பெண் தீக்குளிப்பதை தடுக்காமல் வீடியோ எடுத்த கொடூரன்.. தீப்பெட்டி தந்த டீக்கடைக்காரர்.. மனிதம் எங்கே?
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கே சி பட்டியில் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தடுக்காமல் அதை முழு வீடியோவாக எடுத்த சம்பவம் மனிதம் இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பன்னைக்காடு அருகே உள்ள கே.சி. பட்டியைச் சேர்ந்தவர் சதீஷ். டிரைவராக உள்ளார். இவர் மாலதி என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்ததும் தெரிகிறது. இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

நியாயம்
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் அருகே உள்ள பண்ணைக் காட்டில் சதீஷக்கு அவரது பெற்றோர்களால் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது, இதனை அறிந்த மாலதி கே.சி.பட்டியில் உள்ள தனது கணவரின் வீட்டிற்கு நியாயம் கேட்க சென்றுள்ளார்.

நியாயம் கேட்டு போராட்டம்
இந்நிலையில் காதலன் வீட்டு முன்பு நியாயம் கேட்டு போராட்டம் நடத்திய மாலதியை அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அடித்து உதைத்து துன்புறுத்தி தகாத வார்த்தையால் திட்டி துரத்தியதாக கூறப்படுகிறது. அதனால் மனமுடைந்த மாலதி காதல் கணவன் வீட்டு முன் உள்ள சாலையில் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அதிர்ச்சி
இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்து சம்பவ இடத்திலேயே மாலதி இறந்தார். தீவைத்துக் கொள்ளும் முன் மாலதி சாலையோரத்தில் உள்ள ஒரு டீக்கடையில் தனது குழந்தையை அமர வைத்துவிட்டு இந்த செயலை செய்துள்ளார். மாலதி தன் மீது பெட்ரோல் ஊற்றிய நிலையில் அங்கிருந்த சதீஷ் குடும்பத்தினர் தடுக்காமல் இருந்தது அதிர்ச்சியடைய செய்கிறது.

தீப்பெட்டி
அதிலும் அந்த டீக்கடையில் தீப்பெட்டியை வாங்கி அவர் தீவைத்துக் கொண்டார். முதலில் தனது புடவை முந்தானையில் தீவைத்துக் கொண்ட மாலதி, தீ உடலில் பரவியதால் தன்னை காப்பாற்றுமாறு கெஞ்சுகிறார். ஆனால் அவ்வழியாக செல்வோர், வருவோர் எந்த கவலையுமின்றி தடுக்காமல் கடந்து செல்கிறார்கள்.

சின்னஞ்சிறிய குழந்தை
எனினும் யாரோ ஓரிருவர் வேட்டியை கொண்டு அந்த தீயை அணைக்க முயல்கிறார்கள். ஆனால் அதற்குள் அந்த பெண் உடல்கருகி இறந்துவிட்டார். இத்தனை சம்பவங்களையும் எந்த வித கேமரா அசைவுமின்றி அப்படியே ஒருவர் படம் பிடித்துள்ளார். சின்னஞ்சிறிய குழந்தையை விட்டு தீக்குளிக்கும் பெண்ணை அங்கிருந்தவர்களோ, தீப்பெட்டி கொடுத்தவரோ, இந்த வீடியோவை எடுத்தவரோ காப்பாற்றியிருக்கலாம். ஆனால் இவற்றில் ஒன்றும் கூட நடக்கவில்லை.

கருணை இல்லை
மனித நேயம் என்பதே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இந்த சம்பவம் உள்ளது. குரங்குக் குட்டி ஒன்று மரத்தின் துளையில் மாட்டிக் கொண்ட போது நாய் ஒன்று அந்த குரங்கை காப்பாற்றியது, அது போல் மற்றொரு சம்பவத்தில் நீச்சல் குளத்தில் விழுந்த ஒரு வெட்டுக்கிளியை நாய் காப்பாற்றியது. விலங்குகளுக்கு இருக்கும் இரக்கம், கருணை கூட இந்த மனிதர்களுக்கு இல்லாமல் போய்விட்டது ஏனோ!
-
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications