இன்ஸ்டா கிராமத்துல வாடி வாழலாம்.. ஆசை காட்டி மோசம் செய்த ராஜ்குமார்! இப்போ நடுத் தெருவில் அகிலா!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் 6 மாதம் கல்யாணம் செய்யாமல் குடும்பம் நடத்தி ஏமாற்றப்பட்ட பெண் திண்டுக்கல் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த இளைஞர் இதேபோல் பல பெண்களை ஏமாற்றியுள்ளதாகவும் அந்த பெண் பரபரப்பு புகாரினை முன்வைத்துள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்ஸ்டாகிராமத்துல வாடி வாழலாம் என நம்பவைத்து, நடுத்தெருவில் விட்டுப் போன ராஜ்குமாரை தேடி வருகின்றனர் போலீசார்.

சென்னை பெருங்குளத்தை சேர்ந்த அகிலா. தனியார் அழகு கலை நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தோழிகளுடன் சென்னையில் வசித்து வந்துள்ளார். இதேபோல் திண்டுக்கல் நத்தம் புதூர் பகுதியை சேர்ந்த மருதப்புலி மகன் ராஜ்குமார் சென்னையில் வசித்து வந்துள்ளார்.

instagram dindigul crime

ராஜ்குமாருக்கும், அகிலாவுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது. இதனை அடுத்து அகிலாவும் ராஜ்குமாரும் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து சென்னையில் 6 மாத காலமாக தங்கி வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜ்குமார் அகிலாவுடன் இன்ஸ்டாகிராமில் பழகியது போல் பல பெண்களுடன் பல ஐடிகளை உருவாக்கி இன்ஸ்டாகிராமில் பெண்களுடன் பேசி வந்தது அகிலாவுக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து அகிலா ராஜகுமாரிடம் கேட்டபோது இருவருக்கிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை காரணமாக ராஜ்குமார் அகிலாவை அடித்து விட்டு திண்டுக்கல்லுக்கு வந்துள்ளார்.

இதனை அடுத்து அகிலாவும் அவரைத் தேடி கடந்த 9ம் தேதி திண்டுக்கல்லுக்கு வந்துள்ளார். ராஜ்குமார் வீட்டிற்கு செல்லும் போது அவரது தந்தை சில நபர்களுடன் தன்னை துரத்தியதாகவும், இதனால் 181 என்ற சமூக நலத்துறை எண்ணிற்கு கால் செய்ததன் மூலம் அவர்கள் அகிலாவை மீட்டு திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மையத்தில் தங்க வைத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை செய்யப்பட்டுள்ளது. இதில் அகிலவை திருமணம் செய்து கொள்ள முடியாது என ராஜ்குமார் தெரிவித்ததை அடுத்து அகிலா ராஜ்குமார் மீது திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் நேற்று 20.01.24 புகார் அளித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் புகாரை சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு அகிலா சென்றபோது சம்பவம் நடைபெற்ற சென்னை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து அகிலா நேற்று முன் தினம் மாலை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சமூக நலன் மற்றும் மகளிர் பிரிவு மையத்தில் இருந்து சாணார்பட்டியை சேர்ந்த பெண் காவலர் உதவியுடன் சென்னைக்கு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அகிலா கூறும்போது என்னைப்போல் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்று சம்பவம் வேறு பெண்களுக்கு நடைபெறக் கூடாது. ராஜ்குமார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

இதேபோல் சென்னையைச் சேர்ந்த சிவதுர்கா என்ற பெண் கடந்த மாதம் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்ததின் பேரில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மீது புகார் அளித்து புகாரின் பேரில் நவநீதகிருஷ்ணனை காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+