லுங்கியோடு வந்து.. திண்டுக்கல் ரோட்டில் ஒரே பரபரப்பு.. "இயேசப்பா - கர்த்தாவே".. சார் யாருனு பாருங்க
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டமே அதிர்ந்து போய் உள்ளது.. இந்த நபர் யார்? எங்கே இருக்கிறார்? என்று தெரியவில்லை.. போலீசாரும் வலை வீசி தேடி கொண்டிருக்கிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி என்ற இடத்தில், செயின்ட் பிரான்சிஸ் சர்ச் ஒன்று அமைந்துள்ளது... சுற்றுவட்டார பகுதியிலிருந்து இந்த சர்ச்சுக்கு தினமும் ஏராளமான கிறிஸ்தவர்கள் வந்து பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள்.. அதனால், இந்த பகுதியிலேயே இது மிகவும் பிரசித்தி பெற்ற தேவாலயம் ஆகும்..

உண்டியல்: தினமும் ஏராளமானோர் சர்ச்க்கு வந்து செல்லும்நிலையில், அங்கிருக்கும் உண்டியலிலும் காணிக்கையை செலுத்திவிட்டு செல்வது வழக்கம்.. ஒருகுறிப்பிட்ட நாளில், காணிக்கையை தேவாலய பணிகளுக்காக பயன்படுத்துவார்கள்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே, இந்த உண்டியலில் செலுத்தும் பணம் காணாமல் போய்கொண்டே இருந்ததாம்.. உண்டியலில் போடும் பணம் எங்கே மாயமாகிவிடுகிறது? என்று சர்ச்சில் உள்ள நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியும் குழப்பமும் மேலிட்டது.
அதிர்ச்சி: இதனால், சர்ச்சில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்யலாம் என்று முடிவெடுத்தனர். அதன்படியே, கடந்த மாதம் 29-ம் தேதி, தேவாலய நிர்வாகிகள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்..
உண்டியல் பணம் நீண்ட நாட்களாகவே மாயமாகியிருந்ததால், கேமராவை பின்னோக்கி ஓடவிட்டு ஆய்வு செய்தனர்.. அப்போதுதான் அந்த நபர் சிக்கினார்.. டி-ஷர்ட் லுங்கியுடன் சர்ச்சில் நுழைவதை தேவாலய நிர்வாகிகள் பார்த்தனர்.. ஆனால், அந்த சர்ச்சில் அவரை இதற்கு முன்பு யாரும் பார்த்தது கிடையாது என்பதால், கேமராவில் அந்த நபரின் மீது சந்தேகம் வந்தது..

வீடியோ: தொடர்ந்து அந்த வீடியோவை ஆய்வு செய்தபோது, சர்ச்சுக்குள் நுழைந்த அந்த நபர், மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்தார்.. பிறகு, இயேசு நாதர் சிலை முன்பு மண்டியிட்டு ஜெபம் செய்ய ஆரம்பித்தார்.. நீண்ட நேரம் பிரார்த்தனை செய்துவிட்டு, சர்ச்சுக்குள் சுற்றுமுற்றும் ஒரு நோட்டம் விட்டார்.. தேவாலயத்தில் யாருமில்லை என்பது தெரிந்ததுமே, டக்கென அங்கிருந்த உண்டியலில் இருந்து பணத்தை எடுத்து, தன்னுடைய டி-ஷர்ட் பாக்கெட்டுக்குள் திணித்துவிட்டார்.
இவர் பாக்கெட்டுக்குள் பணத்தை திணித்தபோது, திடீரென ஒரு பெண் சர்ச்சுக்குள் பிரார்த்தனை செய்ய நுழைந்தார்.. அந்த பெண்ணை பார்த்ததுமே, மறுபடியும் முழங்காலிட்டு ஜெபம் செய்வது போல நடிக்க ஆரம்பித்துவிட்டார் டி-ஷர்ட் நபர்.. பிறகு மெதுவாக அங்கிருந்து வெளியேறி சென்றுவிட்டார். இது அத்தனையும் அந்த வீடியோவில் பதிவாகியிருந்ததை பார்த்து தேவாலய நிர்வாகிகள் உறைந்துபோனார்கள்.
ஆதாரங்கள்: உடனே இந்த வீடியோ ஆதாரத்துடன் திண்டுக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினார்கள்.. இந்த கொள்ளை தொடர்பாக புகாரும் தந்தார்கள். போலீசாரும் இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்
போலீசார் இந்த வீடியோவை பார்த்தபிறகுதான் தெரிந்தது, சம்பந்தப்பட்ட நபர் ஏற்கனவே பல இடங்களில் திருடியவராம்.. இதே சர்ச்சுக்கு வந்து பலமுறை உண்டியலில் இருந்து காசு எடுத்து சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது.. ஒவ்வொருமுறை சர்ச்சுக்கு வரும்போதும், கர்த்தரின் முன்பாக மண்டியிடடு, பாவ மன்னிப்பி கேட்டுவிட்டு, அதற்கு பிறகே, உண்டியலில் இருந்து காசு திருடுவதை வாடிக்கையாக வைத்திருந்ததும் கண்டுபிடிப்பட்டுள்ளது. அதுவும், மெழுகுவர்த்தியை ஏத்தி வைத்துவிட்டுதான் திருடுவாராம்.
மெழுகுவர்த்தி: இவர் அதே ஏரியாவை சேர்ந்தவர் இல்லை என்றும் தெரியவந்துள்ளது. அதனால், கேமராவில் பதிவான அவரது அடையாளத்தை வைத்து போலீசார் தேடிக் கொண்டிருக்கிறார்கள்..
காணிக்கையை திருடிக்கொண்டு போகும் இந்த நபரின் வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. கர்த்தரிடம் வேண்டிக்கொண்டு, பயபக்தியுடன் வந்து சென்ற அந்த நபர் யாருன்னு தெரியலையே.. ஏசப்பா...!!
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications