திண்டுக்கல்லில் ரீட்டா அசிங்கமாக சிக்கிட்டாங்க.. அரசு அதிகாரியிடம் உல்லாசத்தில் தவெக பெண் பிரமுகர்
திண்டுக்கல்: திண்டுக்கல் பெண் ஒருவர், வசதி படைத்த நபர்களுக்கு குறி வைத்து, பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.. மதிக்கத்தக்க தோற்றத்தில் காணப்படும் அந்த பெண், தவெக கட்சியில் உறுப்பினராகவும் இருக்கிறாராம்.. இவரை விசாரணைக்கு உட்படுத்தியபோதுதான், பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாகின.. தற்போது சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை விரிவடைந்து வருகிறது.
திண்டுக்கல்லில் அரசு அதிகாரி உள்பட பலருடன் உல்லாசம் அனுபவித்ததை வீடியோ எடுத்து, லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டிய தவெக பெண் பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் அருகே சின்ன அய்யங்குளத்தை சேர்ந்தவர் ரீட்டா.. இவருக்கு 48 வயதாகிறது.. தமிழக வெற்றி கழக உறுப்பினரான இவர், அக்கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்துள்ளார்.
அரசு அதிகாரி
இந்த பெண், திண்டுக்கல்லை சேர்ந்த அரசு பொதுப்பணித்துறை பொறியாளரிடம் தகாத உறவில் இருந்ததாக தெரிகிறது. அந்த அதிகாரிக்கு 57 வயதாகிறதாம்.. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தும் வந்துள்ளார்களாம்..
அதிகாரியுடன் உல்லாசமாக இருந்ததை, ரகசியமாக வீடியோ எடுத்து வைத்து கொண்ட ரீட்டா, அதை அவரிடமே அடிக்கடி பணம் பறித்து வந்துள்ளார்.. ஆயிரக்கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டிருந்த ரீட்டா, பிறகு லட்சக்கணக்கில் கேட்க ஆரம்பித்தாராம். அப்படி தராவிட்டால் அந்தரங்க வீடியோவை குடும்பத்தினருக்கு அனுப்பி விடுவேன் என்றும் அரசு பொறியாளரை மிரட்டியதாக கூறப்படுகிறது.
ரீட்டா வீடியோ
ஒருகட்டத்துக்கு மேல் ரீட்டாவின் டார்ச்சரை தாங்க முடியாத பொறியாளர் அரசு அதிகாரி, இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ரீட்டாவை அதிரடியாக கைது செய்தனர். பிறகு ரீட்டாவிடம் விசாரணை மேற்கொண்டபோது, உல்லாசமாக இருந்தபோது வீடியோ எடுத்து, அதனை அரசு அதிகாரியிடமே காட்டி பணம் பறித்ததை ஒப்புக்கொண்டார்.
அரசு அதிகாரி மட்டுமல்லாமல், இப்படி பல பேரிடம் நெருங்கி பழகி ரீட்டா ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்ததும் தற்போது அம்பலமாகியிருக்கிறது.. தற்சமயம் ரீட்டாவிடமிருந்து ரூ.30000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. கைது செய்யப்பட்ட ரீட்டாவை நிலக்கோட்டையில் உள்ள பெண்கள் ஜெயிலில் போலீசார் அடைத்துள்ளனர்..
ரீட்டா தவெக பெண் உறுப்பினர் என்று சொல்லப்படுகிறது.. ரீட்டா வலையில் இன்னும் எத்தனை பேர் விழுந்தார்கள்? யார் யாரிடம் பணம் பறித்தார்? என்று தெரியவில்லை.. அதுகுறித்த விசாரணையும் நடந்து வருகிறது..
திண்டுக்கல் ராணி சித்ரா
கடந்த மாதம் இதே திண்டுக்கல்லில், இதுபோன்றே ஒரு பெண் கைது செய்யப்பட்டார்.. பழநி தெற்குவீதியை சேர்ந்தவர் சுகுமார் என்ற பைனான்சியர், தன்னுடைய நண்பர்கள் நாராயணசாமி (44), துர்க்கைராஜ் (45) இருவருடனும் சேர்ந்து, தன்னுடைய வீட்டிலேயே மது சாப்பிட்டுள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராணி சித்ரா (40) என்ற பெண்ணும் சுகுமார் வீட்டுக்கு வந்து மது குடித்தாராம்.
ராணி சித்ரா - யார் தெரியுமா
சில நாட்களுக்கு பிறகு சுகுமாருக்கு போன் செய்த நாராயணசாமி, துர்க்கைராஜ் இருவரும், ராணி சித்ராவுடன் ஒன்றாக உட்கார்ந்து மது குடித்ததை வீடியோ எடுத்து வைத்திருப்பதாகவும், ரூ.10 லட்சம் தராவிட்டால் வீடியோவை சோஷியல் மீடியாவில் வெளியிடுவோம் என்றும் மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுகுமார், பழநி டவுன் போலீசில் புகார் அளித்தார்.
அப்போதுதான் ராணி சித்ரா யார் என்று போலீசார் விசாரித்தனர்..ரியல் ஸ்டேட் தொழில் செய்பவர்கள், வசதி படைத்த ஆண்களை குறிவைத்து, நட்புறவு ஏற்படுத்தி, ராணி சித்ராவை, நாராயணசாமி, துர்க்கைராஜ் இருவரும் பழகவிட்டு, அதற்கு பிறகு மிரட்டி பணம் பறிப்பார்களாம். பிறகு 3 பேரும் பணத்தை பங்கு போட்டு கொள்வார்களாம். இதையடுத்து 3 பேரையுமே போலீசார் கைது செய்தனர்.
அரசியல்வாதிகள், விஐபிகள்
இத்தனைக்கும் இந்த ராணி சித்ரா, ஒரு பெண் போலீசாக வேலைபார்த்தவர்.. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க போலீஸ் வேலையை ராஜினாமா செய்தவர்.. இவரது செல்போனை ஆய்வு செய்தபோது, ஏராளமான அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்பட முக்கிய பிரமுகர்களின் நம்பர்களை வைத்திருந்தது தெரியவந்தது.. எனவே, இது தொடர்பான ரகசிய விசாரணையையும் போலீசார் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
அதற்குள் இப்போது தவெக பெண் சிக்கியிருக்கிறார்.. ஒருகாலத்தில் சில ஆண்கள், பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து கொண்டிருந்த நிலையில், சமீபகாலமாக பெண்கள் இந்த காரியத்தை செய்து வருவது அதிர்ச்சியையும், கவலையையும் தமிழக மக்களுக்கு உண்டு பண்ணி வருகிறது.
-
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
திண்டுக்கல்லில் கல்யாண மண்டபத்தில் ஓடிப்போன மணமக்கள்.. ஒரு போன் காலால் ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications