திண்டுக்கல்லில் மாட்டு வண்டியில் யார் பாருங்க.. பழனி முருகன் கோயிலில் அசத்திட்டாங்களே கோவை மக்கள்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் திடீரென கிளம்பி வந்த மாட்டு வண்டிகளால் பெரும் ஆச்சரியம் சூழ்ந்துவிட்டது. பழனி முருகன் கோயிலுக்கு வரிசையாக வந்து நின்ற மாட்டு வண்டிகளை, அங்கிருந்த பக்தர்களும், பொதுமக்களும் வியப்புடன் பார்த்தனர். என்ன நடந்தது?
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலானது, தென்மாநிலங்களிலேயே மிகவும் புகழ்பெற்றது.. அறுபடை வீடுகளில் ஒன்றாகவும் விளங்கி வருவதால், விசேஷ நாட்களில் கூட்டம் அதிகமாக காணப்படும்.

ஆன்மீக தலம்: ஆன்மீக தலமாகவும், சிறந்த சுற்றுலாத்தலமாகவும் விளங்குவதால், நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் இங்கு தினமும் ஆயிரக்கணக்கில் வருகை தருவார்கள். அதிலும், வார இறுதி விடுமுறை நாட்கள் மற்றும் கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் உள்ளிட்ட திருவிழா தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய திரண்டு வருவார்கள்.
பழனி மலையை அடைவதற்கு யானை பாதை, நேர் பாதை என இரண்டு வழிகள் உள்ளது.. அதேபோல, வின்ச் மற்றும் ரோப் கார் சேவையும் கொண்டுவரப்பட்டுள்ளது.. இந்த வசதிகள் பக்தர்களுக்கு பேருதவியாக அமைந்து வருகிறது.
முருகன் கோவில்: இந்த நிலையில், பழனி முருகன் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தைப்பூசத் திருவிழா சமீபத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனால் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முருகனுக்கு மாலை அணிந்து பாதையாத்திரையாக வந்து செல்கிறார்கள்.. இந்த ஆண்டு, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பிப்ரவரி 11ம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது.
இதையொட்டி பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி வருகின்றனர். அந்தவகையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பணிக்கம்பட்டியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், மாட்டு வண்டிகளில் வந்திருந்தனர்.. இவர்கள் நுாறு ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரிய முறையில் மாட்டு வண்டிகளில் இப்படி வந்து கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில், இந்த வருடமும், 20க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் வந்திருந்தனர்.
மாட்டு வண்டிகள்: மாட்டு வண்டிகளுடன் ஆட்டோ, சைக்கிள், டூவீலர், கார்களிலும் பக்தர்கள் கோவையிலிருந்து வந்திருந்தனர்.. காவடிகள் எடுத்து, அலகு குத்தி அவர்கள் நேர்த்திக்கடனையும் செலுத்தினர்.. மேலும், சண்முகநதியில் நீராடி விட்டு மலைக்கோயிலுக்கு சென்று முருகனை தரிசித்து விட்டு மீண்டும் மாட்டு வண்டியிலேயே ஊர் திரும்பினார்கள்.
வழக்கமாக ரேக்ளா வாகனங்களில் கிரிவீதிகளில் வலம் வருவது வழக்கம். இப்போது நீதிமன்ற உத்தரவு காரணமாக கிரிவீதிகளில் வாகனங்கள் வலம் வருவது தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரேக்ளா வண்டிகளை தனியார் வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தி விட்டு சாமி தரிசனம் செய்து ஊர் திரும்பினர்.
கோரிக்கை: மாட்டு வண்டியில் வந்தது குறித்து, கோவை பக்தர்கள் சொல்லும்போது, "கடந்த 2024ல் கிரிவீதியில் மாட்டு வண்டிகளுக்கு அனுமதி இருந்தது. ஆனால், இந்த வருடம் அனுமதி இல்லை. அதனால், தனியார் வாகன நிறுத்தங்களில் மாட்டு வண்டிகளை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒரு மாட்டு வண்டிக்கு, 400 ரூபாய் வீதம் தனியார் கட்டணம் வசூலித்துவிட்டார்கள். இந்த கட்டணம் மிக அதிகம் என்பதால், இதை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டனர்.
இன்றைய காலத்தில், போக்குவரத்தில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டபோதிலும், தங்களின் முன்னோர்களை போல் மாட்டு வண்டிகளில் சென்று தைப்பூசத் திருவிழாவின் போது பழனி முருகனை தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் கோவை பக்தர்கள்.
ஆச்சரியம்: இதனால், பழனி நகருக்குள் வெறும் வாகனங்களை மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட மக்கள், வரிசைக்கட்டி சென்ற மாட்டு வண்டியை பார்த்து பிரமித்து போய்விட்டார்கள்.. இந்த மாட்டு வண்டிகள்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications