நீ டெல்லிக்கு ராஜாவாக இருந்தாலும்... லியோனிக்கு தொடரும் திண்டுக்கல் திமுகவினரின் கடும் எதிர்ப்பு
திண்டுக்கல்: திமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட உடனே சொந்த மாவட்ட திமுகவினராலேயே மிக கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டிருக்கிறார் திண்டுக்கல் ஐ. லியோனி.
பள்ளி ஆசிரியராக இருந்து பட்டிமன்ற பேச்சாளராகி திமுகவில் ஐக்கியமானவர் திண்டுக்கல் ஐ. லியோனி. திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர்களில் ஒருவராக நேற்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனால் நியமிக்கப்பட்டார் லியோனி.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திண்டுக்கல் லியோனி போஸ்டர்களை ஒட்டினார். திண்டுக்கல் மாவட்டத்தில் லியோனி ஒட்டிய இந்த போஸ்டர்கள் ஆகப் பெரும் அக்கப்போரை வரவழைத்துவிட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில்தான் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஐ. பெரியசாமி, மாவட்ட செயலாளர்கள் ஐபி செந்தில்குமார், அர. சக்கரபாணி இருக்கும் போது அவர்கள் படம் இல்லாமல் எப்படி போஸ்டர் ஒட்டலாம் என்பதுதான் கொந்தளிப்பின் காரணம்.

லியோனி படம், பெயர் கிழிப்பு
இதனால் ஆத்திரமடைந்த திண்டுக்கல் ஐ. பெரியசாமியின் ஆதரவாளர்கள் லியோனி ஒட்டிய போஸ்டர்களில் அவரது படத்தையும் பெயரையும் மட்டும் கிழித்து எறிந்து ஆவேசத்தைக் காட்டினர். அத்துடன் சமூக வலைதளங்களில் கடுமையாகவும் லியோனி விமர்சிக்கப்பட்டும் வருகிறார்.

வாய்ப்பு தந்தது ஐபி
குளத்தூர் கிருஷ்ணகுமார் நாகராஜன் என்ற திமுக நிர்வாகி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மாவட்ட கழகத்தின் செயலாளர் அண்ணன் இ.பெ.செந்தில்குமார் அவர்களின் திருமண மேடையில் உன்னை முதன் முதலில் அறிமுகம் செய்து வைத்து அருகில் அமரவைத்து பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்த எங்கள் அமைச்சர் (ஐ.பெரியசாமி) எங்கே.. கல்விப் பணிகள் தோல்வியுற்ற உன்னை மேடையில் அமர்ந்து வாய்ப்பு கொடுத்த எங்கள் அமைச்சர் எங்கே... ஊர் ஊராய் சென்று பேசுவதற்கு மேடை கொடுத்து அந்தப் பேச்சுக்கு உனக்குத் தகுந்த கூலியும் கொடுத்து உன் பொருளாதாரத்தை உயர்த்திய எங்கள் அமைச்சர் எங்கே..

டெல்லிக்கு ராஜாவானாலும் இங்க..
உன்னை பாட்டாளி மக்கள் கட்சி நண்பர்கள் துவசம் செய்ய முற்பட்ட பொழுது கழக வழக்கறிஞர்களை அனுப்பி ஒவ்வொரு காவல் நிலையத்திலும் புகார் தெரிவித்து உனக்கு பாதுகாவலாக இருந்த எங்கள் அமைச்சர் எங்கே... நன்றி கெட்டவனே டெல்லிக்கு ராஜாவாக இருந்தாலும் எங்கள் அமைச்சருக்கு நீ சாதாரண தொண்டன் என்பதை உன் மனதில் வைத்துக் கொள் இன்றும் எங்கள் அமைச்சரின் பாதுகாப்பு கவசம் நீக்கப்படும் ஆயின் உன்னை துவசம் செய்வதற்கு ஆயிரம் பேர் தயாராக இருக்கிறார்கள் உடனே மன்னிப்பு கேள் இல்லையென்றால் உன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் உன் மேடை பணியை தொடங்கு என கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

ரொம்ப தப்பு என எச்சரிக்கை
இதேபோல் பல இடங்களில் லியோனியின் போஸ்டரை கிழித்து அதை வீடியோவாகவும் படங்களாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் திண்டுக்கல் திமுகவினர் பதிவிட்டும் வருகின்றனர். அதில், லியோனி உனக்கு அடையாளம் அளித்தவர்களை மறக்காதே! பதவி இன்று வரும் நாளை போகும்.. ரொம்ப தப்பு..எனவும் பதிவிட்டு வருகின்றனர்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா










Click it and Unblock the Notifications