இவர் தான் முதல்வர் ஸ்டாலினின் சம்பந்தி! பழனி ஆசிரமத்தில் ஆசி பெற்ற சபரீசனின் தந்தை வேதமூர்த்தி!
திண்டுக்கல்: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் சம்பந்தியும், சபரீசனின் தந்தையுமான வேதமூர்த்தி திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் அடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்துக்கு சென்று ஆசியுடன், பிரசாதமும் பெற்றார்.
தமிழ்நாடு முதல்வராகவும், திமுக தலைவராகவும் முக ஸ்டாலின் உள்ளார். இவரது மனைவி பெயர் துர்கா. ஸ்டாலின்-துர்கா தம்பதியின் மகன் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ளார்.

அதேபோல் ஸ்டாலின்-துர்கா தம்பதியின் மகள் பெயர் செந்தாமரை. இவரது கணவர் பெயர் சபரீசன். இவர் தற்போதைய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு உறவினர் ஆவார்.
ஸ்டாலின் மகள் செந்தாமரை தனது கணவர் சபரீசனுடன் சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். முதல்வர் ஸ்டாலினின் மருமகன் என்பதால் சபரீசனும் வெளியுலகிற்கு தெரியவர ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் தான் சபரீசனின் தந்தை வேதமூர்த்தி இன்று திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலின் மலையடிவாரத்தில் ஸ்ரீமத் போகர் பழனி ஆதினத்தின் புலிப்பாணி ஆசிரமத்துக்கு சென்றார்.
இந்த ஆசிரமத்தில் சிவானந்த புலிப்பாணி பாத்திர சாமி இருக்கிறார். இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து சிவானந்தா புலிப்பாணி பாத்திர சாமியிடம் ஆசி பெறுவது வழக்கமாகும். அந்த வகையில் இன்று ஆசிரமத்துக்கு முதல்வர் ஸ்டாலினின் சம்பந்தியும், சபரீசனின் தந்தையுமான வேதமூர்த்தி வந்தார்.
வேதமூர்த்திக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு அவர் ஆசிரமத்தின் சிவானந்தா புலிப்பாணி பாத்திர சாமியிடம் ஆசி பெற்றார். அதன்பிறகு மாலை அணிவித்து அவருக்கு மரியாதை செய்யப்பட்டதோடு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி இணையதளங்களில் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications