திருப்பூர் பெண்ணுக்கு குபீர்னு ஏறிய டிமாண்டு.. யாரிந்த தம்பதி? திண்டுக்கல் நிதி நிறுவனருக்கு தேவையா
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி பைபாஸ் ராமையன்பட்டி அருகே தரைப்பாலத்தின் அருகே சில நாட்களுக்கு முன்பு கயிற்றால் கட்டப்பட்ட அட்டைப்பெட்டியில் கை, கால்கள் அட்டைப்பெட்டியில் கட்டப்பட்ட நிலையில் ரத்த காயங்களுடன் ஆண் சடலம் இருந்தது. தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், தற்போது உண்மை குற்றவாளிகள் கைதாகி உள்ளனர். குற்ற சம்பவத்தை மறைக்க காரணமாக இருந்த குட்டி யானை வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் குபேந்திரன்.. தனியார் நிதி நிறுவன அதிபராக உள்ள குபேந்திரனுக்கு 58 வயதாகிறது.. கடந்த 18ம் தேதி குபேந்திரன் சடலமாக மீட்கப்பட்டார்.

பழநி பைபாஸ் ரோட்டில் தரைப்பாலம் அருகே அட்டை பெட்டியில், குபேந்திரனின் சடலம் கிடந்தது.. அவரது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், கிடந்தது..
ஆதாரங்கள் சிக்கின
இதையடுத்து, திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.. மேலும் குபேந்திரனின் செல்போன் பதிவுகள், அந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்கள் என அத்தனை விசாரணையையும் போலீசார் முன்னெடுத்தனர்.
இதில் சிசிடிவி கேமராவில் , 2 பெண்கள் உள்பட 3 பேர் டூவீலரில் வந்து, தரைப்பாலத்தில், கயிற்றால் கட்டப்பட்ட அட்டை பெட்டியை வீசி செல்வது பதிவாகியிருந்தது.. பிறகு அந்த டூவீலரின் நம்பரை வைத்து டிரேஸ் செய்யப்பட்டதில், கண்ணன் என்ற 54 வயது நபருடையது என்பது தெரியவந்தது.
குபேந்திரன் உல்லாசம்
இதையடுத்து போலீசார் கண்ணனை பிடித்து விசாரித்தனர்.. அப்போதுதான், தன்னுடைய 59 வயது மனைவி சாந்தி, அவிநாசியை சேர்ந்த 26 வயது பெண்ணுடன் சேர்ந்து, குபேந்திரனை கொலை செய்ததை கண்ணன் ஒப்புக் கொண்டார்.
இதுகுறித்து கைதான தம்பதியினர் வாக்குமூலம் தந்துள்ளனர். அதில், "நாங்கள் எங்கள் வீட்டிலேயே இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தோம். அப்போது குபேந்திரன் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து செல்வார். குபேந்திரனுக்காகவே கோவை, திருப்பூரில் இருந்து இளம்பெண்களை வரவழைப்போம்.
திருப்பூர் தரைப்பாலம்
அப்படித்தான், கடந்த 18ம் தேதியும் திருப்பூரில் இருந்து 26 வயது பெண்ணை வரவழைத்தோம்... இதனால் பேசிய தொகையைவிட சற்று கூடுதலாக பணம் கேட்டோம். அதற்கு குபேந்திரன் மறுப்பு சொல்லவும், வாக்குவாதம் வெடித்தது. இறுதியில் கைகலப்பு வரை சென்றது. நாங்கள் அனைவருமே சேர்ந்து குபேந்திரனை ஆவேசத்தில் கீழே தள்ளிவிட்டோம். இதில், எதிர்பாராதவிதமாக மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் இறந்துவிட்டார்.
இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல், குபேந்திரனின் சடலத்தை கட்டி அட்டை பெட்டியில் வைத்து, தரைப்பாலம் அருகே வீசி விட்டோம்" என்றனர்.
இந்த வாக்குமூலத்தையடுத்து, தம்பதி உட்பட 3 பேரையும் கைது செய்த போலீசார், சடலத்தை மறைக்க உதவிய வாகனத்தையும் பறிமுதல் செய்து, விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications