திண்டுக்கல் அய்யலூரில் பணியில் இருந்த வனத்துறை அதிகாரி.. திடீரென சுருண்டு விழுந்து நடந்த விபரீதம்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் வனச்சரக அலுவலகத்தில் வன அலுவலராக பணியாற்றி வந்த வனத்துறை அதிகாரி மணிகண்டன் என்பவர் பணியின் போதே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இதேபோல் அதன் அருகே உள்ள திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மதுரை இன்ஜினியர் விபத்தில் உயிரிழந்தார். ஒரே நாளில் மதுரையைச் சேர்ந்த இரண்டு அரசு அதிகாரிகள் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் மேலமடை மறைமலை அடிகள் தெருவை சேர்ந்த 52 வயதாகும் மணிகண்டன் என்பவர் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் வனச்சரக அலுவலகத்தில் வன அலுவலராக வேலை செய்து வந்தார். இவருக்கு சுஜா (45) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். மணிகண்டனின் குடும்பத்தினர் சொந்த ஊரான மதுரையிலேயே வசித்து வருகிறார்கள். மணிகண்டன் அய்யலூரில் தங்கி வேலை செய்து வந்தார்.

dindigul government employee

இந்தநிலையில் நேற்று மணிகண்டன் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் வனச்சரக அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதுடன், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அலுவலக பணியாளர்கள் மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மணிகண்டன் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வனக்காப்பாளர் மீனாட்சி, வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பணியில் இருந்த வன அலுவலர் திடீரென இறந்த சம்பவம் வனத்துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அய்யலூரில் வனத்துறை அதிகாரி மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில், அதன் அருகே உள்ள திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மதுரை இன்ஜினியர் விபத்தில் உயிரிழந்தார். பெஞ்ஜல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு மதுரை மாநகராட்சியில் இருந்து நேற்று முன்தினம் இரவு டிப்பர் லாரி ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

லாரியை மதுரை மாவட்டம் ஆலம்பட்டியைச் சேர்ந்த 33 வயதாகும் கற்பக ராஜா என்பவர் ஓட்டிச் சென்றார். இந்த லாரியில் மதுரை மாநகராட்சியில் இன்ஜினீயராக பணியாற்றி வந்த ரமேஷ் பாபு (வயது 55) என்பவரும் நிவாரணப்பொருட்களுடன் சென்றார். மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கோவில்பட்டி அய்யப்பன் கோவில் அருகே லாரி சென்று கொண்டிருந்தது.

அப்போது லாரி திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலை மையப்பகுதியில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் லாரியின் அடியில் சிக்கிய மாநகராட்சி இன்ஜினீயர் ரமேஷ் பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த கற்பக ராஜா மணப்பாறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+