"அழிவின் டாக்டர்".. வார்னிங் தந்த மாதிரியே நடக்குதே! உலக அளவில் அதிகரித்த வேலையிழப்புகள்.. அதிர்ச்சி
டெல்லி: முன்னணி பொருளாதார நிபுணரும், ஹார்டுவேர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவருமான நோரியல் ரொபிணி எச்சரித்தது போலவே சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை தொடங்கி உள்ளது.
கொரோனா காரணமாக ஏற்பட்ட மந்தநிலை காரணமாகவும், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு காரணமாகவும் உலக அளவில் வேலை இழப்புகள் அதிகரித்து வருகின்றன. உலக அளவில் பெருநிறுவனங்கள் பல தங்கள் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி வருகின்றன.
இந்தியாவிலும் சமீபத்தில் பைஜூஸ் நிறுவனம் தங்கள் நிறுவன ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது.

பொருளாதார மந்த நிலை
பைஜூஸ் நிறுவனம் சமீபத்தில் 2500 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது. பொருளாதார தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காகவும், ஒரே பணியை பல ஊழியர்கள் செய்வதை தடுப்பதற்காகவும் இந்த நடவடிக்கையை எடுத்ததாக அந்த நிறுவனம் கூறியது. மொத்தம் 5 சதவிகித ஊழியர்களை அந்த நிறுவனம் வேலையில் இருந்து நீக்கியது. அதேபோல் அன் அகாடமி நிறுவனம் 350 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்து உள்ளது.

பைஜூஸ்
இந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் இந்த லே ஆப் தீவிரம் அடைந்து உள்ளது. சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தில் பொருளாதார தட்டுப்பாட்டை சமாளிக்க எலான் மஸ்க் 3500 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கினார். இந்தியாவில் வேலை பார்த்த 99 சதவிகித ஊழியர்கள் மொத்தமாக பணியில் இருந்து நீக்கப்பட்டனர். அமெரிக்காவில் கடந்த மாதம் மட்டும் 33849 பேர் வேலையில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். அதாவது வேலையில் இருந்து நீக்கப்படும் நபர்களின் சதவிகிதம் 13% அதிகரித்து உள்ளது.

லே ஆப் தீவிரம்
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தில் இருந்தும் 11 ஆயிரம் பேர் நீக்கப்பட உள்ளனர். Morgan Stanley, Intel, Microsoft (1000 பேர்) போன்ற நிறுவனங்களில் இருந்தும் ஊழியர்கள் நீக்கப்பட்டு வருகின்றனர். ஜான்சனன் ஜான்சன், வார்னர் ப்ரோஸ், பிலிப்ஸ் ஆகிய பெரு நிறுவனங்களில் இருந்தும் ஊழியர்கள் நீக்கப்பட்டு வருகின்றனர். சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சமீபத்தில்தான் முன்னணி பொருளாதார நிபுணரும், ஹார்டுவேர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவருமான நோரியல் ரொபிணி உலகில் பல நாடுகளில் மிக மோசமான மந்தநிலை இந்த வருட இறுதியில் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

மெட்டா
இதனால் வேலைவாய்ப்பு இழப்பு, பண வீக்கம் அதிகரிக்கலாம் என்று அவர் கணித்து இருந்தார். அமெரிக்காவை சேர்ந்த நோரியல் ரொபிணி இதற்கு முன்பே 2008ல் உலகம் முழுக்க பல நாடுகளை புரட்டி போட்ட மந்தநிலை குறித்து துல்லியமாக கணித்து இருந்தார். இதனால் இவரை அழிவின் டாக்டர் என்று பொருளாதார உலகில் அழைப்பார்கள். இந்த நிலையில்தான் இந்த வருடம் இறுதியில் மந்த நிலை தொடங்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

வேலை இழப்பு
இந்த மந்தநிலை மிக மோசமான நிலையை அடையும். அடுத்த வருடம் முழுக்க அமெரிக்காவிலும், உலகில் பெரும்பாலான நாடுகளிலும் மந்த நிலையில் நீடிக்கும் என்று அவர் கூறியுள்ளார். 1970ல் ஏற்பட்ட மந்த நிலை போலவே இந்த முறை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது மோசமாகவும்.. நீண்டதாகவும்.. அருவறுப்பானதாகவும் இருக்க போகிறது என்று அவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார். முக்கியமாக அமெரிக்காவை சேர்ந்த S&P 500 பங்கு சந்தை 30 சதவிகிதம் சரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சீனா
சீனாவில் உள்ள ஜீரோ கோவிட் விதி, ரஷ்யா - உக்ரைன் மோதல் போன்றவை காரணமாக பொருளாதாரம் உலகம் முழுக்க மேலும் பாதிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார். பண வீக்கத்தை கட்டுப்படுத்துவது என்பது கண்டிப்பாக இயலாத காரியமாக மாறும். வரும் மாதங்களில் பண வீக்கம் அதிகரிக்கும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிகரிக்கும் பண வீக்கம் காரணமாக கண்டிப்பாக விலை ஏற்றம் இருக்கும். பலருக்கு இதனால் வேலை போகும். நிலைமை மிக மோசமாகும் என்று எச்சரிக்கை விடுத்தார் . அவர் எச்சரிக்கை விடுத்தது போலவே சர்வதேச அளவில் வேலையிழப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications