பக்தி பழமாய் கதவை திறந்த.. பழனி மக்களுக்கு ஷாக்.. அடச்சே.. குடிகாரர்களோட சேட்டையாமே!

பழனியில் வீட்டு வாசல்களில் மண்டை ஓடுகள் சிதறி கிடந்தன

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: நேற்று காலங்காத்தாலே பக்தி பழமாய் கதவை திறந்த பழனி மக்களுக்கு, வீட்டு வாசலில் அந்த அதிர்ச்சி காத்திருந்தது.. எல்லார் வீட்டு வாசலிலும் மனித மண்டை ஓடுகள் கிடந்தன.. கை, கால் எலும்புகள் சிதறி கிடந்த நிலையில், இந்த காரியத்தை செய்தது குடிகாரர்கள் என்று முதல்கட்டமாக இப்போது தெரியவந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தேவங்கர் தெரு உள்ளது.. இந்த தெருவில் நேற்று காலையில் தூங்கி எழுந்து வந்து வாசல் கதவை திறந்துள்ளனர் மக்கள்.. வீட்டு முன்பு மண்டை ஓடுகளாக கிடந்திருக்கின்றன.. எல்லாமே மனித மண்டை ஓடுகள்.. அத்துடன் கூடவே கொஞ்சம் மனித எலும்புகள் சிதறி கிடந்தன.

 human skull and bones left outside pazhani people home

எல்லா மண்டை ஓடுகளுக்கும் மஞ்சள், ரெட், கருப்பு கலர் பொடிகள் தூவப்பட்டு இருந்தது.. அந்த தெருவில் உள்ள எல்லார் வீட்டு வாசற்படியிலும் இந்த மண்டை ஓடுகளும் எலும்புகளும் கிடந்தன.. காலங்காத்தாலே இவைகளை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.. இந்த தெருவில் சில கடைகளும் உள்ளன.. அந்த கடைக்கு முன்பும் எலும்புகள் உள்ளது.

ஒரு ரேஷன் கடையும் இருக்கிறாம்.. அதற்கு முன்பும் மண்டை ஓடுகள் வைத்திருக்கிறார்கள்.. யார் இந்த வேலையை பார்த்தது என தெரியவில்லை.. அதனால் பட்டப்பகலிலேயே தெருவில் நடக்க மக்கள் பயந்தனர்.. யாராவது மந்திரவாதிகள் செய்வினை செய்து இருக்கலாம் என்று சொன்னார்கள்.. அல்லது குடிகாரர்கள் போதையில் இப்படி செய்திருக்கலாம் என்றும் சொன்னார்கள்.

இறுதியில், போலீசுக்கு இந்த விஷயம் போனது.. விரைந்து வந்த அவர்களும் இது சம்பந்தமாக விசாரித்தனர்.. இதில் முதல்கட்டமாக குடிகாரர்கள்தான் ராத்திரி நேரத்தில் இப்படி ஒரு காரியத்தை செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.. போதையில் இவ்வாறு செய்ததாகவும், ஆனால் அவர்களுக்கு இந்த மண்டை ஓடுகள், எலும்புகள் எங்கிருந்து கிடைத்தன, எங்கிருந்த கொண்டு வந்தார்கள் என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது.

அதனால் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சியையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.. ஆனால் யாருமே இன்னும் கைதாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+