திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக விஸ்வரூபம்! வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம் பேரூராட்சிகள் கிளீன் ஸ்வீப்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி, வத்தலக்குண்டு பேரூராட்சிகளில் உள்ளத தலா 18 வார்டுகளிலும் திமுகவும், அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களும் முழுமையாக வெற்றி பெற்றனர். இதன்மூலம் ஒட்டன்சத்திரம் நகராட்சி, வத்தலக்குண்டு பேரூராட்சிகளில் போட்டியிட்ட அதிமுக, பாஜக, நாம்தமிழர் உள்பட பிற கட்சி வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளனர்.
பிப்ரவரி 19ல் நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 268 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
தற்போதைய நிலவரப்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வேட்பாளர்களின் வெற்றி, தோல்வி நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்ற. பெரும்பாலான வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் முன்னணியில் உள்ளனர்.

திண்டுக்கல் உள்ளாட்சி அமைப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சி, கொடைக்கானல் பழனி, ஒட்டன்சத்திரம் என 3 நகராட்சிகள் உள்ளன. இதுதவிர அய்யம்பாளையம், சின்னாளபட்டி, பண்ணைக்காடு, கீரனூர், எரியோடு, சித்தையன்கோட்டை, தாடிகொம்பு, நிலக்கோட்டை, அய்யலூர், நெய்க்காரபட்டி, பட்டிவீரன்பட்டி, வடமதுரை, வத்தலகுண்டு, வேடசந்தூர், ஆயக்குடி, ஸ்ரீராமபுரம், சேவுகம்பட்டி, பாலசமுத்திரம், கன்னிவாடி, பாளையம், அகரம், அம்மைநாயக்கனூர், நத்தம் என மொத்தம் 23 பேரூராட்சிகள் உள்ளன.

3 அடுக்கு பாதுகாப்பு
ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 23 பேரூராட்சி என மொத்தமுள்ள 27 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்.,19ல் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. ஓட்டு மையங்களை சுற்றி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வார்டுகள் வாரியாக ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

திமுக கூட்டணி வெற்றி
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி, வத்தலகுண்டு பேரூராட்சி ஆகியவற்றை முழுமையாக திமுக கைப்பற்றியுள்ளது. அதாவது ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உள்ள 18 வார்டு, வத்தலக்குண்டு பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் திமுக கட்சியினரும், அதன் கூட்டணி வேட்பாளர்களும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இந்த 36 வார்டுகளில் அதிமுக, அமமுக, பாஜக, நாம்தமிழர், பாமக உள்ளிட்ட பிற கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் அனைவரும் தோல்வி அடைந்துள்ளனர்.

யார் யார் வெற்றி
வத்தலக்குண்டு பேரூராட்சியில் திமுக சார்பில் போட்டியிட்ட 16 பேரும், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் சார்பில் களமிறங்கிய தலா ஒருவர் என இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். அதன்படி 1வது வார்டில் திமுகவின் ரவிச்சந்திரன், 2வது வார்டில் திமுகவின் சிவக்குமார், 3 வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அழகுராணி, 4 வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் சைதத் நிஷா, 5வது வார்டில் திமுகவின் மருதன், 6வது வார்டில் திமுகவின் சின்னத்துரை, 7 வது வார்டில் திமுகவின் மகாமுனி, 8 வது வார்டில் மணிவண்ணன், 9வது வார்டில் திமுகவின் கனகதுரை, 10வது வார்டில் திமுகவின் பிரியா, 11வது வார்டில் திமுகவின் தர்மலிங்கம், 12வது வார்டில் திமுகவின் தமிழரசி, 13வது வார்டில் திமுகவின் ரமீஜா பேகம், 14வது வார்டில் திமுகவின் ராமுத்தாய், 15வது வார்டில் திமுகவின் சுமதி, 16வது வார்டில் திமுகவின் முத்துமாரியம்மாள், 17 வது வார்டில் திமுகவின் சியாமளா, 18 வது வார்டில் திமுகவின் சிதம்பரம் ஆகியோர் வாகை சூடியுள்ளனர்.

ஒட்டன்சத்திரம் திமுக வசம்
இதேபோல் திண்டுக்கல் மாவட்ட ஒட்டன் சத்திரம் நகராட்சியில் உள்ள 18 வார்டுகளில் போட்டியிட்ட 16 வார்டுகளில் திமுகவும், ஒரு வார்டில் காங்கிரசும், இன்னொரு வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்த நகராட்சியில் திமுக, அதன் கூட்டணி வேட்பாளர்கள் முற்றிலுமாக வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக, பாஜக, நாம்தமிழர் உள்பட பிற வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியடைந்துள்ளனர்.

வெற்றி பெற்றோர் விபரம்
ஒட்டன் சத்திரம் நகராட்சியில் வார்டு ஒன்றில் திமுகவின் சித்ரா, வார்டு 2ல் திமுகவின் அருள்மணி, வார்டு 3ல் திமுகவின் செல்வராஜ், வார்டு 4ல் திமுகவின் அழகேஸ்வரி, வார்டு 5ல் திமுகவின் சாந்தி, வார்டு 6ல் சண்முகப்பிரியா, வார்டு 7 ல் கனகராஜ், வார்டு 8 ல், திமுகவின் திருமலைசாமி, வார்டு 9ல் திமுகவின் தேவி, வார்டு 10ல் அம்சநிவேதா, வார்டு 11ல் திமுகவின் வெள்ளைச்சாமி, வார்டு 12ல் காங்கிரஸின் முகமது மீரான், வார்டு 13ல் திமுகவின் கண்ணன், வார்டு 14ல் திமுகவின் ரமேஷ், வார்டு 15ல் திமுகவின் ஜெயமணி, வார்டு 16ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சிவமணி, வார்டு 17 ல் திமுக மகாராணி, வார்டு 18 ல் திமுக கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் 8, 11 ஆகிய வார்டுகளில் வெற்றி பெற்றுள்ள திமுக வேட்பாளர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்வாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்' -
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா?












Click it and Unblock the Notifications