போஸ்டரில் திண்டுக்கல் நிர்வாகிகள் பெயர் விடுபட்டதற்கு நான் பொறுப்பு அல்ல- ஐ. லியோனி
திண்டுக்கல்: திமுக கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டர் சர்ச்சை குறித்து திண்டுக்கல் லியோனி விளக்கம் அளித்துள்ளார்.
திமுகவின் புதிய கொள்கை பரப்புச் செயலாளர்களில் ஒருவராக திண்டுக்கல் ஐ. லியோனி நியமிக்கப்பட்டார். இதற்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள் துணை பொதுச்செயலாளர் திண்டுக்கல் ஐ. பெரியசாமி, திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட செயலாளர் ஐ.பி. செந்தில்குமார், சக்கரபாணி பெயர்கள் இடம்பெறாமல் இருந்தன.

இதற்கு திண்டுக்கல் திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் லியோனியின் பெயரும், படமும் கிழிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமது முகநூல் பக்கத்தில் ஐ.லியோனி விளக்கம் அளித்துள்ளார்.

அதில் ஐ. லியோனி கூறியிருப்பதாவது: நான் திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பை ஏற்று அதற்கான திண்டுக்கல்லில் ஒட்டப்பட்ட நன்றி அறிவிப்பு போஸ்டரில் கழக துணை பொது செயலாளர் அண்ணன் ஐ.பெரியசாமி அவர்கள், மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஐ.பி. செந்தில்குமார், இரா.சக்ரபாணி அவர்கள் பெயர் இடம்பெறாமல் இருப்பதற்கு நான் பொறுப்பல்ல.

எங்கள் மாவட்ட தலைவர்கள் மீது நிறைந்த மதிப்பும் மரியாதையும் உள்ளவன் நான். தொடர்ந்து அவர்களோடு இணைந்து பணியாற்றுவேன் இது உறுதி என்று தெரிவித்துள்ளார். அத்துடன் இவர்கள் அனைவரது பெயருடனான புதியதாக வடிவமைக்கப்பட்ட போஸ்டரையும் லியோனி தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்











Click it and Unblock the Notifications