திண்டுக்கல்லில் திகைத்து போன எஸ்டிபிஐ முபாரக்.. பக்கத்துல யாரு சீனிவாசனா? அந்த பாப்பா ஏன் சிரிக்குது
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அனலடிக்கும் பிரச்சாரம் உச்சக்கட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது. அதற்கேற்றவாறு சுவாரஸ்யங்களும் தொகுதிக்குள் நடந்து பரபரப்பை கிளப்பி விட்டுக்கொண்டிருக்கின்றன.
திண்டுக்கல் தொகுதியில் பிரச்சாரத்துக்கு மத்தியில் பண பட்டுவாடாவும் ஆங்காங்கே தாராளமாக நடந்து வருகிறதாம். அதிலும் அதிமுக சற்று மும்முரமாக வேலைபார்த்து வருகிறதாம்..

வேட்பாளர்கள்: அதாவது, வேட்பாளர் வாக்குகள் சேகரிக்க வருவதற்கு முன்பாகவே, அங்கிருக்கும் ஸ்பீக்கர்களில் அதிமுகவின் கொள்கை பரப்பு பாடல்கள், எம்ஜிஆர் பாடல்கள் ஒலிபரப்பப்படுகின்றன... அப்படித்தான் இன்றைய தினமும் எம்ஜிஆர் பாட்டு இசைக்கப்பட்டது. உடனே 2 எம்ஜிஆர் ரசிகர்கள், தங்களை மறந்து உணர்ச்சிவசப்பட்டுவிட்டார்கள். திடீரென டான்ஸ் ஆடவும் துவங்கிவிட்டனர்.
இதனால், அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல், அங்கிருந்த அனைத்து பொதுமக்களுமே இந்த டான்ஸை கண்டுகளித்தார்கள். உடனே, மக்களை மகிழ்வித்த அந்த தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், அவர்களது சட்டை பாக்கெட்டில் ரூபாய் நோட்டுக்களையும் "அன்பு" பரிசாக குத்தி மகிழ்ந்தார்கள்.
முபாரக்: திண்டுக்கல் தொகுதியில் அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார்கள்.
இதனால் இரு தரப்பிலுமே பிரச்சாரங்கள் சூடுபிடித்துவருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர், சாமியார் தோட்டம் அருகே உள்ள ராஜலட்சுமி நகரில், அங்குள்ள மக்களிடம் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து, அதிமுக வேட்பாளர் முபாரக்கை ஆதரித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் ஓட்டு கேட்டு அங்கே வந்தார்.
பிரச்சார வாகனம்: இரு கட்சியின் வேட்பாளர்களும், ஒரே தெருவில் நேருக்கு நேர் சந்தித்து கொண்டனர். 2 பிரச்சார வாகனங்களுமே பக்கத்தில் பக்கத்தில் வந்து நின்றன.. இதனால், இரு தரப்பிலும் என்ன நடக்க போகிறதோ? என்ற ஆர்வம் அங்கிருந்த பொதுமக்களுக்கு ஏற்பட்டது.
அப்போது, பிரச்சார வாகனத்திலிருந்த திண்டுக்கல் சீனிவாசன் டக்கென மைக் எடுத்து, "நமக்குள் சண்டை வேண்டாம், ஒதுங்கி போய் விடுவோம்.. எம்ஜிஆர், நம்பியார் போல சண்டை போட்டுக்க வேண்டாம்.. உங்க வீரத்தை இங்கே காட்டிடாதீங்க, ஒதுங்குங்க, ஒதுங்குங்க" என்று சத்தமாக சொன்னார்.
திமுக கூட்டணி: இதைக்கேட்டதுமே சிபிஎம் வேட்பாளர் உட்பட அனைவருமே சிரித்துவிட்டார்கள். அதுமட்டுமல்ல, திமுக கூட்டணி வேட்பாளரான அவருக்கு, திண்டுக்கல் சீனிவாசன் வாழ்த்துக்களை சொல்லிவிட்டு கிளம்பினார்.
இன்றைய தினமும், திண்டுக்கல் சீனிவாசன் முருகபவனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு பெண் தனது குழந்தையை கொடுத்து, பெயர் சூட்ட சொன்னார்.
ஆரவாரம்: குழந்தையை கையில் வாங்கிய திண்டுக்கல் சீனிவாசன், "அடடே, இரட்டை இலையை பார்த்ததுமே குழந்தை சிரிக்குதே.. அதனால், எம்ஜிஆரின் பெயரான "ராமச்சந்திரன்" என்று பெயர் வைக்கிறேன்" என்றதுமே, சுற்றிநின்ற தொண்டர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தார்கள். ஆனால், உண்மையிலேயே அந்த குழந்தை எதற்கு சிரித்தது? என்றே தெரியவில்லை...!!!
-
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
அண்ணாமலைக்குப் போகிறதா கோவை வடக்கு.. சட்டென வானதி சீனிவாசன் கொடுத்த ரியாக்ஷன் -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
கொஞ்ச நஞ்சம் பேச்சா? சொந்த ஊருக்கே போங்க! அண்ணாமலைக்கு 2 தரப்பும் அழுத்தம்? களத்தில் கோவை கொதிக்குதே -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications