திண்டுக்கல் உஷாவை பாருங்க.. நிலக்கோட்டையே நடுங்குது..கவர்ச்சியில் விழுந்த நபர்கள்..அதுக்கு இப்படியா
திண்டுக்கல்: திண்டுக்கல் உஷாவை பற்றி தெரியுமா? தன் கவர்ச்சி வலையில் ஏகப்பட்ட இளைஞர்களை விழ வைத்துள்ளார்.. இப்ப இந்த மேடம், ஜெயிலில் இருக்கிறார்.
திண்டுக்கல் அருகே, காதலித்து ஏமாற்றிவிட்டதாக இளைஞரின் புகைப்படத்துடன் போஸ்டர் அடித்து மோசடியில் ஈடுபட முயன்ற பெண் உட்பட மூவரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரோஷன்.. 27 வயதாகிறது.. இவர் உஷா என்பவருடன் ஃபேஸ்புக்கில் அறிமுகமாகியிருக்கிறார்.. பொள்ளாச்சியை அடுத்துள்ள கோவில்பாளையம் கிராமத்தை சேர்ந்த உஷாவுக்கு 31 வயதாகிறது..
ரோஷனும், உஷாவும் செல்போன் நம்பரை பரிமாறிக்கொண்டு நட்பாக பழகி வந்தனர்.. நேரம் கிடைக்கும்போதெல்லாம் பேசி வந்தனர்.. ஒருகட்டத்தில் திடீரென உஷாவின் நடவடிக்கையில் ரோஷனுக்கு சந்தேகம் வந்துள்ளது. அதனால், உஷாவுடன் பேசுவதை ரோஷன் நிறுத்திவிட்டார்.. ஆனால், உஷா விடவில்லை.
ஆத்திரம்: ரோஷனுக்கு எந்நேரமும் போன் செய்து தொந்தரவு செய்து கொண்டேயிருந்தார்.. இதனால் கடுப்பான ரோஷன், உஷாவின் செல்போன் நம்பரை பிளாக் செய்துவிட்டார்.. இதனால் உஷா மேலும் ஆத்திரமடைந்தார்.. உடனே ரோஷனை பழிவாங்க முடிவு செய்தார். இதற்காக, ஃபேஸ்புக்கிலிருந்த ரோஷனின் போட்டோவை டவுன்லோடு செய்து, அதில், தன்னுடைய போட்டோவையும் இணைத்தார்.. இந்த ஜோடி போட்டோவை வைத்து, ஊரெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டினார்.
குறிப்பாக, நிலக்கோட்டையின் மூலைமுடுக்கெல்லாம் இந்த போஸ்டரை உஷா ஒட்ட துவங்கினார்.. அந்த போஸ்டரில், ரோஷன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், இந்த அநியாயத்துக்கு பொதுமக்கள்தான் நியாயம் வழங்க வேண்டும் என்றும் உஷா கேட்டிருந்தார்.
பூ வியாபாரி: அதுமட்டுமல்ல, ரோஷனின் அப்பா குருவையா என்பவரை, உஷா மிரட்டியிருக்கிறார்.. இந்த குருவையா, ஒரு பூ வியாபாரி ஆவார்.. வழக்கமாக பூ மார்க்கெட் பகுதிக்கு வந்துகொண்டிருந்தபோது, சவுந்தர்ராஜன், சிவஞானம், கிருஷ்ணவேணி, என தன்னுடைய நண்பர்கள் 3 பேரை சேர்த்து கொண்டு, குருவைய்யாவை வழிமறித்துள்ளார் உஷா.. 5 லட்சம் ரூபாய் பணம் கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த குருவைய்யா, நிலக்கோட்டை போலீசில் புகார் தந்தார்.. இதையடுத்து போலீசார், வழக்குப் பதிவு செய்து உஷா, சிவஞானம், கிருஷ்ணவேணி ஆகிய 3 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளது.
நிஜமுகம்: இந்த உஷாவின் நிஜமான பெயர் கமலேஸ்வரி.. இவருக்கு இதேதான் வேலையாம்.. இளைஞர்களை காதலிப்பது போல நடித்து, அவர்களிடம் பணம் பறித்துவிடுவாராம்.. இப்படி பல பேர் உஷாவின் வலையில் விழுந்து, லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததாக தெரிகிறது.. எனவே, பாதிக்கப்பட்ட இளைஞர்கள் யார் யார்? என்ற விவரங்களை போலீசார் சேகரித்து கொண்டிருக்கிறார்களாம்.












Click it and Unblock the Notifications