Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒன்னு கூடிட்டாங்க.. அஜித்துடன் ரஜினி! எடப்பாடிக்கு ஏகப்பட்ட ஹேப்பி! காத்திருந்த திண்டுக்கல் கிஃப்ட்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் திண்டுக்கல் பிரச்சாரத்தின் போது எடப்பாடியுடன் நடிகர் அஜுத் குமார், ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படத்தை சிறுமி ஒருவர் வழங்க அதனை சிரித்த முகத்துடன் எடப்பாடி பழனிசாமி பெற்றுக் கொண்டார். சில நாட்களாக எடப்பாடிக்கு அஜித் படங்கள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது ரஜினிகாந்தும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக - பாஜக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், திண்டுக்கல் மாநகராட்சி அருகே மணிக்கூண்டு பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்ட பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

Tamil Nadu Assembly Election 2026 Edappadi Palaniswami Ajith kumar Rajinikanth

பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி," நான் வாய்ச்சொல்லில் வீரனல்ல. அதை விட்டுவிட்டு எடப்பாடி பழனிசாமி 'டெல்லிக்கு அடிமை' என்று பேசுவது தவறு. இப்போது நடப்பது சட்டமன்றத் தேர்தலா அல்லது நாடாளுமன்றத் தேர்தலா? இந்த முதலமைச்சருக்கு மறதி அதிகம். இன்று தமிழகத்தில் நடப்பது நாடாளுமன்றத் தேர்தல். ஆனால் அவரோ சட்டமன்றத் தேர்தல் நடப்பது போலவும், திமுக ஆட்சிக்கு வரப்போவது போலவும் பேசுகிறார். தமிழகத்திற்கும் டெல்லிக்கும் தான் போட்டி என்று பேசிக்கொண்டு இருக்கிறார். இவருக்கு அடிக்கடி மறதி ஏற்படும்.

இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பு கடலூரில் நடந்த கூட்டத்தில் வேட்பாளரை அறிமுகப்படுத்துகிறார். அப்போது என்ன செய்ய வேண்டும் என்று அவருக்குத் தெரியவில்லை. அவருடைய உதயசூரியன் சின்னமே அவருக்கு மறந்து போய்விட்டது. வேட்பாளரிடம் கேட்டு அந்தத் தகவலைப் பெற்றுப் பேசுகிறார். ஸ்டாலின் அவர்களே, இது என்ன தேர்தல் என்று சத்தமாகச் சொல்லுங்கள். இது நாடாளுமன்றத் தேர்தல் தானே? நாட்டில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கின்றன.

ரோம் நகரம் எரியும்போது மன்னன் நீரோ பிடில் வாசித்தது போல, நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் நடக்கும்போது இவர் கிரிக்கெட்டைப் பற்றிப் பேசுகிறார். காரில் போகும்போது கிரிக்கெட் பார்த்துக்கொண்டு போகிறார். இப்படிப்பட்ட முதலமைச்சர் இருந்தால் நாடு விளங்குமா? மக்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரிந்து அதற்கு ஏதாவது செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு இவர் கார்ல போகும்போது கிரிக்கெட் பார்ப்பதை பத்திரிகையாளர்கள் படம் பிடித்துப் போடுகிறார்கள்.

மக்கள் தங்களுக்குச் சேவை செய்வார்கள் என்றுதான் முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கிறார்கள், இவர் கிரிக்கெட் பார்ப்பதற்காக அல்ல. இவர் கவலை இல்லாத முதலமைச்சராக இருக்கிறார். மக்களின் கஷ்டம், துன்பம், வேதனை பற்றி கவலைப்படாத முதலமைச்சர் ஸ்டாலின். நாங்கள் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்தவர்கள். ஆனால் அவர்கள் செல்வச் செழிப்பில் வாழ்ந்தவர்கள், கஷ்டத்தை உணராதவர்கள். நாட்டின் நிலவரம் என்னவென்று தெரியாதவர் ஸ்டாலின்." என்றார்.

முன்னதாக திருச்சியில் இருந்து திண்டுக்கல் வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்ட போது திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவரும் அவரது தங்கையும் எடப்பாடி பழனிச்சாமிக்கு புகைப்படம் ஒன்றை வழங்க நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்தனர்.

எடப்பாடி பழனிசாமியுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அஜித் குமார் ஆகியோர் இருப்பது போல அந்த புகைப்படம் வடிவமைக்கப்பட்டிருந்தது. பிரச்சாரத்தின் போதே அதனை கவனித்த எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் முடிந்து செல்லும்போது அதனை பெற்றுக் கொள்வதாக தெரிவித்தார். சொன்னது போலவே பிரச்சாரம் முடிந்ததும் அந்த சிறுமியை அழைத்து அந்த புகைப்படத்தை பெற்றுக்கொண்டு போஸ் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சிகளில் அஜித்தின் புகைப்படங்கள் பரிசாக வழங்கப்படும் நிலையில் தற்போது அந்த பட்டியலில் கூடுதலாக ரஜினியும் இணைந்திருக்கிறார். விஜய் தமிழக வெற்றி கழகத்தை தொடங்கி இருக்கும் நிலையில் அவரது கட்சியினரும் ரசிகர்களும் ரஜினிகாந்த் அஜித் எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருக்கின்றார். இந்த நிலையில் விஜய்க்கு எதிராக அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களின் வாக்குகளை அறுவடை செய்வதற்காக எடப்பாடி பழனிச்சாமி இந்த நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+