திண்டுக்கல் ஒரு தினுசுதான்.. வ.உ.சி., வேலுநாச்சியார் வேடத்துடன் வந்தால் 2 சிக்கன் பிரியாணி இலவசம்!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வ.உ.சி., வேலுநாச்சியார் வேடமணிந்து வரும் குழந்தைகளுக்கு 2 சிக்கன் பிரியாணி இலவசமாக வழங்கப்படும் என்று ஹோட்டல் முஜிப் பிரியாணி அறிவித்திருப்பது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
டெல்லியில் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தன்று மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு இடம்பெறும். இந்த ஆண்டு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்புக்கு மத்திய பாஜக அரசு மறுத்தது.

இத்தனைக்கும் வீரத்தாய் வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், வ.உ.சி. பாரதியார் என தேச விடுதலைக்காகப் போராடி மாண்ட மான மறவர்களின் திருவுருவங்களே அதில் இடம்பெற்றிருந்தன. ஆனால் வ.உ.சியை தெரியாது, வேலுநாச்சியாரை தெரியாது என கூறி திமிராக தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் மத்திய அரசு அனுமதி மறுத்த அலங்கார ஊர்திகள் இடம்பெறும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அத்துடன் தந்தை பெரியார், திருப்பூர் குமரன், காமராஜர் என எண்ணற்ற தலைவர்கள் உருவங்களுடன் அலங்கார ஊர்திகள் இன்று சென்னை மெரினாவில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்றன.
இந்நிலையில் தமிழர்களின் வீரத்தை நினைவு கூறுவோம் என்கிற முழக்கத்துடன் திண்டுக்கல் ஹோட்டல் முஜிப் பிரியாணி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், வ.உ.சி, வேலுநாச்சியாரை யார் என கேட்க நீங்க யார்? நம் வீரர்களை நாம் நினைவு கூறுவோம்...வ. உ .சிதம்பரனார் , வீரமங்கை வேலுநாச்சியார், ஆசாத், பாரதியார். இவர்களைப் போன்று மாறுவேடத்தில் வரும் குழந்தைகளுக்கு இரண்டு சிக்கன் பிரியாணி இலவசமாக கொடுக்கப்படும். தமிழர்களின் வீரத்தை எடுத்துரைப்போம் இந்த உலகத்திற்கு.. என அறிவித்துள்ளது. திண்டுக்கல் ஹோட்டல் முஜிப் பிரியாணியின் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

இதே திண்டுக்கல் ஹோட்டல் முஜிப் பிரியாணி ஏற்கனவே பழங்கால நாணயசேமிப்பு உள்ளிட்டவைகளை முன்வைத்து இலவச பிரியாணி வழங்கியது. அதேபோல் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏழைகளுக்கு பசியாற்றியது திண்டுக்கல் ஹோட்டல் முஜிப் பிரியாணி என்பது குறிப்பிடத்தக்கது. திண்டுக்கல்னாவே தினுசாத்தான் யோசிப்பாய்ங்க போல!
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications