பழனி முருகன் கோவிலில் தைப்பூச விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை-திண்டுக்கல் ஆட்சியர்
திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலில் ஜனவரி 18-ந் தேதி நடைபெறும் தைப்பூச விழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாபரவல் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து ஜனவரி 31-ந் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஜனவரி 14 முதல் ஜனவரி 18 வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 16-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனால் மதுரை அலங்காநல்லூரில் ஜனவரி 16-ந் தேதி நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி ஜனவரி 17-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல் ஜனவரி 18-ந் தேதியன்று தைப்பூசம் என்பதால் முருகன் கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் என்ன செய்வார்கள் என்கிற குழப்பம் இருந்தது. இந்த நிலையில் பழனி முருகன் கோவிலில் ஜனவரி 18-ந் தேதி தைப்பூச நாளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் அறிவித்துள்ளார்.
மேலும் நாளை தைப்பூச கொடியேற்ற நிகழ்வும் பக்தர்கள் இல்லாமல் நடைபெறும்; தைப்பூச திருவிழா யூ டியூப் மூலம் ஒளிபரப்பு செய்யப்படும். தைப்பூச திருவிழாவில் 10 மண்டகபடிதாரர்களுக்கும் அனுமதி இல்லை. ஜனவரி 21-ல் நடைபெறும் தெப்ப உற்சவத்திலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications