திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆரத்தில் தட்டில் பணம்... முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்குப்பதிவு

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: ஆர்த்தி தட்டில் பணம் போட்டதாக முன்னாள் அமைச்சர் நந்தம் விஸ்வநாதன் மீது நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Recommended Video

    அப்படிப்போடு.. ஆரத்தி எடுத்தவர்களுக்கு ஆறுதல் தொகையா? நத்தம் விஸ்வநாதன் மீது திமுக புகார்

    தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் பிரசாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தங்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகமெங்கும் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

    கூட்டணி எப்படி

    கூட்டணி எப்படி

    குறிப்பாக, இந்தத் தேர்தலில் மீண்டும் வென்று ஆட்சியை தொடர வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக களமிறங்கியுள்ளது. பாமக, பாஜக, தாமாக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது. இதில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் போல மொத்தம் இடங்களில் அதிமுக களமிறங்குகிறது.

    செல்வாக்கு மிக்க தலைவர்கள்

    செல்வாக்கு மிக்க தலைவர்கள்

    10 ஆண்டாளாக ஆளும்கட்சியாக இருப்பதால் இயல்பாகவே மக்களுக்கு அதிமுக அரசு மீது அதிருப்தி உருவாகியுள்ளது. இதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள திமுக முயல்கிறது. புதுமுகங்களால் இதை சமாளிக்க முடியாது என்பதால் மாநிலம் முழுவதும் பிரபலமான, மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர்களை அதிமுக இந்த முறை தேர்தலில் களமிறங்கியுள்ளது.

    நத்தம் விஸ்வநாதன்

    நத்தம் விஸ்வநாதன்

    அதன்படி திண்டுக்கல் நத்தம் தொகுதியில் நந்தம் விஸ்வநாதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் 2011-16 வரை ஜெயலலிதா ஆட்சியில் முக்கிய அமைச்சராக வலம் வந்தார். பின்னர் 2016ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்ததால், தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கினார். தற்போது அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால், நந்தம் விஸ்வநாதன் தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

    போலீசார் வழக்குப்பதிவு

    போலீசார் வழக்குப்பதிவு

    இந்நிலையில், நேற்று கீழ் நத்தம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட இவர், அங்கு ஆரத்தி எடுத்தவர்களுக்குப் பணம் வழங்கியதாகக் குற்றச்சாடுகள் எழுந்தன. இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியானது. இந்நிலையில், தேர்தல் கண்காணிப்புக் குழு தலைவர் மைக்கேல் ஆரோக்கியராஜ் இது தொடர்பாகப் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது குற்றப்பிரிவு 171E கீழ் நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    English summary
    Natham Viswanathan campaign, FIR registered against natham viswanathan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X