அய்யய்யோ திமுகவில் வாரிசு அரசியல்.. மகனை மேடையில் வைத்து கொண்டு வசைபாடிய திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல்: திமுகவில் வாரிசு அரசியல் தலைதூக்கிவிட்டது; வாரிசு அரசியலால் திமுக அழிந்து போகும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கடுமையாக விமர்சித்தார். திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில் அவரது மகனும் திண்டுக்கல் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவருமான ராஜ்மோகன் மேடையில் அமர்ந்திருந்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மகனும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் நேற்று தமிழக அமைச்சராகப் பதவியேற்றார். தம் மீது வாரிசு அரசியல் என்ற விமர்சனங்களை முன்வைப்போருக்கு செயல்கள் மூலம் பதிலடி தருவேன் என்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமான பேராசிரியர் எனக் கழக முன்னோடிகள் வரிசையில், களம்பல கண்ட போராளியான கழகத் தலைவர், முதலமைச்சர் அவர்களின் சீரிய வழிகாட்டலின் கீழ் தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று இணைகிறேன். இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டபோது, சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது எதிர்கொண்ட அதே விமர்சனக் கணைகளை, அமைச்சர் அறிவிப்பின்போதும் எதிர்கொள்கிறேன். 'விமர்சனங்களை என் செயலால் எதிர்கொள்வேன்' என்று அன்று பதிலளித்து இருந்தேன். அமைச்சர் பொறுப்பிலும் என் செயல்பாடுகள் மூலம் மக்களின் மனங்களை வெல்ல முயல்வேன் என கூறியிருந்தார்.

இந்நிலையில் திண்டுக்கல் திருச்சி சாலை என்.ஜி.ஓ.காலனி உழவர்சந்தை அருகே திமுக ஆட்சியைக் கண்டித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு தலைமை தாங்கி முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ. பேசியதாவது: தமிழகத்தில் விடியலை ஏற்படுத்துவோம் என திமுக பொய்யான வாக்குறுதியைத் தந்து ஆட்சிக்கு வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்ததும் மின் கட்டணம், பால் விலை, குடிநீர் வரி என அத்தனையையும் உயர்த்திவிட்டது. மாதம் ஒரு முறை மின்கட்டணத்தை கணக்கிடுவோம் என்ற திமுக, இப்போது பல மடங்கு மின் கட்டணத்தை உயர்த்திவிட்டது. பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் அத்தனை விலையும் உயர்த்தப்பட்டுவிட்டது.
தமிழக மக்கள் கடும் துன்பத்திலும் துயரத்திலும் இருக்கின்றனர். ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலினோ, அதைப் பற்றி கவலைப்படாமல் மகன், உதயநிதியை அமைச்சராக்கி அழகு பார்க்கிறார். இது ரோமாபுரி நகரம் தீப்பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்து கொண்டிருந்ததைப் போலவே இருக்கிறது.
திமுகவில் எத்தனையோ சீனியர்கள் இருக்கின்றனர். ஆனால் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கி இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். காங்கிரஸ் கட்சிக்கு அழிவு ஏற்பட்டதே வாரிசு அரசியலால்தான். அதேபோல திமுகவுக்கும் வாரிசு அரசியலால்தான் அழிவு ஏற்படும். தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் திமுக அரசு தர வேண்டிய கடன் ரூ20,000. ஏனென்றால் குடும்ப தலைவிகளுக்கு ரூ1,000 தருவதாக கூறினர். சிலிண்டருக்கு ரூ100 தள்ளுபடி செய்வோம் என்றனர். இதன்படி பார்த்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 18 மாத கால திமுக அரசு ரூ20,000 கடன் வைத்திருக்கிறது.
தமிழகத்தில் திமுக ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுவிட்டது. அண்ணா திமுகவுக்கு மக்களிடத்தில் ஆதரவு பெருகிவிட்டது. இதனை நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வெளிப்படுத்துவார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள், அண்ணா திமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வாரிசு அரசியலைப் பற்றி பேசும் போது, அவரது மூத்த மகனும் திண்டுக்கல் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவருமான சி.ராஜ்மோகனும் அதே மேடையில்தான் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி












Click it and Unblock the Notifications