிருக்கிறது இந்த திண்டுக்கல் மனிதநேயத்தின் விழா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+