கோமதிக்கும் ஜோதிமணிக்கும் லிங்க்.. குறுக்கே வந்த இளைஞர்! உளுந்தங்கஞ்சியில் காத்திருந்த எமன்! ஷாக்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே தோட்டத்துக்கு கிணற்றில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கை கால் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் முறையற்ற உறவு காரணமாக கணவனை கொன்ற மனைவி உள்ளிட்டோரை கைது செய்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து பின்னர் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை கிணற்றில் வீசியது தெரியவந்தது.

திண்டுக்கல் அருகே சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் கணேசன் என்பவரின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கை, கால்கள் கட்டப்பட்டு, வாயைத் துணியால் கட்டி படுகொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் மிதந்தது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த சடலத்தை கைப்பற்றி அவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். மீட்கப்பட்ட சடலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

Dindigul Murder crime

தூக்க மாத்திரை கலந்து கொடுத்து பிறகு அவரது கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்தது தெரிய வந்தது. இதை அடுத்து கொலை வழக்காக மாற்றிய போலீசார் தாடிக்கொம்பு வடமதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் பூத்தாம்பட்டியைச் சேர்ந்த ஜோதிமணி என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் வேடசந்தூரைச் சேர்ந்த கோமதி உள்ளிட்டோர் ஜோதி மணியின் உடலை கிணற்றில் வீசியதை கண்டறிந்தனர். இதை அடுத்து கோமதியை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் பட திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பூத்தாம்பட்டியைச் சேர்ந்த ஜோதிமணிக்கும் வேடசந்தூரைச் சேர்ந்த முருகனின் மனைவி கோமதிக்கும் முறையற்ற உறவு இருந்திருக்கிறது. இருவரும் நீண்ட நாட்களாக தனிமையில் சந்தித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையே கோமதிக்கு ஸ்டாலின் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஜோதிமணி கோமதியை கண்டித்துள்ளார். மேலும் ஸ்டாலினுடன் பேசக்கூடாது எனவும் கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கோமதி, ஸ்டாலினை வரவழைத்து ஜோதி மணியின் கதையை முடிக்க திட்டமிட்டு இருக்கின்றனர். சம்பவத்தன்று கோமதியின் வீட்டுக்கு ஜோதிமணி வந்தபோது கோமதி, ஸ்டாலின் அவரது உறவினர்களான நீலா, நடராஜன், ஆரோக்கியசாமி, குட்டி ஆகியோர் உளுந்தங்கஞ்சியில் நான்கு தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளனர்.

சிறிது நேரத்தில் காபியில் நான்கு தூக்க மாத்திரை கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் ஜோதிமணி மயக்கம் அடைந்த நிலையில், இவர்கள் ஜோதி மணியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பிறகு கை, கால்கள், வாயை கட்டி உடலை சென்னமநாயக்கன்பட்டி கிணற்றில் வீசி சென்றனர்.

முதற்கட்ட விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரிய வந்ததை தொடர்ந்து கோமதி, நடராஜன், அவரது மனைவி நீலா, ஸ்டாலின், ஆரோக்கியசாமி, குட்டி ஆகிய ஆறு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து இவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கள்ளக்காதல் தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+