Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவங்க அண்டா, ஹாட்பாக்ஸ் கொடுத்தாங்க! இவங்க டோக்கன் கொடுக்குறாங்க! ஆர்வத்தில் மிஸ்டர் பொதுஜனம்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: இத்தனை நாட்கள் தொகுதி பக்கம் எட்டிப் பார்க்கவில்லை என்றாலும் தேர்தல் நெருங்கி விட்டதால் தொகுதி மக்கள் மீது பாசமழை பொழிய தொடங்கி இருக்கின்றனர் திண்டுக்கல் மாவட்ட எம்எல்ஏக்கள். பழனி தொகுதி முழுவதும் ஹாட் பாக்ஸ் பரபரப்பாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் திண்டுக்கல் சீனிவாசன் வீடு வீடாக டோக்கன் வழங்கி வருகிறார். தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் இறுதி கட்டமாக 'வெயிட்டாக' வேட்பாளர்கள் வாக்காளர்களை கவனிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

கல்யாண களை போல தமிழ்நாட்டுக்கு தேர்தல் களை வந்து விட்டது. அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை விறுவிறுப்பாகவும் சுறுசுறுப்பாகவும் செய்து வருகிறார்கள். தலைமையை பொறுத்தவரை வேட்பாளர் தேர்வு, கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் வாக்குறுதி என அடுத்தடுத்த பணிகளை தொடங்கி அவற்றை சீரும் சிறப்புடன் செய்து வருகிறார்கள்.

உள்ளூர் தலைகள் கட்சி நிர்வாகிகளை குஷிப்படுத்த அவ்வப்போது ஆலோசனை கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர். நான்கரை ஆண்டு காலம் கண்டுகொள்ளப்படாமல் இருந்த வாக்காளர்கள் பக்கம் அரசியல்வாதிகளின் பார்வை திரும்பி இருக்கிறது.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 DMK aiadmk

2026 சட்டமன்ற தேர்தல்

ரூம் போட்டு யோசித்து பல்வேறு பெயர்களில் மக்களை சந்திக்க திட்டங்களை தீட்டி வருகிறது ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும்.. சரி இது மட்டும் போதாது வாக்காளர்களையும் கவனிக்க வேண்டும் அல்லவா? அதற்காக சில பல ஆலோசனைகளை நடத்தி டிசைன் டிசைனாக வாக்காளர்களுக்கு பரிசு பொருட்களும் பணமும் வழங்கப்பட்டு வருகிறது. திமுக ஏற்கனவே அண்டா அரசியலை கையில் எடுத்திருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் திமுக உடன் பிறப்புகளுக்கு முதற்கட்டமாக அண்டா வழங்கப்பட்டு விட்டது. தற்போது அந்தந்த தொகுதி எம்எல்ஏக்களும் வேட்பாளர்களும் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்களை விநியோகிக்க தொடங்கி இருக்கின்றனர்.

திண்டுக்கல் தேர்தல் பரிசுகள்

அந்த வகையில் பலனைத் தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவான அமைச்சர் ஐ பெரியசாமியின் மகன் ஐபிஎஸ் செந்தில்குமார் தரப்பில் ஹாட் பாக்ஸ் வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த முறை வாக்குப்பதிவு நடந்த போது கிடைத்த தரவுகளை கொண்டு திமுக உடன் பிறப்புகளுக்கும் பொது வாக்காளர்களுக்கும் ஹாட் பாக்ஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகத்தை சேர்ந்த பிரபல நிறுவனத்திலும் மொத்தமாக ஆர்டர் கொடுத்து ஹாட் பாக்ஸ்களை கொள்முதல் செய்து கிஃப்ட் கொடுத்து வருகின்றனர் உடன்பிறப்புகள்.

அதிமுக டோக்கன் விநியோகம்

ஆளுங்கட்சி இரண்டு கிப்ட் கொடுத்து விட்ட நிலையில் ஆண்ட கட்சியான அதிமுகவின் எம்எல்ஏ திண்டுக்கல் சீனிவாசன் தற்போது வீடு வீடாக டோக்கனை வழங்கி வருகிறார். முதற்கட்டமாக சில்வர் பேஷன் வழங்கப்பட்ட நிலையில் தற்போது திண்டுக்கல் சீனிவாசனின் புகைப்படத்துடன் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய ஒரு டோக்கன் வழங்கப்படுகிறது. அதில் குடும்ப தலைவரின் பெயர் மற்றும் தொலைபேசி எண் இடம் பெற்றுள்ளது. தனித்தனி வாக்காளர்களுக்கு என்று இல்லாமல் குடும்பத்துக்கு ஒரு அமௌன்ட் தரலாம் என சொல்கிறார்கள்.

திண்டுக்கல் அரசியல்

ஆனால் அது 100 ரூபாயா? 200 ரூபாயா? 1000 ரூபாயா? என்ற தகவல் இல்லை. டோக்கனில் எடப்பாடி படமும் திண்டுக்கல் சீனிவாசன் படமும் இருட்டு நிலையில் அந்த டோக்கனை யாரிடம் கொடுப்பது எப்போது கொடுப்பது? என தெரியாமல் குழம்பி உள்ளனர். திமுக போட்டி போட்டுக் கொண்டு அண்டாவையும், ஹாட் பாக்ஸையும் வழங்கியிருக்கும் நிலையில் அதிமுக தரப்பில் வெறும் டோக்கன் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.. அது அமெளண்டாக மாறுமா? என நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+