பழனியில் குறவர் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. தண்ணீரை ஊற்றி விரட்டியத்த காட்சிகள்...!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சாலையோரத்தில் அமர்ந்து வியாபாரம் செய்த நரிக்குறவர் இன பெண்கள் மீது ஒருவர் தண்ணீர் ஊற்றி விரட்டும் வீடியோ சமுக வலைதளங்களில் அதிமானோரால் பகிரப்பட்டு வருகிறது.
Recommended Video
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குறவர் இன மக்கள் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த போதும் அரசு சார்பில் அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த இருளர் மற்றும் குறவர் இன மக்கள் அங்குள்ள கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை எனவும் அவர்கள் கோயில் நடைபெறும் அன்னதானத்தில் சாப்பிடக் கூட அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பூஞ்சேரி கிராமத்திற்கு வந்து கோயிலை பார்வையிட்டதோடு பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து கோவில் வளாகத்தில் குறவர் இன மக்களுடன் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டார். தொடந்து அந்த மக்களுக்கு வீட்டுமனை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

முதல்வர் ஸ்டாலின்
இது பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் சமூகத்தின் விளிம்புநிலை இருக்கும் ஒருவரையும் விடாது சுயமரியாதையும் சமூகத்தின் மாண்பை காப்பதே திராவிட இயக்கத்தின் பணி என்றும் அவர்களுக்குத் தேவையான மரியாதையை மீட்டுத் தர ஆட்சிப் பொறுப்பு ஒரு பெரும்வாய்ப்பு எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

பழனியில் அதிர்ச்சி சம்பவம்
இந்த நிலையில் பழனி பழனியில் சாலையோர வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த குறவர் இன பெண் ஒருவர் தண்ணீரை ஊற்றி விரட்டியடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. பழனி முருகன் கோவிலில் கார்த்திகை மாதம் முதல் பங்குனி உத்திரம் வரை பக்தர்கள் வருகை அதிகளவில் இருக்கும். இதனையொட்டி பழனி அடிவாரம் முழுவதும் ஏராளமானோர் வியாபாரம் செய்ய குவிவது வழக்கம். இந்நிலையில் தற்போது சபரிமலை பக்தர்கள் வருகை அதிகரிப்பு காரணமாக தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்துவந்துள்ள ஏராளமானோர் பழனியில் தங்கி வியாபாரம் செய்து வருகின்றனர்.

துரத்தப்பட்ட குறவர் இன பெண்
விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து நரிக்குறவர் இனத்தை சேர்ந்த இளம்பெண் விஜயசாந்தி என்பவரும் பழனியில் தங்கி பாசி வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று காலை பழனி மலைக்கோவில் எதிரேயுள்ள சுபம் ஹோட்டல் சாலையில் சாலையோரத்தில் அமர்ந்து வியாபாரம் செய்து வந்தார். அப்போது அவர் அமர்ந்திருந்த இடத்தின் அருகேயுள்ள வீட்டின் மாடியில் இருந்து பெண் ஒருவர் தண்ணீரை ஊற்றி விரட்டியுள்ளார். மேலும் அங்கு அமர்ந்து வியாபாரம் செய்யக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். இதை வீடியோ எடுத்த ஒருவர் சமூகவலைதளங்களில் பதிவிட்டதை தொடர்ந்து இந்த வீடியோ வைரலாகி உள்ளது.

வேதனையளிக்கும் நிகழ்வு
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் விஜயசாந்தி கூரும்போது, அந்த வீட்டின் மாடியில் இருந்து தண்ணீர் ஊற்றிய பெண் அங்கு யாரும் உட்கார்ந்து வியாபாரம் செய்யக்கூடாது என்று தெரிவித்ததாகவும், மீறி உட்கார்ந்தால் தண்ணீர் ஊற்றிவிடுவதாகவும் தெரிவித்தார். சாலையில் தங்கி பாசி மற்றும் மாலை வியாபாரம் செய்யும் தங்கள் மீது இப்படி தண்ணீர் ஊற்றி துரத்துவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக விஜயசாந்தி தெரிவித்தார்












Click it and Unblock the Notifications