வேர்ல்ட் கப் மேட்ச் டிக்கெட்டே 500 ரூபா தான்.. மாட்டு டோக்கன் 50 ஆயிரமா? மோசடி ஜல்லிக்கட்டால் ஷாக்!
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே புகையிலைப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ஏராளமான குளறுபடிகள் அரங்கேறியதாக புகார் எழுந்துள்ளது. அதிர்ச்சி தரும் விதமாக மாடுகளை அவிழ்க்க விழா குழுவினரால் வழங்கப்பட்ட டோக்கன்கள் 2 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டதாக பரபரப்பு புகார் எழுந்திருக்கிறது. ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்த நிலையில், விழா குழுவினர் இஷ்டத்துக்கு வசூலில் ஈடுபட்டதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் மாடு வளர்ப்பவர்கள்.
திண்டுக்கல் மாவட்டம் புகையிலைபட்டி புனித சந்தியாகப்பர் கோவில் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஜல்லிக்கட்டு போட்டி இன்று கோலாகலமாக துவங்கியது.
ஜல்லிக்கட்டு போட்டியில் திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் இருந்து 750 காளைகளும், 650 மாடு பிடி வீரர்களும் கலந்து கொண்டனர். காளைகளும், மாடு பிடி வீரர்களும் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தான் அனுமதிக்கப்பட்டனர்.

திண்டுக்கல் ஜல்லிக்கட்டு
வாடி வாசலில் சீறி பாய்ந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் அடக்கிய மாடு பிடி வீரர்களுக்கும், மாடு பிடி வீரர்களின் கையில் சிக்காத காளைகளுக்கு விழா குழுவின் சார்பாக வெள்ளி காசு, பீரோ, கட்டில்,சைக்கிள், சேர், அண்டா, டைனிங் டேபிள், உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் காயம் ஏற்படும் வீரர்கள் மற்றும் பொது மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக முதலுதவி சிகிச்சை மையம் மற்றும் 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருந்தன.
தமிழக ஜல்லிக்கட்டு
மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பல குளறுபடிகளுக்கு நடுவே தான் ஜல்லிக்கட்டு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாததால் செய்தி சேகரிக்க அனுமதி இல்லை என ஜல்லிக்கட்டு கமிட்டி சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தாலும், தற்போது ஜல்லிக்கட்டு விதிமுறைகள் பல தமிழக அரசால் தளர்த்தப்பட்டதன் காரணமாக பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்து வருகிறது.
போலீசார் தடியடி
இதனால் காவல்துறையினராலும் உரிய பாதுகாப்பு வழங்கப்பட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ஜல்லிக்கட்டு வீரர்கள் பரிசோதனையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி வீரர்களை கலைந்து போக செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஜல்லிக்கட்டு விதிமுறைகளை மீறி புறவாடி பகுதியில் மாடுகள் நிற்கும் இடத்தில் கிணறுகளும், கேணிகளும் உள்ளன.
விழா முறைகேடு
ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டும். ஆனால் இங்கு மின்சாரம் துண்டிக்கப்படவில்லை. மேலும் வாடிவாசல் வெளியே அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர்கள் கேலரியில் மின்கம்பிகள் செல்லும் இடத்தில் ஆபத்தை உணராமல் குழந்தைகளுடன் பெண்கள் நின்று ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட்டு வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு டோக்கன் மோசடி
இதைவிட அதிர்ச்சி தரும் விஷயம் டி20 உலகக் கோப்பையை பார்வையிட விற்கப்படும் டிக்கெட்டே 500 முதல் 700 ரூபாய்க்கே விற்கப்படும் நிலையில், விட புகையிலைப் பட்டியில் ஜல்லிக்கட்டு மாடுகளுக்கான டோக்கன்கள் 2 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டதாக பரபரப்பு புகார் எழுந்திருக்கிறது. இதுவரை அரசு மூலம் ஆன்லைனில் டோக்கன்கள் இலவசமாக வழங்கப்பட்ட வந்த நிலையில் தற்போது நேரடியாகவே விழா குழுவினர் மூலம் வழங்கப்பட்டது.
டோக்கன் விற்பனை சர்ச்சை
ஆனால் அவர்கள் அதனை மாட்டின் உரிமையாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்று வசூலித்துள்ளனர். 3000 ரூபாய்க்கு ஒரு ரூபாய் குறைந்தால் கூட டோக்கன் கிடைக்காது என வெளிப்படையாகவே மாட்டு உரிமையாளர்களிடம் பேசி உள்ளனர். உதாரணத்திற்கு ஒன்று முதல் 50 எண்ணிக்கையில் முதலில் அவிழ்த்து விடப்படும் மாடுகளுக்கான டோக்கன் பத்தாயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. 51 முதல் 100 வரையிலான டோக்கன்கள் 8000 வரையிலும், 101 முதல் 200 வரை டோக்கன்கள் 7000 ரூபாய்க்கும் விற்கப்பட்டுள்ளது.
மாட்டு உரிமையாளர்கள் புகார்
200 முதல் 300 வரையிலான டோக்கன்கள் 5000ற்கும், 301 முதல் 500 ரூபாய் வரையிலான டோக்கன்கள் 5000 விற்கப்பட்டுள்ளது. 500க்கு மேல் உள்ள ஒவ்வொரு டோக்கனுக்கும் 2000 ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகளில் முறைகேடு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாட்டு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆன்லைனில் டோக்கன் வழங்கிய போது வெளிமாவட்டத்தினர் அதனை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர் என்பதால் தான் அதனை நேரடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஆனால் ஸ்பான்சர் என்ற பெயரில் ஐம்பதாயிரம் ரூபாய் வழங்குபவர்களுக்குத்தான் ஐந்து டோக்கன், மீறி தனி டோக்கன் வேண்டுமென்றால் ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் கேட்பது என்ன நியாயம் என கொந்தளிக்க கேள்வி எழுப்புகின்றனர் மார்ட்டின் உரிமையாளர்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications