பழனி முருகன் கோவிலுக்கு போறீங்களா? தமிழக அரசால் புதிதாக தொடங்கப்பட்ட சூப்பர் வசதி
திண்டுக்கல்: தமிழகத்தில் மிகவும் பிரசித்த பெற்ற திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் ரூ.20-க்கு பஞ்சாமிர்தம் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி இந்த விற்பனையை நேற்று தொடங்கி வைத்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள பழனி முருகன் கோயில் மற்ற எல்லா முருகன் கோயில்களையும் விடவும் வித்தியாசமானது. முருகன் இங்கு தான் வந்ததாக ஐதீகம் உள்ளது.. தமிழ்நாட்டின் பணக்கார கோயில் என்று சொல்லும் அளவிற்கு அதிக பக்தர்கள் வருவது பழனிக்கு தான். பழனிமுருகன் கோயில் கொடைக்கானல் மழை அடிவாரத்தில் அமைந்திருக்கிறது..

பழனி கோயில் கருவறையில் அமைக்கப்பட்டுள்ள முருகன் ஆண்டியின் கோலத்தில்கையில் கோல் (தண்டு) ஒன்றை வைத்துள்ள நிலையில் உள்ளார். இச்சிற்பம் மற்ற சிற்பங்களைப் போல கல்லால் செய்யப்பட்ட தன்று. ஒன்பது வகையான மருத்துவப் பொருட்களைச் (நவபாசாணம்) சேர்த்து முருகப்பெருமானின் திருமேனி போகர் என்ற சித்தரால் உருவாக்கப்பட்டது.
பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் மலைக்கோயிலுக்குப் படிப்பாதை வழியாகச் சென்றே பலரும் சுவாமியை தரிசனம் செய்கிறார்கள். மொத்தம் 693 படிகள் உள்ளன. வயதானவர்கள், நடக்க முடியாதவர்கள் ரோப் காரில் பயணிக்கலாம். இந்த ரோப் காரில் 8 நிமிடங்களில் மணிக்கு 200 நபர்கள் வீதம் மலைக்கோயிலைச் சென்றடையலாம். பழனி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் பலர் பாதயாத்திரையாகவே வருகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஊர்களுக்கும் தனிச்சிறப்பு உண்டு. அந்த வகையில் பழனி என்றாலே பஞ்சாமிர்தம்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். பழனி முருகன் கோவிலுக்கு வருவோர், தவறாமல் பஞ்சாமிர்தம் வாங்கி செல்வது வழக்கமாகும். பழனியில் உள்ள கோவில் பஞ்சாமிர்த விற்பனை நிலையத்தில், தற்போது பிளாஸ்டிக் டப்பாவில் 450 கிராம் பஞ்சாமிர்தம் ரூ.40-க்கும், தகர டப்பாவில் ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில் மினி டப்பாவில் பஞ்சாமிர்தம் விற்பனை செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதைக்கருத்தில் கொண்டு 200 கிராம் பஞ்சாமிர்தத்தை மினி டப்பாவில் ரூ.20-க்கு விற்க கோவில் நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. அதன்படி, 200 கிராம் பஞ்சாமிர்தம் ரூ.20-க்கு விற்பனை தொடக்க நிகழ்ச்சி, பழனி முருகன் கோவிலில் நேற்று நடந்தது. இதில், உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு, ரூ.20-க்கு பஞ்சாமிர்தம் விற்பனையை நேற்று தொடங்கி வைத்தார். இனி 20 ரூபாய்க்கு பஞ்சாமிர்தம் வாங்கலாம்.












Click it and Unblock the Notifications