திண்டுக்கல்லில் காரில் வந்த இளைஞர்.. கழுத்துக்கு கீழ் தான் பார்வையே.. செல்போனில் ஏராளமான வீடியோக்கள்
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் கட்டிட வேலைக்கு செல்லும் பெண்களை, கூலி வேலை தருவதாக காரில் அழைத்துச் சென்று நகை பறித்த கேரள இளைஞரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு பகுதியை சேர்ந்த சஜூ என்ற அந்த இளைஞரின் செல்போனில் பெண்களின் ஏராளமான வீடியோக்கள் இருந்ததால் போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்திருக்கிறார். அவர் எப்படி சிக்கினார் என்பதை பார்ப்போம்.
திண்டுக்கல் நகரில் கட்டிட வேலைக்கு செல்வதற்காக ஆண், பெண் தொழிலாளர்கள் பலர் இருக்கிறார்கள். கட்டுமான தொழிலாளர்கள் தினமும் காலை நாகல்நகர், காட்டாஸ்பத்திரி ஆகிய பகுதிகளில் கூடுவது வழக்கம். பின்னர் அங்கிருந்து தான் கட்டிட வேலைக்கு செல்வது வழக்கம் ஆகும். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகல்நகரில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நின்றுள்ளனர்.

அப்போது ஒரு இளைஞர் காரில் அங்கு வந்து, கட்டிட வேலை தருவதாக கூறி ஒரு பெண்ணை அழைத்து சென்றார். திண்டுக்கல் நகருக்கு வெளியே சென்றதும் திடீரென காரை நிறுத்தினார். பின்னர் அந்த பெண்ணை மிரட்டி அவர் அணிந்து இருந்த கம்மலை பறித்து கொண்டு, பெண்ணை காரில் இருந்து இறக்கிவிட்டு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். இதுபற்றி திண்டுக்கல் நகர டிஎஸ்பி கார்த்திக் தலைமையிலான தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார்கள். அதில் நகை பறிப்பில் ஈடுபட்டவர், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு பகுதியை சேர்ந்த 28 வயதாகும் சஜூ என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைத்தனர். முன்னதாக அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தமிழகம், கேரள மாநிலங்களில் பல பகுதிகளில் கூலி வேலை தருவதாக பெண்களை காரில் அழைத்து சென்று நகை பறித்ததை கண்டுபிடித்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அந்த செல்போன்களில் பல பெண்களுடன் அந்தரங்கமாக இருப்பது போலும், அத்துமீறுவது போலுவும் வீடியோக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே பெண்களிடம் நகை பறிப்பு மட்டுமின்றி அத்துமீறலும் நடந்ததா என்ற சந்தேகம் போலீசார் சந்தேகத்தில் உள்ளனர். எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். விசாரணைக்கு பின்னரே முழு விவரம் தெரிய வரும்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications