திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒருவர் சண்டைக்கு தயாராகிறார்.. இன்னொருவர் அடிக்க கை நீட்டுகிறார்.. இவ்வளவும் ஸ்டாலின் கண் முன்!

முக ஸ்டாலின் முன்னிலையிலேயே செய்தியாளர்களும் தொண்டர்களும் மோதிக் கொண்டனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    முக ஸ்டாலின் முன்னிலையில்.. செய்தியாளர்கள் தொண்டர்கள் மோதல்-வீடியோ

    திண்டுக்கல்: ஒருவர் சண்டைக்கு தயாராகிறார்.. இன்னொருவர் அடிக்க கை நீட்டுகிறார்.. மற்றொருவர் மோதலுக்கு தயாராகிறார்! இவ்வளவும் திமுக தலைவர் முக ஸ்டாலின் கண் முன்னாடியே நடந்திருப்பதுதான் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திண்டுக்கல் எம்பி தேர்தல் மற்றும் நிலக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து முக ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

    இதில் கலந்து கொள்ள மேடைக்கு வரும்போதே, "பொதுவாக என் மனசு தங்கம்" என்ற பாடல் ஒலிக்கிறது. முன்வரிசையில் ஸ்டாலின் உட்கார்ந்திருக்க.. கூட்டம் தொடங்கியது!

    இரட்டை இலை, உதய சூரியன் சின்னம் வேறு கட்சிகளுக்கும் கொடுத்திருக்காங்களா.. என்னப்பா இது! இரட்டை இலை, உதய சூரியன் சின்னம் வேறு கட்சிகளுக்கும் கொடுத்திருக்காங்களா.. என்னப்பா இது!

    வாக்குவாதம்

    வாக்குவாதம்

    அப்போது செய்தி சேகரிக்க சென்றிருந்த செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்களுக்கும் திமுக தொண்டர்களுக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. செய்தியாளர்களை தொண்டர்கள் தரக்குறைவாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்திற்கெல்லாம் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட ஆரம்பித்துவிட்டது.

     வெற்றிகொண்டான்

    வெற்றிகொண்டான்

    இதையெல்லாம் மேடையில் அமர்ந்து ஸ்டாலின் பார்த்து கொண்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த சண்டையை அவர் தடுக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுகிறது. இவ்வளவு மோதலும் நடக்கும்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒருவர் பேசி கொண்டிருக்கிறார். அப்போது, "திமுகவின் மிகப்பெரிய பேச்சாளரான வெற்றிகொண்டான் சொன்னது எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது.

    கணிக்கமுடியாத தொகுதியாகும் நாகை.. இதுதான் காரணமா?

    ராமதாஸ்

    ராமதாஸ்

    ஒருவருக்கு பணத்தேவை என்றால் வீட்டை அடமானம் வைத்து பணத்தை பெற்று கொள்வார்கள், நிலத்தை வைத்து பணத்தை பெற்று கொள்வார்கள், ஆனால் அரசியல் கட்சியை வைத்து ஒருவர் பணம் பெறுகிற ஒரு நபர் உண்டென்றால் அது பாமக நிறுவனர் ராமதாஸ்தான் என்று அன்று அவர் சொன்னார். இப்படி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியை நாம் வீட்டுக்கு அனுப்புவோம்" என்றார்.

     சமாதானம் செய்யவில்லை

    சமாதானம் செய்யவில்லை

    ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் மக்கள் கூட்டத்தில் ஏற்பட்ட தகராறு மற்றும் தாக்குதலையே கவனித்து கொண்டிருந்தனர். இரு தரப்பையுமே ஸ்டாலின் என்னவென்று விசாரித்து சமாதானப்படுத்தி இருக்கலாமே என பொதுவான கருத்து எழுந்துள்ளது!

    English summary
    In front of MK Stalin, journalists and DMK volunteers clashed. This has caused controversy and video video goes viral now
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X