50 லட்சமே இருக்கும்’அட்ஜஸ்ட்’ பண்ணிருக்கேன்ல! பணத்தை அபேஸ் பண்ணிய பகீர் ஆடியோ!அதிர வைத்த திவ்ய பாரதி
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே யூடியூபரிடம் 30 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக துணை நடிகை திவ்ய பாரதி மீது, புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தன்னை தான் யூட்யூபர் ஏமாற்றியதாக திவ்ய பாரதி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபரிடம் டூவீலர், கார் கேட்டதும், 50 லட்சம் ரூபாயே வாங்கி இருப்பேன் அதற்காக அட்ஜஸ்ட் பண்ணி இருக்கேன் என அந்த நடிகை பேசும் பகீர் ஆடியோ வெளியாகி உள்ளது.
Recommended Video
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சேர்ந்த ஆனந்த்ராஜ் என்பவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அதில் கவிதைகள் தொடர்பான வீடியோக்களை அவர் வெளியிட்டு பணம் சம்பாதித்து வந்துள்ளார்.
இதில் நடிப்பதற்காக நடிகை ஒருவரை தேடி வந்துள்ளார். அப்போது ஏஜண்ட் ஒருவரின் மூலம் திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பைச் சேர்ந்த திவ்யபாரதி என்பவர் அறிமுகமாகி உள்ளார். இவர் உள்ளூர் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும், சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.

துணை நடிகை
திவ்யபாரதி சினிமாவில் துணை நடிகையாகவும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் விளம்பரம் மற்றும் தொகுப்பாளராக நடித்து வந்துள்ளார். இவரை வைத்து கவிதை தொகுப்பினை வீடியோவாக எடுத்து பகலவன் ராஜா வெளியிட்டுள்ளார். இதனையடுத்து திவ்யபாரதி பகலவன் ராஜா அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேலும் தனது குடும்பத்துடன் கொடைக்கானலில் உள்ள பகலவன் ராஜா வீட்டிற்கு சென்று தங்கி குடும்ப ரீதியாக நட்பாக பழகியுள்ளனர்.

திவ்ய பாரதி
பின்னர் அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல தவணைகளில் 30 லட்சம் ரூபாய் பணம், பத்து சவரன் தங்க நகைகள் ஆகியவற்றை பெற்றுக் கொண்டுள்ளார் மேலும் தனியாக வீடு எடுத்து அதற்கு பர்னிச்சர் உள்ளிட்ட வகையில் 7 லட்சம் ரூபாயை பகலவன் ராஜா செலவு செய்துள்ளார், இந்த நிலையில் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிய இரு குழந்தைகள் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏமாற்றம்
ஏற்கனவே பல நபர்களுடன் தொடர்பில் இருந்தது குறித்து அவருக்குத் தெரிய வந்ததால் வழக்கிலிருந்து தப்பிக்க தன்னைத்தான் பகலவன் ராஜா ஏமாற்றிவிட்டார் என நடிகை திவ்யபாரதி கூறியிருந்தார். மேலும் தன்னை படத்தில் நடிக்க வைப்பதாக கூறி பத்து லட்சம் ரூபாய் வரை அவர் ஏமாற்றியதாக பகீர் புகாரை கிளப்பி இருந்தார். இந்த நிலையில் திவ்ய பாரதியிடம் தான் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை என்றும் தான் அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்துள்ளதாக கூறியுள்ள பகலவன் ராஜா இது தொடர்பாக திவ்யபாரதி தன்னுடன் பேசிய உரையாடல்களையும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட ஆடியோக்களையும் வெளியிட்டுள்ளார்.

ஆடியோ
அந்த ஆடியோக்களில் திவ்ய பாரதியை பற்றி பேசும்போதெல்லாம் அவர் பொண்டாட்டி எனவே பேசி உள்ளதும், அதற்கு திவ்யபாரதி ஓகே என்று சொன்னதோடு விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என ரிப்ளை அளித்துள்ளார். மேலும் அச்சில் ஏற்ற முடியாதவாறு ஆபாச உரையாடல்களும் அவர்களுக்கு இடையே நடந்திருக்கிறது.

வாட்ஸ் ஆப் உரையாடல்கள்
மேலும் தான் ஏமாற்றப்பட்டது குறித்து திவ்ய பாரதியிடம் பகலவன் ராஜா கேட்டபோது 50 லட்சம் ரூபாய் கூட நீங்கள் செலவழித்திருக்கலாம் நான் ஒன்றும் சும்மா பணம் வாங்கவில்லை உங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறேன். உங்களுக்கு பிடித்தது போல் நடந்திருக்கிறேன், நிறைய அட்ஜெஸ் செய்திருக்கிறேன் என்ற ரீதியில் பேசியுள்ளார். மேலும் இத்தனை நாள் பழகிய தனக்கு டூவீலர் மற்றும் கார் வாங்கி தருகிறேன் என்று சொன்னீர்களே இதுவரை வாங்கி தந்தீர்களா எனவும் பேசியுள்ளார். பகலவன் ராஜாவிடம் பணமே பெற்றுக் கொள்ளவில்லை என அவர் புகார் கூறிய நிலையில் தற்போது வெளியான ஆடியோ மற்றும் வாட்ஸ் ஆப் உரையாடல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து திவ்ய பாரதியை காவல்துறையினர் மோசடி வழக்கின் கீழ் கைது செய்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications