Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூட்டணிக்கு ரூ.100 கோடி? யாருக்கு கொடுத்தீங்க.. அதிமுக திண்டுக்கல் சீனிவாசனை கேட்கும் பாலகிருஷ்ணன்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: கடந்த காலங்களில் அதிமுகவுடன் கூட்டணிக்கு வர எந்த கட்சி எவ்வளவு பணம் கேட்டார்கள் நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தீர்கள் என்பதை, அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சி பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் வெளிப்படையாக சொல்ல வேண்டும், பொத்தாம் பொதுவாக பேசக் கூடாது என சிபிஎம் மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன் காட்டமாக கூறியுள்ளார்.

2 நாட்கள் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வதற்காக கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் திண்டுக்கல் வந்திருந்தனர்.

dindigul k balakrishnan dindigul srinivasan

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களிடம் அதானி 2,200 கோடி லஞ்சம் கொடுத்து தான் முதலீட்டை பெற்றுள்ளார். இது தொடர்பாக அமெரிக்காவில் நீதிமன்றம் அதானி அவர் மருமகன் உட்பட ஏழு பேர் மீது பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.

இவ்வளவு பெரிய முறைகேட்டை நடந்ததை அங்குள்ள பங்கு மார்க்கெட் நிறுவனம் கண்டு பிடித்துள்ளது ஆனால் இந்தியாவில் உள்ள சிபிஐயையோ அமலாக்கத்துறையோ கண்டுகொள்ளவில்லை. மத்திய அரசு ஏன் இவ்வளவு பெரிய முறைகேட்டை இவர்கள் கண்டு பிடிக்கவில்லை. அமெரிக்க நிறுவனம் சொன்ன பிறகாவது மத்திய அரசு ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என அந்த நிறுவனத்தின் சார்பில் பதில் கூறப்பட்டுள்ளது. இதனை மோடி அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.

அதானி என்பது முகம் தான் பின்னால் இருப்பதும் நரேந்திர மோடி தான். நரேந்திர மோடியின் பினாமியாக இருப்பதால் தான் அதானி மீது எவ்வளவு பெரிய ஊழல் குற்றச்சாட்டு வந்தாலும் மோடி அரசாங்கம் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பது கிடையாது. அவர்களுக்கு சம்மன் அனுப்புவதில்லை. விசாரணைக்கு கூட அழைப்பது இல்லை.

அதானி அம்பானி நடத்தக்கூடிய மோசடியான தொழில் நிறுவனத்திற்கு முழுக்க பின்புலமாக இருப்பது மோடி இவ்வளவு பெரிய சர்ச்சை வந்த பிறகு மோடி ஏன் அதானியை ஏன் கைது செய்யவில்லை. அமெரிக்க நீதிமன்றமே பிடிவாரண்டு போட்டிருக்கும் பொழுது நீங்கள் ஏன் பிடிவாரண்டு போட்டு அவரை கைது செய்யவில்லை. சம்பவம் நடந்தது இந்தியாவில் லஞ்சம் கொடுத்தது வாங்கினது எல்லாம் இந்தியாவில் தான்.

மத்திய அரசு உடனடியாக அதானியை கைது செய்ய வேண்டும் முறையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். நாடு முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள் ஊழலை எதிர்ப்பவர்கள் இதற்கு எதிராக போராட்டங்கள் நடத்த வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாங்கள் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறோம். உடனடியாக ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் முறைகேடு பட்டியலில் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி நாங்க அதானியுடன் உடன்பாடு செய்து கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார்.

தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை மத்திய அரசு வாங்கி மாநிலங்களுக்கு அதிக விலைக்கு விநியோகம் செய்கிறார்கள். நான் தமிழக முதலமைச்சரை கேட்டுக் கொள்வது தமிழ்நாடு அந்தப் பட்டியலில் பெயர் வந்துள்ளதால் இது சம்பந்தமாக தமிழக அரசு விசாரணைக்கு தெளிவுபடுத்த வேண்டும் முழுமையான விவரங்கள் என்னவென்று தெரிவிக்க வேண்டும்.

திருச்சியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும் பொழுது கூட்டணி கட்சிகளுக்கு சீட்டு மற்றும் கோடிக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டும் என பேசியுள்ளார். கூட்டணிக்கு வருபவர்கள் பணம் கேட்பார்கள் சீட்டு கேட்பார்கள் என்ன பொத்தாம் பொதுவாக சொன்னால் இதற்கு என்ன அர்த்தம் உங்களிடம் யார் பணம் கேட்டார்கள் என பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

ஏன் தயங்குகிறீர்கள் பொத்தாம் பொதுவாக சொன்னால் எப்படி நம்பகத் தன்மையாக இருக்கும். தமிழகத்தை பொறுத்தவரை திமுக அதிமுக இரண்டும் பெரிய கட்சிகளாக இருந்தாலும் கூட்டணி இல்லாமல் அந்த கட்சிகளை வெற்றி பெறுவது ஆட்சிக்கு வருவது முடியாத காரியம். அப்படி சூழல் இல்லை. யார் பணம் கேட்டார் நீங்க எவ்வளவு பணம் கொடுத்தீர்கள் என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும்." என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+