யார் நம்பிக்கைக்கும் தடையில்லை..கருவறைக்குள் சமத்துவம் வேண்டும்! முருகன் மாநாட்டில் முதல்வர் பேச்சு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முத்தமிழ் முருகன் மாநாடு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், யாருடைய நம்பிக்கைக்கும் திராவிட மாடல் அரசு தடை இல்லை எனக் கூறியுள்ளார்.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு சொந்தமான பழனி ஆண்டவர் கல்லூரியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று தொடங்கியது.

மாநாட்டினை ரத்தினகிரி பாலமுருகனடிமை ஸ்வாமிகள் கொடியேற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகள் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் வரலாற்றை பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்ட 3d வடிவமைப்பு பக்தி பாடல்கள் கண்காட்சியை அமைச்சர் ஐ.பெரியசாமி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார் தொடர்ந்து மாநாட்டை துவக்கி வைத்து பேசினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நிகழ்ச்சியில் பேசிய அவர்,"இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
இதற்காக அமைச்சர் சேகர்பாபுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். செயல்பாபு என்று என்னால் அழைக்கப்படும் சேகர்பாபு அறநிலையத்துறை அமைச்சராக வந்த பிறகு இந்த துறை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று எல்லோருடைய பாராட்டுகளையும் பெற்று இருக்கிறது. கோவில்களை கவனித்துக் கொள்ளுங்கள் என்று நான் அறநிலையத்துறையை அவரிடம் கொடுத்தேன். ஆனால் கோயிலில் குடியிருக்கும் ஒருத்தர் உங்களுக்கு அமைச்சராக கிடைத்திருக்கிறார்.
திமுக தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு கோவில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு இருக்கிறது. திடீரென மாநாடு நடத்தப்படவில்லை. பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்ட பிறகு மாநாடு நடத்தப்படுகிறது. இன்றைய ஆட்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சி தான் இன்றைய பழனி முத்தமிழ் முருகன் மாநாடு. பக்தர்கள் உட்பட அனைவரும் விரும்பும் ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கிறது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பக்தர்கள் நலனை மனதில் வைத்து கோவில் வளர்ச்சி பணிகளை தொடங்கி இருக்கிறோம்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை இருக்கும். அதில் உயர்வு தாழ்வு இல்லை. அந்த நம்பிக்கைகளுக்கு திராவிட மாடல் அரசு என்றும் தடையாக இருந்தது இல்லை. அனைவரும் நம்பிக்கைக்கு நன்மை செய்து வரும் அரசாக திராவிட மாடல் அரசு இருக்கிறது. திராவிட மாடல் அரசு என்பது எல்லாவற்றிற்கும் எல்லாம் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது.
தமிழக அரசின் கீழ் இந்து சமய அறநிலையத்துறை பல்வேறு சாதனைகளை செய்திருக்கிறது. அந்த சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் இந்த சாதனைகளுக்கு மகுடம் வைத்தது போல் தான் நடைபெற்று வருகிறது. அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு இந்த மாநாடு இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் மட்டுமல்ல தமிழ்நாடு ஆன்மீக வரலாற்றிலேயே மிகச் சிறப்பான இடத்தை பெறும். திருக்கோயில்களில் கருவறைக்குள் மனிதர்களுக்கு இடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவ வேண்டும். அனைத்து கோவில்களிலும் தமிழ் முதன்மை பெற வேண்டும். அன்பால் உயிர்கள் ஒன்றாக வேண்டும்.. அறத்தால் உலகம் நன்றாக வேண்டும்" என பேசினார்.












Click it and Unblock the Notifications