அடேங்கப்பா ஒரு முட்டையே 1000 ரூபாயாம்! மொட்டையடித்த ஈமு கோழி மோசடி! ஏலம் விடப்படும் சொத்துகள்!
திண்டுக்கல்: தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிர வைத்த மோசடிகளில் ஒன்று ஈமு கோழி மோசடி. ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் லட்சக்கணக்கில் வருமானம் வரும் எனக் கூறி பல்வேறு நிறுவனங்கள் முதலீட்டாளர்களை ஏமாற்றின. அப்படி மோசடியில் ஈடுபட்ட நிறுவனம் தான் ஜீவன் ஈமு கேர். இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் சொத்துக்களை ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பு ஈமு கோழி வளர்த்தால் பெரும் லாபம் ஈட்டலாம் என கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 150 கோடிக்கும் மேலாக மோசடி நடைபெற்றதாக புகார்கள் பதிவாகின.
ஈமு கோழியின் கறி ஒரு கிலோ 2000 ரூபாய், ஒரு முட்டை ஆயிரம் ரூபாய், இறகு மட்டுமே பல்லாயிரம் ரூபாய்க்கு போகும் என விளம்பரங்கள் செய்யப்பட்டது. மேலும் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 6 ஆயிரம் வட்டி வழங்கப்படும், ஈமு கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்தால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என விளம்பரங்கள் செய்யப்பட்டது.

இந்த விளம்பரத்தில் சில நடிகர்களும் நடித்து இருந்தனர். தொடர்ந்து ஏராளமானோர் சுசி ஈமு பார்ம்ஸ், ஜீவன் ஈமு கேர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை முதலீடு செய்தனர். ஆனால் முதலீடு செய்தவர்களுக்கு பணம் தராமல் ஏமாற்றியதாக பலரும் புகார் அளித்தனர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஈமு கோழிகள் கைவிடப்பட்டு உணவுக்கே அல்லாடின. கொத்து கொத்தாக செத்து மடியும் நிலையும் ஏற்பட்டது. அதே நேரத்தில் ஏலம் விடப்பட்ட ஈமு கோழிகளையும் வாங்கக் கூட ஆள் இல்லை. அந்த அளவுக்கு தமிழகத்தில் மிகப்பெரிய மோசடியாக ஈமு கோழி மோசடி இருந்தது .
அப்படி மோசடியில் ஈடுபட்ட ஒரு நிறுவனம் தான் ஜீவன் ஈமு கேர். இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக அதன் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் மோசடி பணத்தை திரும்பப் பெறும் வகையில் ஜீவன் ஈமு கேர் நிறுவனத்தின் சொத்துக்களை ஏலம் விடுவதாக அறிவித்திருக்கிறார் திண்டுக்கல் மாவட்ட வருவாய் ஆய்வாளர். வரும் 29ஆம் தேதி இதற்கான ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் நகரில் செயல்பட்டு வந்த ஜீவன் ஈமு கேர் இந்தியா (பி) லிட் என்ற நிதி நிறுவனத்திற்கு சொந்தமான வேடசந்துார் வட்டம், பாகாநத்தம் கிராமம் (புல எண் 1064/14 விஸ்தீரனம் 4.47 ஏக்கர் குறும மதிப்பு ரூ.8,96,950) புலங்களில் உள்ள நிலம், தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்புச் சட்டம் 1997 இன் கீழ் தகுதி பெற்ற அலுவலர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களால் 29.05.2025 அன்று முற்பகல் 11.00 மணியளவில் வேடசந்துார் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
இந்த சொத்துக்கள் மற்றும் ஏல நிபந்தனைகள் தொடர்பான விபரங்கள் திண்டுக்கல் மாவட்ட இணையதளத்தில் (www.dindigul.nic.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொது ஏலத்தில் எடுக்க விரும்புவோர், இதுதொடர்பான விபரங்களை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பழனி சார் ஆட்சியர் அலுவலகம், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். இந்த விபரங்கள் அந்தந்த அலுவலக விளம்பர பலகையிலும் ஒட்டப்பட்டுள்ளது. ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏலத்தில் விருப்பம் உள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். நிறுவனத்திற்கு சொந்தமான மேற்படி அசையா சொத்தினை நிலையில் உள்ள விதத்தில் உள்ளவாறே ஏலம் விடப்படும்" என கூறப்பட்டுள்ளது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications