உடைந்தது அதிமுக.. எடப்பாடி கொடுத்தது வேண்டாம்! அதிரடியாக பேசிய அதிமுக மாஜிகள்! பரபர பாலிடிக்ஸ்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: காலையில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு எம்.எல்.ஏ அலுவலகத்தை குத்து விளக்குஏற்றி திறந்து வைத்த நிலையில், மதியம் எம்.எல்.ஏ அலுவலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன் ,எஸ்பி வேலுமணி , அன்பழகன் ,சி.வி சண்முகம் ஆகியோர் திறந்து வைத்தனர். ​பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின்னரே 134 ஆக இருந்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை சரிந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 'பூஜ்ஜியம்' ஆனது என கடுமையாகச் சாடியுள்ளார்.

​திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகபுரம் உழவர் சந்தை அருகில் அமைந்துள்ள பழனி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், கடந்த இரண்டு மாதங்களாகப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுப் புதிய பொலிவுடன் தயார் செய்யப்பட்டது.

AIADMK

தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் வகையில் புதுப்பிக்கப்பட்ட இந்த அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ திறப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுக கழகத்தின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் காலையில் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

அதிமுக

பின் மதியம் அதிமுக மூத்த தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களுமான நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம் மற்றும் கே.பி. முனுசாமி ஆகிய மூவரும் ஒரே காரில் வருகை தந்தனர். அதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வருகை தந்தார். தொடர்ந்து அலுவலக வளாகத்திற்குள் சென்று குத்துவிளக்கேற்றி வைத்த தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர் ரவிமனோகரனை அவரது இருக்கையில் அமர வைத்து, கைகுலுக்கித் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

நத்தம் விஸ்வநாதன்

​அதனைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ ரவிமனோகரன் மூத்த தலைவர்களான நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, கே.பி. அன்பழகன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். வருகை தந்த முன்னாள் அமைச்சர்கள் அனைவருக்கும் ரவிமனோகரன் சால்வை அணிவித்துத் தனது நன்றியையும் மரியாதையையும் தெரிவித்துக் கொண்டார். ​நிகழ்ச்சி நிறைவடைந்து செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு, அ.தி.மு.க மூத்த தலைவர்கள் நால்வரும் ஒரே காரில் புறப்பட்டுச் சென்றனர்.

நத்தம் விஸ்வநாதன்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன், கட்சித் தலைமை மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்து ஆவேசமாகப் பேட்டியளித்தார். அப்போது," அதிமுக பொதுச்செயலாளர் மனசாட்சியோடு, தர்ம நியாயத்தோடு ஒரே ஒரு முறை தனது சிந்தனைக்கு நினைத்துப் பார்க்க வேண்டும். புரட்சித்தலைவி அம்மா மறைந்த போது, அ.தி.மு.க-விற்கு 134 சட்டமன்ற உறுப்பினர்களும், 50-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் (மாநிலங்களவை உட்பட) இருந்தனர்.

எடப்பாடி பழனிசாமி

அவ்வளவு பெரிய பலத்தோடுதான் அம்மா ஆட்சியை விட்டுச் சென்றார். ​ஆனால், இவர் (எடப்பாடி பழனிசாமி) கட்சியின் பொறுப்பை ஏற்றுக் கொண்டதற்குப் பின்னால், ​134 ஆக இருந்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடுத்த தேர்தலில் 65 ஆகக் குறைந்தது. ​65 ஆக இருந்த எண்ணிக்கை 47 ஆகச் சரிந்தது.
​50 ஆக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 'பூஜ்ஜியம்' (Zero) ஆனது.

அதிமுக எதிர்காலம்

​இந்தியாவிலேயே 3-வது பெரிய அரசியல் கட்சியாக இருந்த அ.தி.மு.க, இவர் பொறுப்பேற்ற பிறகு நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே வருகிறது. 'கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை' என்பார்களே, அதுபோலத்தான் இவருடைய தலைமையில் அ.தி.மு.க-வின் நிலைமை மாறியுள்ளது. ​இவர் பொறுப்பேற்றது அ.தி.மு.க-வின் வளர்ச்சியா? அல்லது தளர்ச்சியா? என்பதைத் தலைமை சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாங்கள் பல நல்ல ஆலோசனைகளைச் சொன்னோம், ஆனால் அவர் கேட்கவில்லை. தேர்தல் வரக்கூடும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், பொறுத்திருந்து பார்ப்போம்" என்றார்.

எஸ்.பி. வேலுமணி

பின் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க மூத்த தலைவர் எஸ்.பி. வேலுமணி, தலைமை அறிவித்த புதிய பதவிகளை ஏற்க மறுத்துக் கடிதம் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தோல்விகள் குறித்து ஆராயாமல் நிர்வாகிகளை நீக்குவதைக் கண்டித்த அவர், சசிகலா, டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றிணைத்தால் மட்டுமே கட்சி மீண்டும் எழுச்சி பெறும்.

தேர்தல் தோல்வி

​முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக வருவதற்கு சி.வி. சண்முகம், நத்தம் விஸ்வநாதன் என அனைவரும் ஆதரவு அளித்தோம். பழைய பொறுப்புகள் அப்படியே தொடரும் என்ற வாக்குறுதியின் பேரிலேயே இணைந்து பணியாற்றினோம். ஆனால், சொன்ன வார்த்தை காப்பாற்றப்படவில்லை. ​நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து ஆராயப் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்றும், முடிவுகளை எடுக்கக் கமிட்டி அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். ஆனால், தோல்விகளை ஆராயாமல் தினமும் 200-க்கும் மேற்பட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களைக் கட்சியிலிருந்து நீக்கிக் கொண்டே இருக்கிறார்கள்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+