காலக் கொடுமை! ஆங்கிலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த திண்டுக்கல் மாநகராட்சி- கொந்தளித்த சிபிஎம்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் பட்ஜெட் அறிக்கை ஆங்கிலத்தில் தாக்கல் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாநகராட்சியின் இந்தப் போக்கு மாமன்ற கூட்டத்தில் சிபிஎம் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால் ஒரு மாநகராட்சியாக திண்டுக்கல் இன்னமும் உருமாற்றம் அடையவில்லை.

இந்த நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பட்ஜெட் உரை என ஆங்கிலத்தில் ஒரு கோப்பு தரப்பட்டது. அவ்வளவுதான்.. சிபிஎம் கவுன்சிலர்கள் கொந்தளித்து போயினர்.
இது தொடர்பாக திண்டுக்கல் மாநகராட்சி சிபிஎம் கவுன்சிலர் கணேசன் மாமன்றத்தில் பேசியதாவது: நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக தமிழ் வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் திண்டுக்கல் மாமன்ற பட்ஜெட் ஆங்கிலத்தில் இருப்பது நல்லதல்ல. நான் சாதாரண பாமரன். எனவே எனக்கு புரியும் தமிழ் மொழியில் பட்ஜெட் நகல் தர வேண்டும்.
இந்த பட்ஜெட் பற்றாக்குறை பட்ஜெட்டாக உள்ளது. வருவாயை பெருக்க எந்த நடவடிக்கையும் இந்த பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை. வருகிற காலங்களில் வருவாய் பெருக்க என்ன ஏற்பாடு உள்ளது? ஓய்வு பெற்ற மாநகராட்சி பணியாளர்களுக்கு, துப்புரவு பணியாளர்களுக்கு பணப்பலன்கள் 22 கோடி ரூபாய் பாக்கி உள்ளது. இந்த பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். அதே போல் மின்வாரியத்திற்கு ஒரு கோடி பாக்கி உள்ளது. ஒப்பந்தகாரர்களுக்கு பல கோடி பாக்கி உள்ளது. எனவே மாமன்றம் இந்த பட்ஜெட்டில் இந்த செலவீனங்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு குடிநீர் வடிவால் வாரியத்திற்கு பணம் செலுத்தி குடிநீரை மாநகராட்சி விலைக்கு வாங்குகிறது. ஆதலால் மாநகராட்சிக்கு சொந்தமான ஆத்தூர் காமராஜர் அணையை ஆய்வு செய்து அந்த தண்ணீரை முழுக்க பயன்படுத்த வேண்டும். மேலும் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் இந்த முதல் பட்ஜெட் கூட்டத்தில் அவசியம் கொள்ள வேண்டும். ஆனால் அவர் கலந்து கொள்ளாதது வருத்தமளிக்கிறது. முறைகேடாக பாதாள சாக்கடை இணைப்பு கொடுத்தது. குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை முறைப்படுத்தி வருவாயை பெருக்க வேண்டும். இவ்வாறு கணேசன் கூறினார். இதேபோல சிபிஎம் கவுன்சிலர்ர் ஜோதிபாசும் ஆங்கிலத்தில் பட்ஜெட் உரை கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications