திண்டுக்கல் தீபாவுக்கு குஷி பாருங்க.. தாய்மாமன் வந்துட்டாரு.. வாயை பிளந்த ஆத்தூர்.. அதென்ன லாரியில்?
திண்டுக்கல்: திண்டுக்கல் மலையடிவாரத்தில் நடந்த சம்பவத்தை பார்த்து, ஒட்டுமொத்த தமிழகமும் வாயடைத்து போயுள்ளது., இந்த செய்திதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை, வைபவங்கள் என்றாலும், சடங்கு விழாக்கள் என்றாலும், "செய்முறைகள்" அமர்க்களமாக இருக்கும்.. இதில் பெரிதும் ஆச்சரியங்களை கிளப்புவது சீர் வரிசைகள்தான்..

மாட்டு வண்டிகள்: இன்னமும்கூட நம்முடைய பாரம்பரியத்தை பறைசாற்றும்வகையில், மாட்டு வண்டிகளில் சீர்வரிசை ஊர்வலம், ஜல்லிக்கட்டு காளை உள்ளிட்ட கால்நடைகளை மணமேடையில் பரிசளிப்பது போன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது.. அதிலும், திருமணம், காதுகுத்து, என்றாலே தென் மாவட்டங்கள்தான் படுஃபேமஸ்.. குறிப்பாக, "தாய்மாமன் சீர்" என்றால், அனைவருக்குமே கூடுதல் எதிர்பார்ப்பும், கூடுதல் அக்கறையும், கூடுதல் விசேஷமும் உண்டு.
சில மாதங்களுக்கு முன்பு வந்தவாசியை அடுத்துள்ள புன்னை கிராமத்தில், 3 பெண் குழந்தைகளுக்கு காதணி விழா நடந்தது. உடனே தன்னுடைய அக்கா குழந்தைகளுக்கான தாய்மாமன், சீர்வரிசையை வித்தியாசமாக செய்ய முடிவு செய்தார்.
இதற்காக 15 அடி உயரத்தில் மாலை ஆர்டர் செய்ததுடன், அந்த மாலையை கொண்டு வருவதற்காகவே, கிரேன் ஒன்றையும் ஏற்பாடு செய்தார்.. 15 அடி உயர மாலையை கிரேனில் வைத்து ஊர்வலமாக எடுத்து சென்றதை, சுற்றுவட்டார மக்களே வாயை பிளந்து பார்த்தனர்.
அணைக்கட்டு: அதுபோலவே, வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த ஏரிக்கோடி என்ற கிராமத்தில் ஒரு காதணி விழா நடந்தது. அதுவும் 60 வயது முனிவேலுக்கு, 90 வயது தாய்மாமன் தங்கவேலுவின் மடியில் உட்கார வைத்து, காது குத்து விழா நடந்தது.
முனிவேலுக்கு, சின்ன வயசாக இருக்கும்போது, காது குத்தவில்லையாம்.. அப்போது குடும்பத்தில் ரொம்ப வறுமையாம்.. அதனால், இப்போது ஓரளவு வசதி வந்ததால், "கொஞ்சம்" லேட்டாகி, தன்னுடைய தாய்மாமன் தங்கவேலுவின் மடியில், ஏறி உட்கார்ந்து கொண்டு, காது குத்திக் கொண்டார். இந்த சம்பவமும் பெரும் ஆச்சரியமாக பேசப்பட்டது.
ஆத்தூர்: இதோ திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரில் நடந்த ஒரு காதணி விழா தற்போது இணையத்தில் வியப்பை கூட்டி வருகிறது.. மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரப்பகுதியில் அமைந்துள்ளது கே.சி.பட்டி.. இந்த பகுதியில் வசித்து வருகிறார் ஏ.சி. ஐயப்பன்,.. இவர் ஒரு தொழிலதிபர்.
தன்னுடைய மகள் தீபா அக்ஷயாவுக்கு, பூப்புனித நீராட்டு விழாவுக்கு பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக தன்னுடைய வீட்டுக்கு அருகிலேயே, மிகப்பிரமாண்டமான பந்தலை போட்டிருந்தார். தீபாவுக்கு மொத்தம் 3 தாய்மாமன்கள்.. இவர்கள் 3 பேருமே இந்த விழாவை அசத்திவிட்டார்கள்.
மருமகள் தீபா: கிட்டத்தட்ட 3 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து, தங்களுடைய மருமகள் தீபாவை, குதிரை பூட்டிய சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து வந்தார்கள்..
பிறகு, சீர்வரிசை தட்டுகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டன.. அரிசி, பருப்பு, மிட்டாய்கள் என மொத்தம் 233 வகையான சீர்வரிசை தட்டுகள் இந்த ஊர்வலத்தில் இடம்பெற்றிருந்தன. மலைக்கிராமத்தை ஒட்டியுள்ள பகுதி என்பதால், பெரும்பாலும், தங்களது பகுதியில் சேகரிக்கப்பட்ட வாழை, தேன், காய்கறிகள் போன்றவற்றையே, மலைகிராம மக்கள் சீர்வரிசையாகக் கொண்டு வந்தனர்.
தட்டுக்கள்: 233 பெண்களும், அந்த தட்டுகளை தங்கள் தலைகளில் சுமந்து கொண்டு ஊர்வலம் போனார்கள். ஆனாலும், சீர்வரிசைகள் அதிகம் என்பதால், அவைகளை எல்லாம் கொண்டுபோக லாரிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
இன்னொரு பக்கம், செண்டை மேளங்கள் அமர்க்களப்பட்டன.. சீர்வரிசைகளை கொண்டுவந்து வைக்கவே நேரமாகிவிட்டது.. அதற்கு பிறகு, தங்கள் மருமகளை பந்தலில் அழைத்து வந்து உட்கார வைத்தார்கள் 3 தாய்மாமன்களும்.. இறுதியில் அனைவருக்கும், பிரம்மாண்டமான விருந்து பரிமாறப்பட்டது.
கேரள பாரம்பரியம்: கேரள பாரம்பரிய நடனத்துடன், லாரிகளில் சீர்வரிசை பொருட்கள் வருவதை பார்த்து அந்த மலை கிராமமே திக்குமுக்காடிப்போய்விட்டது. சேகரிக்கப்பட்ட வாழை, தேன், உள்ளிட்டவற்றை சீர் செய்து அசத்தியதுடன், இன்னமும் தங்களது பழக்கத்தை ஆதிவாசி மக்கள் மாற்றிக்கொள்ளாமல் இருப்பது நமக்கு திகைப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதுமட்டுமல்ல, எவ்வளவுதான் தொழில்நுட்பமும், நாகரீகமும் மாறினாலும், பாரம்பரியமான சில விஷயங்கள் இன்னும் நம்மை விட்டு போகவில்லை என்பதை, இந்த பாசக்கார "தாய்மாமன்கள்" ஒவ்வொருமுறையும் தமிழகத்துக்கு நிரூபித்து கொண்டிருக்கிறார்கள்..!!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications