திண்டுக்கல்லில் சொத்துக்காக சண்டையிட்ட மகன்கள்.. மனமுடைந்த பெற்றோர் தற்கொலை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட வேடசந்தூர் அருகே சொத்து பிரச்சனை காரணமாக பெற்ற பிள்ளைகள் கைவிட்டதால் முதிய தம்பதியினர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எரியோடு அருகே உள்ள முக்கையகவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொப்பனனகவுண்டர் இவருக்கு வெள்ளையம்மாள் என்ற மனைவியும், அழகர்சாமி, முத்துச்சாமி, மணி ,முத்தம்மாள் என இரண்டு ஆண் பிள்ளைகளும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இதில் அழகர்சாமி முத்துசாமி ஆகியோர் திருமணம் முடித்து தங்கள் மனைவி குழந்தைகளுடன் அதே ஊரில் உள்ள பொப்பனனகவுனடருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்கள். மணி மற்றும் முத்தம்மாள் ஆகியோரை குஜிலியம்பாறை அருகே திருமணம் செய்து கொடுத்து நிலையில், மகன்கள் இருவரும் முதிய தம்பதிகளை பாராமரிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையனையடுத்து தம்பதியினர் குஜிலியம்பாறையில் உள்ள மருமகன் வீட்டில் இருந்து வந்துள்ளனர்.

சொத்துக்காக சண்டையிட்ட மகன்கள்
பெற்றோர்களை பராமரிக்காமல் கைவிட்டாலும் அழகர்சாமி முத்துச்சாமி ஆகியோருக்கு பெற்ற தகப்பன் தாயாரிடம் சொத்து பிரித்துதரக் கோரியுள்ளனர். ஆனால் தற்போதே தங்களை பிள்ளைகள் கவனிக்காத நிலையில் சொத்துக்களை பிரித்துக் கொடுத்தால் தங்களை கவனிக்காமல் விட்டுவிடுவார்கள் என நினைத்து பொப்பனனகவுண்டர் அதற்கு சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக குஜிலியம்பாறை சென்ற முத்துச்சாமியும், அழகர்சாமியும் சொத்துக்களை பிரித்துத் தரக்கோரி அடிக்கடி சண்டை போட்டதாகவும் சொல்லப்படுகிறது.

முதிய தம்பதிகள் தற்கொலை
பெற்ற மகன்களால் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வருவதை தாங்கிக்கொள்ள முடியாத முதிய தம்பதியினர் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்துள்ளனர். மகள்களிடம் கூட சரியாகப் பேசாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு இரவு உணவுக்குப் பிறகு தூங்கச் சென்ற தம்பதியினர் காலை விடிந்து நீண்ட நேரமாகியும் எழவில்லை. மகள்கள் எழுப்பியும் இருவரும் கண் விழிக்காத நிலையில், அருகிலுள்ள மருத்துவர் ஒருவரை அழைத்துள்ளனர். பரிசோதனையில் இருவரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் கூறியுள்ளார்.

மன உளைச்சலில் விபரீத முடிவு
முதிய தம்பதிகள் தற்கொலை செய்துகொண்ட தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் சொத்து கேட்டு மகன்கள் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு சண்டையிட்டதால் மன உளைச்சலில் விவசாயத்துக்கு பயன்படுத்தும் குருணை மருந்து எனும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து எரியோடு காவல் துறையினர் இருவரின் சடலத்தையும் கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மகள்கள், மகன்களிடம் விசாரணை
இதைத்தொடர்ந்து எரியோடு போலீஸார் அழகர்சாமி மற்றும் முத்துசாமி, மணி, முத்தம்மாள் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், சொத்து பிரச்சனை காரணமாக பெற்ற பிள்ளைகள் கைவிட்டதால் வயதான தம்பதியினர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications