பழனியே குலுங்கப் போகுது..நாளை முதல் முத்தமிழ் முருகன் மாநாடு! ஒரு லட்சம் பேருக்கு உணவு.. கிஃப்ட் வேற
திண்டுக்கல்: பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட் 24, 25ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாநாட்டில் கலந்து கொள்ளும் 1 லட்சம் பேருக்கு உணவுகள் ஏற்பாடு மற்றும் வருகை தரும் 1 லட்சம் பேருக்கும் பஞ்சாமிர்தம் , குங்குமம் , விபூதி ,லேமினேசன் செய்யபட்ட முருகன் போட்டோ வழங்க பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வருகின்ற 24 மற்றும் 25ஆம் தேதி அருள்மிகு பழனி ஆண்டவர் கலை கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான கால்கோள் ஊன்றும் விழா கடந்த 3ஆம் தேதி துவங்கி பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியில் ஐந்து ஆய்வகங்கள், 1300 ஆய்வு கட்டுரைகள், இது தவிர 30க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும் 4 நிதிஅரசர்கள், 15 ஆதீனங்கள், 30 ஆன்மீக சொற்பொழிவாளர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டின் விழா மலர் மற்றும் ஆய்வு கட்டுரை மலர் என இரண்டு மலர்களாக வெளியிடப்படவுள்ளது. 3டி வடிவில் முருகனை அருகில் இருந்து தரிசனம் செய்யும் வகையில் 150 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யபடுகிறது. முருகன் பெருமை விளக்கும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் முருகன் புகழை சொல்லும் கும்மியாட்டம் , கந்த சஷ்டி கவசம் என காலை 8.30 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும் , பின்னர் 2 மணி முதல் இரவு 8 மணி வரை நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் மாநாட்டை முன்னிட்டு 8 இடங்களில் அலங்கார வரவேற்பு ,தலைவர்கள் மாநாட்டு வரும் போது 8000 பக்தர்கள் அமைந்து பார்வையிடும் வகையில் பந்தல்கள் அமைக்கப்பட உள்ளன. மாநாட்டு கண்காட்சிக்கு வந்து செல்பவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டும் என்பதால் சுகாதாரப் பணிகள் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவதற்காகவும் தூய்மை பணியாளர்கள், பிரத்தியேகமாக கூடிய மருத்துவ வாகனங்கள், தேவையான அளவு பேருந்துகளை இயக்கவும் , வருகின்ற நபர்களுக்கு குடிநீர் இயற்கை உபாதையில் கட்டமைப்புகள் மாற்றுத்திறனாளிகள் அரங்கத்திற்கு சிரமம் இல்லாமல் வந்து செல்லும் வழியில் நான்கு சக்கர நாற்காலிகள், இரண்டு நாள் மாநாட்டில் 30 ஆயிரம் பேர் சாப்பிட வசதியாக ஆங்காங்கே ஸ்டால்கள் மற்றும் உணவு வழங்கிடவும் பக்தர்கள் அமர்ந்து சாப்பிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டுக்கு வரும் பக்தர்களுக்கு வழிகாட்ட தன்னார்வலர்கள் மாணவ ,மாணவிகளை பயன்படுத்திக் கொள்ளவும் , கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என 450க்கும் மேற்பட்டவர்கள் இரண்டு நாட்கள் சீருடையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட் 24, 25ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாநாட்டில் கலந்து கொள்ளும் 1 லட்சம் பேருக்கு உணவுகள் ஏற்பாடு , மற்றும் வருகை்தரும் அனைவருக்கும் பஞ்சாமிர்தம் , குங்குமம் , விபூதி ,லேமினேசன் செய்யபட்ட முருகன் போட்டோ வழங்க பிரத்யேக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications