திருப்பூர், திண்டுக்கல் பகுதியில் கொட்டிய மழை.. திடீரென மேகம் கறுத்து.. பகல் வெயிலுக்கு இதமா..!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல் : தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்துள்ளது.

திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அதேபோல, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று மாலை மிதமான மழை பெய்துள்ளது.

வெயில்

வெயில்

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் தவித்து வந்தனர். ஆனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் திடீரென மேகம் கருத்து, இடி மின்னலுடன் பல இடங்களில் குளிர்ந்த காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது. இது வெப்ப நிலையைக் குறைத்து மக்களுக்கு இதம் கொடுத்து வருகிறது.

வானிலை

வானிலை

அந்தவகையில் இன்றும் தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நல்ல மழை

நல்ல மழை


அதன்படி, இன்று மாலை ஈரோடு, திருப்பூர் திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து கனமழை பெய்தது. கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் திடீர் மழையால் வெப்ப நிலை மாறி குளிர்ந்த காற்று வீச ஆரம்பித்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

விவசாயிகள் மகிழ்ச்சி


மேற்கண்ட மாவட்டங்களின் விவசாயிகள் கிராமப்புறங்களில் பயிர் செய்திருந்த பல்வேறு பயிர்கள் வெயிலின் காரணமாக வாடிய நிலையில் இருந்தது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக வாடிய பயிர்கள் துளிர்விடத் தொடங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+