Lunar Eclipse: அறிவில்லாக் கட்டுக் கதைகள்.. சந்திர கிரகணத்தால் ஒன்றுமே ஆகாது! வெறும் கண்ணாலேயே பார்க்கலாமாம்!
திண்டுக்கல்: நாளை சந்திர கிரகணம் நடைபெற இருக்கும் நிலையில் 'பிளட் மூன்' எனப்படும் சிவப்பு நிறத்தில் நிலா தோன்றும் அரியவகை நிகழ்வு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், சந்திர கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் வெளியே வரக் கூடாது போன்ற பல்வேறு கட்டுக்கதைகள் சமூக வலைதளங்களில் உலாவும் நிலையில் பொதுமக்கள் அதனை நம்ப வேண்டாம் எனவும், சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் கூட பார்க்கலாம் என கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகத்தின் விஞ்ஞானி கிறிஸ்பின் கார்த்தி கூறியுள்ளார்.
நாளை சந்திர கிரகணம் நடக்க இருக்கும் நிலையில் பிளட் மூன் எனப்படும் நிலா சிவப்பு நிறமாக மாறும் அரிய நிகழ்வு நடைபெற இருக்கிறது. இரவு 9:56 மணிக்கு கிரகணம் தொடங்கும் நிலையில் அதிகாலை 1:26 மணிக்கு கிரகணம் முடிகிறது. சுமார் 11:40 மணியளவில் கிரகணம் உச்சம் அடைந்திருக்கும் நிலையில் நிலா சிவப்பு நிறமாகத் தோற்றமளிக்கும்.
இதனை இரத்த நிலா என்றும் ரெட் மூன் என்றும் அழைப்பார்கள். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் சந்திர கிரகணம் நீடிக்கும் நிலையில் இந்தியாவில் இதனைத் தெளிவாகப் பார்க்க முடியும் என வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.

சந்திர கிரகணம்
இந்த நிலையில் சந்திர கிரகணத்தின் போது கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வரக்கூடாது. தேங்காயை வைத்திருக்க வேண்டும், கோவிலுக்குச் செல்லக்கூடாது, வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது போன்ற கட்டுக்கதைகள் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வரக்கூடாது, வெறும் கண்களால் காணக்கூடாது போன்று மூடநம்பிக்கைகளை நம்ப வேண்டாம் என கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள வான் இயற்பியல் ஆய்வக விஞ்ஞானி கிறிஸ்பின் கார்த்தி கூறியுள்ளார்.
அறிவியல் காரணம்
கொடைக்கானலில் செய்தியாளர்களை சந்தித்த அவர்," பூமியை நிலவு சுற்றிவரும் போது சூரியனில் இருந்து வெளியேறும் கதிர்கள் பூமி மீது பட்டபிறகு அதன் நிழல் நிலவின் மீது படும் நிகழ்வை சந்திர கிரகணம் என்று கூறப்படுகிறது. நாளை இரவு 9 மணி முதல் அதிகாலை 2 மணிவரை சந்திர கிரகணம் நடைபெற இருக்கிறது. அதன் உச்சகட்டமாக 12 மணிக்கு காணக் கூடும். குறிப்பாக இரவு 12 மணியளவில் தென்படும் நிலவு ஆரஞ்சு நிறத்திலும், பிறகு காப்பர் மற்றும் இறுதி கட்டமாக சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். அதனை ரெட் மூன், ப்ளட் மூன், ரத்த நிலா என்றும் அழைப்பார்கள்.
ரத்த நிலா
இதனை வானம் தெளிவாகத் தென்பட்டால் தொலைநோக்கி மூலமாகவும், வெறும் கண்களால் கூட பார்க்கலாம். இதனால் எந்த பாதிப்பும் இல்லை. அடுத்த சந்திர கிரகணம் நிகழ்வானது 2028 டிசம்பர் மாதத்தில் தோன்றும். குறிப்பாக சந்திர கிரகணம் நடைபெறும் நேரத்தில் விமானத்தில் செல்பவர்கள் பூமியில் இருந்து 10 ஆயிரம் கிமீ தொலைவில் மேக மூட்டங்களுக்கிடையே செல்லும் போது இந்த அரிய நிகழ்வை சற்று அருகில் கண்டு ரசிக்கலாம். மேலும் இந்த நிகழ்வை கொடைக்கானல் அப்சர்வேட்டரி வான் இயற்பியல் ஆய்வகத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மூட நம்பிக்கை
சந்திர கிரகணத்தை காண வரும் பொதுமக்கள் இலவசமாக தொலைநோக்கி மூலம் பார்க்க அனுமதிக்கப்படுவர். அதே போல பெங்களூரில் இருந்து தொலைநோக்கி மூலமும், வான் இயற்பியல் மையத்தின் யூடியூப் சேனல் மூலமாகவும் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முந்தைய காலத்தில் இந்த நிகழ்வு குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் இந்த நிகழ்வை கண்டு அச்சம் அடைந்து அதனை மூட நம்பிக்கையாக பார்த்தனர். ஆனால், தற்போது அதன் நிகழ்வு குறித்து புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எனவே கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது, வெறும் கண்களால் காணக்கூடாது போன்று மூட நம்பிக்கைகள் தற்போது இல்லை. எனவே மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை" என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications