Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரட்டை இலை கொடுத்த திண்டுக்கல்..கரங்கள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை! ’மாஜி’ பஞ்சாயத்தால் சிக்கல்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணி படுதோல்வியை சந்தித்திருக்கும் நிலையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பிரச்சனைகள் முளைத்திருக்கிறது. குறிப்பாக அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தைப் பெற்றுத் தந்த திண்டுக்கல்லில் அதிமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இரு முறை சுமார் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்திருக்கிறது. கட்சியில் நிலவும் உட்கட்சி பூசலே இந்த பிரச்சனைக்கு காரணம் என்கின்றனர் அதிமுக தொண்டர்கள்..

மக்களவைத் தேர்தலில் தற்போது தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணிக்கு படுதோல்வி கிடைத்திருக்கிறது. ஆனால் கடந்த தேர்தல்களை விட தற்போது தங்களுக்கு வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது என அந்த கட்சிகளின் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

Edappadi Palaniswami AIADMK Dindigul Srinivasan Natham Viswanathan Dindigul

ஒரு சதவீதம் - இரண்டு சதவீதம் என வாக்கு வங்கி உயர்ந்து இருப்பதாக கூறினாலும் புதிய தலைமுறை வாக்காளர்கள் மாறிய கூட்டணி ஆகியவை வாக்கு சதவீதம் உயரவோ அல்லது குறைவாகவோ காரணம் இருக்கும்.

வாக்கு சதவீதம் ஒருபுறம் இருந்தாலும், கட்சி என்றால் மக்கள் பிரதிநிதிகளின் அடிப்படையிலேயே அந்தக் கட்சிகளின் பலம் அறியப்படும். 30 சதவீத வாக்குகள் இருந்தாலும் ஒரு எம்எல்ஏ கூட இல்லாவிட்டால் அந்த கட்சி மக்கள் மன்றத்தில் தோல்வி அடைந்த கட்சி தான். அப்படித்தான் தற்போது அதிமுகவின் நிலைமை இருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட 60க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கிடைத்த நிலையில் 2019, 2024 தேர்தல்களில் அந்த கட்சி மக்களவைத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்திருக்கிறது. இதற்காக பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் திண்டுக்கல் மாவட்டத்திலும் இந்த பிரச்சனை எதிரொலித்துள்ளது. திண்டுக்கல் தொகுதியை பொருத்தவரை அதிமுக தற்போது தனது அடையாளமாகக் கொண்டிருக்கும் இரட்டை இலையை கொடுத்த தொகுதி. இங்குதான் முதன் முதலில் மாயத்தேவர் அதிமுக சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றம் நுழைந்தார் . இரட்டை இலை மக்களின் நம்பிக்கையை பெறும் என அவர் கூற அதை ஏற்று எம்.ஜி.ஆர் இரட்டை இலையை சின்னமாக ஏற்றுக்கொண்டார்.

தற்போது வரை இரட்டை இலை தான் அதிமுகவின் வெற்றி சின்னமாக இருந்து வருகிறது. அப்படிப்பட்ட திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர்களின் ஈகோ பிரச்சனை காரணமாக அடுத்தடுத்து மக்களவைத் தேர்தல்களில் அதிமுக கடும் பின்னடைவை சந்தித்து இருப்பது தொண்டர்களை சோர்வடைய செய்துள்ளது. திண்டுக்கல்லை பொறுத்தவரை எம்ஜிஆர் காலத்தில் இருந்தே மாயத் தேவருக்கு பிறகாக மிகவும் பிரபலமாக இருக்கும் நபர் திண்டுக்கல் சீனிவாசன்.

ஜெயலலிதா இருந்தபோது அவரது மிகவும் நம்பிக்கை கூறிய நபர்களில் ஒருவராகவும் கட்சியின் பொருளாளராகவும் பதவி வைத்திருக்கிறார். திண்டுக்கல்லில் அதிக முறை எம்பி ஆகவும் இருந்திருக்கிறார். அவரின் சிஷ்யர் தான் முன்னாள் அமைச்சரான நத்தம் விஸ்வநாதன். ஒரு சில காரணங்களால் சுமார் 15 ஆண்டு காலம் அரசியல் வனவாசம் அனுபவித்த சீனிவாசன் ஒரு வழியாக மீண்டும் கட்சிக்குள் தலைமை பொறுப்பிற்கு வந்திருக்கிறார்.

தற்போது சீனியர் என்ற அடிப்படையில் கட்சியின் பொருளாளராகவும், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து வருகிறார். சிஷ்யரான நத்தம் விஸ்வநாதனாலேயே ஓரம் கட்டப்பட்ட அவர் பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பிறகு அரசியலில் மீண்டும் அடி எடுத்து வைத்த நிலையில் தற்போது அவரை ஓரம் கட்டியுள்ளார். ஓபிஎஸ் பக்கம் சென்று எந்த பலனும் கிடைக்காததால் மீண்டும் எடப்பாடி பக்கம் வந்திருக்கிறார் நத்தம் விஸ்வநாதன். அவருக்கும் துணை பொது செயலாளர், அமைப்பு செயலாளர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.

கரங்கள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்பது போல திண்டுக்கல்லை பொறுத்தவரை இருவரிடையே இன்னும் உரசல் நீடிக்கிறது. குறிப்பாக மக்களவைத் தேர்தல்களில் இருவருக்கும் மூன்று சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கும் நிலையில் ஒருவரின் ஆதரவாளர் அல்லது வாரிசு களம் இறக்கப்பட்டால் மற்றொருவர் உள்ளடி வேலை பார்த்து விடுவார்கள் என இரு தரப்புமே அஞ்சுகிறது. இதன் காரணமாக கடந்த தேர்தலில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி கூட்டணி கட்சியான பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது நத்தம் விஸ்வநாதனின் மருமகனான கண்ணனே களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது போன்ற பிரச்சனைகளால் அவர் களமிறங்கவில்லை.

அப்போது பாமக சார்பில் ஜோதி முத்து போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக வேலுச்சாமி என்பவரை களம் இறக்கியது. அரசியலுக்கும் தொகுதிக்கும் கட்சிக்கும் மிகப் புதியவராக இருந்தாலும் திமுகவின் சிறப்பான வேலையால் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வேலுச்சாமி வெற்றி பெற்றார். பலர் டெபாசிட் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அப்போது அதிமுக இரு முன்னாள் அமைச்சர்களும் பெயருக்கு பிரச்சாரம் மேற்கொண்டதாகவும் சில 'சிறப்பு' வேலைகளை செய்யவில்லை. அதனால் தோல்வியை சந்திக்க வேண்டி இருந்தது என பாட்டாளி மக்கள் கட்சியினர் புலம்பித் தள்ளினர்.

2024 மக்களவைத் தேர்தலிலும் இதே பிரச்சினை தான் ஏற்பட்டது. வழக்கம்போல் உட்கட்சி பூசல் காரணமாக யாருமே போட்டியிட முன் வராத நிலையில் திண்டுக்கல் தொகுதி எஸ்டிபிஐ கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதன் தலைவர் நெல்லை முபாரக் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட சச்சிதானந்தம் சுமார் நாராயணன் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் களமிறங்குகிறார் என அறிவிக்கப்பட்ட போது அதிமுக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். இரு அணிகளைச் சேர்ந்த ஏதாவது வேட்பாளர் அல்லது பொதுவான வேட்பாளர் களமிறங்கினால் நிச்சயம் திண்டுக்கல் தொகுதி அதிமுகவுக்கு கிடைக்கும் இழந்த பெருமையை மீட்டெடுத்து விடலாம் என கருதினர். ஆனால் நிலைமையோ வேறாக இருந்தது. வழக்கம் போல உட்கட்சி பிரச்சனையால் கூட்டணிக்கு தள்ளிவிட்டனர் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.

இந்த தேர்தலிலும் சச்சிதானந்தம் மிகப்பெரிய வெற்றி பெற்றார். கடந்த இரு தேர்தலில் நாலு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் எதிரணி வேட்பாளர்கள் அதிமுகவை வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல்வேறு தேர்தல்களிலும் இதே பிரச்சினை தொடர்வதால் ஒன்று இருவரும் ஒன்றிணை வேண்டும் அல்லது பொதுவானவருக்கு விட்டு தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

இது தொடர்பாக அதிமுக தொண்டர்கள் சிலரிடம் பேசியபோது,"மாவட்டத்திற்கு ஒருவர் தலைமை என இருந்தபோது எந்த பிரச்சினையும் எழவில்லை. மாவட்டங்களை இரண்டாக பிரித்து விட்டால் மூன்று மூன்று சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு இந்த பார்முலா சரியாக இருக்கும் என்றாலும் மக்களவைத் தேர்தலில் இது பெரிய பிரச்சனை ஏற்படுத்துகிறது. மேலும் சட்டமன்ற தொகுதிகளில் இருக்கும் தலைவர்களின் ஆதரவாளர்களும் அடிக்கடி மோதிக் கொள்கின்றனர். இதனால் அதிமுக முன்பு போல இல்லை .. கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாமா வேண்டாமா என்பதை பெரிய சிந்தனையாக இருக்கிறது,, இதற்கெல்லாம் மாநில தலைமை முடிவு கட்டினால் மட்டுமே அதிமுக பழைய பெருமையை பெற முடியும்" என்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+