Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திண்டுக்கல்லில் நிச்சயம் நானும் நிப்பேன்.. வரிந்து கட்டும் மாஜி திமுக புள்ளி! பரபரப்பான திண்டுக்கல்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: 2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு தமிழகம் தயாராகி வரும் நிலையில் உள்ளூர் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தை தற்போதே சில இடங்களில் தொடங்கிவிட்டனர். திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அவரை எதிர்த்து அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் ஐபிஎல் செந்தில்குமார் களமிறங்கலாம் என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் திமுக முன்னாள் சேர்மன் நடராஜன் போட்டியிடலாம் என சொல்லப்பட்டுள்ள நிலையில் அவர் குறித்து சமூக வலைதளங்களில் சிலர் அவதூறாக பேசியதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் என்ன நடந்தாலும் நிச்சயம் திண்டுக்கல் தொகுதியில் தான் போட்டியிடுவது உறுதி எனவும், சுயேட்சையாக இருந்தாலும் தேர்தலில் களமிறங்குவேன் என கூறி இருக்கிறார் நடராஜன்.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 Dindigul Srinivasan

2026 சட்டமன்ற தேர்தல்

2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக எப்படியாவது இரண்டாவது முறை ஆட்சி அமைத்தே தீர வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதுவரையிலான தமிழக அரசியல் வரலாற்றில் அதிமுக அடுத்தடுத்து இரண்டு முறை சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததில்லை என்ற பெருமையை தக்க வைக்க அதிமுக முயன்று வருகிறது. இது தவிர தேர்தல் களத்தில் சில பல கட்சிகள் இருக்கின்றன. இதையெல்லாம் தவிர்த்து தங்கள் பகுதிகளில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்ட முன்னாள் அமைச்சர்களும் இந்நாள் அமைச்சர்களும் தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றனர்.

முன்னாள் இந்நாள் அமைச்சர்கள்

தோற்றால் உங்கள் பதவி காலி என தலைமை முன்னாள் அமைச்சர்களையும் இந்நாள் அமைச்சர்களையும் மிரட்டி வைத்திருக்கும் நிலையில் எப்படியாவது வென்று விட வேண்டும் என காய்களை நகர்த்தி வருகின்றனர். அந்த வகையில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தந்த திண்டுக்கல்லில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவுகிறது. அதிமுகவை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் சீனிவாசன் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களம் இறங்குகிறார். அவர் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுவது 100 சதவீதம் உறுதி என்கின்றனர் அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள்.

திண்டுக்கல் தொகுதி

அதே நேரத்தில் இதுவரை 1996க்கு பிறகு திமுக திண்டுக்கல் தொகுதியில் வெல்லாத நிலையில் திமுக தான் களமிறங்க வேண்டும் என அக்கட்சியினர் கோரிக்கையை விடுத்து வருகின்றனர் .அதற்கு தலைமை உத்தரவிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தற்போதைக்கு அமைச்சர் ஐ பெரியசாமியின் மகன் ஐபி செந்தில் குமார் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடலாம் என சொல்லப்படுகிறது.

திண்டுக்கல் தொகுதி அரசியல்

இதற்கிடையே திண்டுக்கல்லில் பிரபல அரசியல் முகமும் திண்டுக்கல் நகராட்சியாக இருந்தபோது சேர்மனாக இருந்த நடராஜன் தற்போது அந்த கட்சியில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். பெரியசாமியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் கட்சி நிகழ்வுகளில் தன்னை புறக்கணித்ததால் தற்போது 24 மணி தெலுங்கு செட்டியார் சங்கத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்துடனும் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், கட்சியில் சேர்ந்தால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என சொன்னதாக சொல்லப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகம்

நமக்கு கிடைத்த தகவல்படி அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடலாம் என கடந்த சில நேரங்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டு இருந்தோம். அது திண்டுக்கல் அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் திமுக ஆதரவாளர்கள் சிலர் தொடர்ந்து நடராஜன் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களை சித்தரித்து வீடியோக்களையும் பதிவுகளையும் போட்டு வருகிறார்களாம், மேலும் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியும் சில சமயங்களில் மிரட்டல் தொனியில் சிலர் பேசியதாக சொல்லப்படுகிறது.

சேர்மன் நடராஜன்

இதனால் கோபமடைந்திருக்கும் நடராஜன் நம்மிடம் பேசியபோது," கட்சிக்காக பல ஆண்டுகள் உழைத்திருக்கிறேன். பல நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறேன். வருடம் தோறும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்திருக்கிறேன். ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்று சொன்னதும் மிரட்டுகிறார்கள். மிரட்டலுக்கு அஞ்சுபவன் நான் அல்ல.

ஐபி செந்தில்குமார்

இந்த சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல்லில் நிச்சயம் போட்டியிடுவேன். தமிழக வெற்றி கழகத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் சுயேட்சையாக போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவேன் என்கிறார். திண்டுக்கல்லில் திமுக நீண்ட நாட்களுக்குப் பிறகு திமுக களமிறங்கலாம் என சொல்லப்படும் நிலையில், திமுக முன்னாள் சேர்மன் களமிறங்குவேன் என சொல்லி இருப்பது திண்டுக்கல் அரசியலில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+