திண்டுக்கல் 20 நாள் டாஸ்மாக் வருமானம் ரூ.100 கோடி.. வரி மட்டும் இவ்வளா.. அதிர வைத்த உண்மை
திண்டுக்கல்: முத்து, கல்யாணி, சிவசாமி, காளிமுத்து உள்ளிட்ட 30 பேர் திண்டுக்கல்லில் சாலை விரிவாக்கத்திற்காக கடைகளை இழந்தனர். அவர்களுக்கு இழப்பீடு கோரிய வழக்கில், இழப்பீட்டு நிலுவைத்தொகை வழங்கும் வரை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளின் தினசரி வருமானத்தை திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டு, வங்கிக்கணக்கில் செலுத்தும்படி கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கில், பதில் அளித்த தமிழக அரசு, திண்டுக்கல் மாவட்டத்தில் 20 நாள் டாஸ்மாக் வருமானம் ரூ.100 கோடி என பதில் அளித்தது.
2017ம் ஆண்டு வரை திண்டுக்கல்லை சேர்ந்த முத்து, கல்யாணி, சிவசாமி, காளிமுத்து உள்ளிட்ட 30 பேர், கடைகள் நடத்தி வந்துள்ளார்கள். 2017-ம் ஆண்டில் சாலை விரிவாக்கத்துக்காக அவர்களது கடைகள் நிலத்தை கையகப்படுத்தியதற்கான இழப்பீட்டு தொகையை வழங்கும்படி திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டு 2021-ம் ஆண்டில் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், ஏற்கனவே மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி இழப்பீட்டு தொகையை வழங்க உத்தரவிட்டது. ஆனாலும் அரசு உரிய தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவில்லை. இதனை பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டனர். இதையடுத்து வழக்கை மீண்டும் விசாரித்த உயரநீதிமன்றம், இழப்பீட்டு நிலுவைத்தொகை வழங்கும் வரை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளின் தினசரி வருமானத்தை திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டு, வங்கிக்கணக்கில் செலுத்தும்படி கலெக்டருக்கு உத்தரவிட்டது.
அந்த உத்தரவையும் அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. இதனால் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக நீதிபதிகள் கடந்த நவம்பர் 6-ந்தேதி உத்தரவிட்டனர். இந்தநிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன், திண்டுக்கல் கலெக்டர் சரவணன் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள்.
அப்போது தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் ஆஜராகி வாதிடுகையில், "சாலை விரிவாக்கம் விவகாரத்தில் இழப்பீட்டுத்தொகை வழங்கும்படி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் டாஸ்மாக் நிர்வாகம் தனியாக செயல்பட்டு வருகிறது. இதனால் இழப்பீட்டுத்தொகைக்காக டாஸ்மாக் கடைகளின் வருமானத்தை கோர்ட்டில் டெபாசிட் செய்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. இதனால் உரிய அவகாசம் அளிக்க வேண்டும் என வாதாடினார்.
பின்னர் மனுதாரர் வக்கீல் கே.முத்து கணேசபாண்டியன், மனுதாரர்கள் இழப்பீட்டுத்தொகைக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் நிலை உள்ளது என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் , சாலை பணிகளுக்காக நிலம் கொடுத்தவர்கள் இழப்பீடு கேட்டு, பிச்சைக்காரர்களை போல கையேந்தி நிற்கிறார்கள். அப்படி இருக்கும்போது அரசின் நிலைப்பாடு ஏற்கத்தக்கதல்ல என அதிருப்தி தெரிவித்தார்கள்.
பின்னர் ஏற்கனவே உத்தரவிட்டதுபோல குறிப்பிட்ட நாட்களின் டாஸ்மாக் கடை வருமானத்தை உடனடியாக திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்துவிட்டு வாருங்கள் என உத்தரவிட்டு, விசாரணையை சிறிது நேரத்துக்கு ஒத்திவைத்தார்கள். அதன்படி இந்த வழக்கு பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், கடந்த மாதம் 16-ந் தேதி முதல் இந்த மாதம் 5-ந்தேதி வரையிலான, கிட்டத்தட்ட 20 நாளுக்கான திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் கடைகளின் மொத்த வருமானம் ரூ.100 கோடியே 57 லட்சத்து 51 ஆயிரத்து 45 ஆகும். இதில் மது கொள்முதல் தொகை ரூ.52 கோடியே 44 லட்சத்து 99 ஆயிரத்து 170-ம், மாநில அரசின் வாட் வரி தொகை ரூ.46 கோடியே 96 லட்சத்து 85 ஆயிரத்து 738 என மொத்தம் ரூ.99 கோடியே 41 லட்சத்து 84 ஆயிரத்து 908-ஐ செலுத்திவிட்டோம். மீதம் ரூ.1 கோடியே 15 லட்சத்து 66 ஆயிரத்து 137 கையிருப்பு உள்ளது. இந்த தொகையில்தான் வாகன வாடகை, ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்ட செலவுகளும் செய்யும் நிலை உள்ளது. இருந்தாலும் இந்த கோர்ட்டு உத்தரவின்பேரில் ரூ.1 கோடியே 15 லட்சத்தை திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டு கணக்கில் செலுத்தி விடுகிறோம் என கூறப்பட்டு இருந்தது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், யானைப்பசிக்கு சோளப்பொரி போல இந்த தொகை இருக்கிறது. இந்த விவகாரத்தில் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம், தமிழக அரசுக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பித்தால், மேற்கண்ட டெபாசிட் தொகையை அரசு வாபஸ் பெற்றுக்கொள்ளலாம். இல்லையென்றால் ஏற்கனவே நாங்கள் உத்தரவிட்டபடி வருகிற திங்கட்கிழமை முதல் தினசரி டாஸ்மாக் கடை வருமானத்தை மாவட்ட நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். அடுத்தகட்ட விசாரணையை வருகிற 21-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஊரே ஒன்னு சேர்ந்து..செருப்பால் அடிச்சு! என்னங்க நடக்குது இங்க.. திருவிழானாலும் ஒரு நியாயம் வேண்டாமா? -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications