திண்டுக்கல் திமுகவில் ஒரே ரகளை! மல்லுக்கட்டிய மாநகராட்சி பெண் கவுன்சிலர் வீடியோவில் சரமாரி புகார்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட திமுகவில் மாநகராட்சி கவுன்சிலர்களிடையே மோதல் இப்போது பகிரங்கமாக வெடித்திருக்கிறது. சக திமுக கவுன்சிலரின் கணவரே தம்மை திமுகவுக்கு எதிரியாக சித்தரித்து வருவதாக வீடியோ பதிவு வெளியிட்டு சரமாரியான புகார் தெரிவித்துள்ளார் மற்றொரு கவுன்சிலர் இந்திராணி விஜயன்.
திண்டுக்கல் திமுகவில் நன்கு அறியப்பட்ட பெண்களில் கவுன்சிலர் இந்திராணி விஜயனும் ஒருவர். திண்டுக்கல் மாநகராட்சியை திமுக கைப்பற்றிய போது, மேயர் பதவிக்கு இந்திராணி விஜயன் பெயரும் அடிபட்டது. ஆனால் மேயர் பதவி இளமதிக்கு போனது.

இதன்பின்னர் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற திண்டுக்கல் மாநகராட்சி மன்ற கூட்டத்தில், நான் என்ன ரப்பர் ஸ்டாம்ப்பா? 16 மாதங்களாக மாநகராட்சியில் எந்த பணியுமே நடக்கவில்லை என பகிரங்கமாக இந்திராணி விஜயன் குற்றம் சாட்டினார். இதனால் திமுக மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஒருவழியாக கவுன்சிலர் இந்திராணியை இருவரும் சமாதானம் செய்தனர்.
அண்மையில் திண்டுக்கல் மாநகர மகளிர் அணி அமைப்பாளர் பதவி இந்திராணிக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று வீடியோ பதிவு ஒன்றை குமுறலுடன் வெளியிட்டுள்ளார் இந்திராணி விஜயன். அதில், சக கவுன்சிலரான சுவாதி என்பவரது கணவர் கோல்ட் ஸ்டார் ஜெயராமன், தம்மை திமுகவுக்கு எதிராக சித்தரிக்கிறார்; இதற்காக திமுகவினருக்கு நெருக்கடி தருகிறார் என்றும் ஒரு பெண் அரசியலுக்கு வருவதை சகிக்கவே முடியாதா? எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார் இந்திராணி விஜயன்.
மேலும் இந்த விவகாரத்தில் மூத்த அமைச்சரான ஐ. பெரியசாமி, திமுக மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில் குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; கழகம் தான் என்னுடைய உயிர்; திமுக வாழ்க என்றும் கண்ணீருடன் இந்திராணி விஜயன், சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் இப்போது திண்டுக்கல் திமுகவில் ஹாட் டாபிக்காக விவாதிக்கப்படுகிறது.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications