இதுக்கு மேல இறங்க முடியாது! சேதமான சாலை.. சேற்றில் குளித்த மக்கள்! கொஞ்சம் கருணை காட்டுங்க அரசே!
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே, அடிப்படை வசதிகள் கேட்டு சாலையில் தேங்கிய மழைநீரில் குளித்து நூதன போராட்டம் நடத்தினர். தற்போது இந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
திண்டுக்கல்லை அடுத்த ராஜக்காபட்டி அருகே லட்சுமிநாயக்கன்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலை அமைக்கப்பட்டது. அதன் பிறகு பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால் சாலை சேதமடைந்து மண் பாதையாக மாறியது.

இதையடுத்து சாலையை சீரமைக்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் அந்த மண்பாதை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது.
அப்போது இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் வழுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்த மழை காரணமாக லட்சுமிநாயக்கன்பட்டி ஊர் எல்லையில் இருந்து கல்லுப்பட்டி பிரிவு வரை உள்ள மண்பாதையில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
சேறும், சகதியுமாக அந்த பாதை காட்சியளிப்பதை பார்த்த கிராம மக்களில் சிலர் தேங்கி கிடக்கும் மழைநீரில் குளியல் போட்டு நூதன போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தைக்கு கூட அதிகாரிகள் வராததால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் சாக்கடை கால்வாய் வசதி முறையாக செய்யப்படவில்லை.
தெருவிளக்குகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனால் இரவில் எங்கள் கிராமமே இருளில் மூழ்கிவிடுகிறது. அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். கிராம மக்கள் விபத்தில் சிக்குவதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே மண்பாதையில் தேங்கிய மழைநீரில் குளித்து போராட்டம் நடத்தினோம் என்றனர்.
இந்த நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. மேலும் தேசிய அளவில் பல்வேறு ஊடகங்களும் இந்த வீடியோவை வெளியிட்டன. இதை அடுத்து அப்பகுதி மக்களுக்கு உரிய சாலை வசதி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது. ஏற்கனவே பலமுறை இது தொடர்பாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் மக்கள் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்/ எனவே தமிழ்நாடு அரசும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து அப்பகுதி மக்களுக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications