காசு கொடுத்தும்.. இனிக்காத ‘ஸ்வீட் பாக்ஸ்’! அமவுண்டை ஆட்டயப் போட்ட புள்ளிகள்! அப்செட்டில் வேட்பாளர்!
திண்டுக்கல்: 2026 சட்டசபை தேர்தல் களம் கிளைமாக்ஸ்-ஐ நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் தேர்தல் நிறைவடைந்து, இருக்கும் நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் திண்டுக்கல்லில் தனக்கு சாதகமான சூழல் இல்லாதவை உணர்ந்த வேட்பாளர் ஒருவர் தான் பணம் கொடுத்த நிர்வாகிகளை அழைத்து கண்டித்ததாகவும், கொடுத்த பணத்தை திரும்ப கேட்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் வீடுவீடாகச் சென்று அந்த குறிப்பிட்ட கட்சியின் நிர்வாகிகள் பணத்தை கேட்பதாகவும் சொல்கின்றனர்.
2026 சட்டமன்ற தேர்தல் வழக்கம்போல பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து வாக்கு பதிவு நடந்த இருபது நாட்கள் சூறாவளியாய் சுற்றி பிரச்சாரம் மேற்கொண்டனர் வேட்பாளர்கள்.

அந்த வகையில் திண்டுக்கல்லிலும் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் தேர்தல் சென்றது. முதன்முதலாக ஸ்டார் அந்தஸ்தை பெற்றது திண்டுக்கல் தொகுதி. அதுவும் கடும் போட்டி நிறைந்ததாகவும் இருந்தது. அதற்கு காரணம் தமிழகம் அறிந்த பிரபலங்களில் ஒருவரான திண்டுக்கல் அதிமுக சார்பில் திண்டுக்கல் களமிறங்கியடு.
திண்டுக்கல் தேர்தல்
அவரை எதிர்த்து திமுக அமைச்சர் ஐபி பெரியசாமியின் மகனும் மாவட்ட திமுக செயலாளருமான ஐபி செந்தில்குமார் களமிறங்கினார். 75 கால திண்டுக்கல் தேர்தல் வரலாற்றில் இதுவரை அதிமுகவும் திமுகவும் அதன் மாவட்ட செயலாளர்களை நேரடியாக களம் இறக்கியதில்லை. பொதுவாக அதிமுகவும் திமுகவும் கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கி வந்த நிலையில் நேரடியாக இருபெரும் தலைவர்கள் மோதுவது திண்டுக்கல் களத்தை சூடாக்கியது. இது தவிர நாம் தமிழர், தமிழக வெற்றி கழகம், ராமதாஸ் சசிகலா கூட்டணி, கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி என ஆறு முக்கிய வேட்பாளர்கள் களமிறங்கினர்.
பணம் விநியோகம்
சசிகலா தரப்பில் போட்டியிட்ட ராமு தேவர் முன்னாள் அதிமுக நிர்வாகி என்பதும் திண்டுக்கல்லில் ஓரளவு செல்வாக்கு படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதும் அதிமுக திமுக இடையே தான் நேரடி போட்டி நிலவியது. இது ஒரு புறம் இருக்க தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சியில் இரண்டு கட்சிகளை சேர்ந்தவர்கள் தாராளமாக மக்களை கவனித்தனர். ஒரு வேட்பாளர் 3000 ரூபாய் கொடுத்தால், இன்னொரு வேட்பாளர் நான்காயிரம் ரூபாய் கொடுத்தார்.
ஒரு ஓட்டுக்கு 7 ஆயிரம்
இது திண்டுக்கல்லில் மற்ற தொகுதி வாக்காளர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. ஏறக்குறைய ஒரு வாக்குக்கு 7 ஆயிரம் ரூபாய் முதல் 8000 ரூபாய் வரை வழங்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் தேர்தலில் வென்றால் இந்த டோக்கனை காண்பித்து 2000 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம் என இரண்டு கட்சிகள் டோக்கனை வழங்கினர். இந்த நிலையில் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியின் நிர்வாகிகள் பெரும்பாலானோர் வாக்காளர்களுக்கு கொடுத்த பணத்தை ஆட்டைய போட்டு விட்டதாக புகார் எழுந்தது.
திண்டுக்கல் தொகுதி
வாக்குப்பதிவு நாள் என்று குறிப்பிட்ட அந்த அரசியல் கட்சியில் வேட்பாளரின் உறவினர் திண்டுக்கல் தொகுதி முழுவதும் உலா வந்தார். அப்போது அவரை சூழ்ந்து கொண்ட வாக்காளர்கள் தங்களுக்கு பணம் வரவில்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ந்து போன அவர் அங்கேயே நிர்வாகிகளை அழைத்து கடுமையாக கண்டித்தார். இந்த நிலையில் இரண்டு கட்சிகளிடம் பணம் வாங்கிய வேட்பாளர்கள் மூன்றாவதாக ஒரு கட்சிக்கு வாக்களித்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
வேட்பாளர் அதிர்ச்சி
இந்த நிலையில் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே பண விநியோகம் செய்தும் களம் தனக்கு சாதகமாக இல்லை என்பதை உணர்ந்த வேட்பாளர் விசாரித்த போது கொடுத்த பணம் முறையாக வாக்காளர்களுக்கு சேரவில்லை என்பதை கண்டுபிடித்து விட்டாராம். இதை அடுத்து தனது ஆதரவாளர்களை களத்தில் இறக்கி விட்டுள்ள அவர் திண்டுக்கல் தொகுதி முழுவதும் அவர்களை அனுப்பி பணம் நேரடியாக வந்ததா? எவ்வளவு கொடுத்தார்கள் என விசாரித்து வருகிறார்.
சிக்கிய நிர்வாகிகள்
ஒரு சில பகுதிகளில் தங்களுக்கு பணமே வரவில்லை என அந்த கட்சியின் வாக்காளர்கள் சொன்னதால் கடும் கோபமடைந்த அவர் நிர்வாகிகள் அழைத்து போசித்ததோடு ஒழுங்கு மரியாதையாக பணத்தை கொடுத்து விடுங்கள் என மிரட்டி இருக்கிறாராம். இதை அடுத்து வேறு வழியின்றி அமுக்கிய பணத்தை எப்படியாவது திரும்ப கொடுத்து விடுவோம் என உறுதி அளித்திருக்கும் அந்த குறிப்பிட்ட கட்சியின் நிர்வாகிகள், என்ன செய்வதென தெரியாமல் புலம்பி வருகிறார்களாம். தற்போது இந்த தகவல் தான் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications